செவ்வாய், 22 மே, 2012

அறுபடை வீடுகளில் முக்கியமான திருத்தலமாய்த் திகழ்வது பழனி. முருகனை நினைத்தால் பழனியை நினைக் காமல் இருக்க முடியாது. பாம்பன் சுவாமிகள் மாபெரும் முருக பக்தர். ஆனால் அவர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை பழனிக்குச் செல்லாமலே இருந்தார். அதன் பின்னணியில் முருகனின் கட்டளை இருந்தது. முருகன் ஏன் அப்படிக் கட்டளை இட்டான்? அந்த வரலாறு இதோ….
அப்பாவு என்பது பாம்பன் சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயர். திருமணமாகி இரு
குழந்தைகளுக்கும் தந்தையான பின் அவர் பற்பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். தொடர்ந்து கவிதைகளும் எழுதி வந்தார்.
“நான் பழனி செல்ல விரும்புகிறேன்’ என்று நண்பர் ஒருவரிடம் ஒருமுறை கூறினார்.
“அப்படியா’ என்று நண்பர் விசாரித்தபோது, “ஆமாம்; நான் பழனி செல்ல முருகப் பெருமான் கட்டளை கிடைத்துவிட்டது’ என்று ஒரு பொய்யைக் கூறினார். பொய் சொன்ன மறு கணமே நாக்கைக் கடித்துக் கொண்டார். ஏன் பொய் சொன்னோம் என்று மனம் வெதும்பி னார்.
நண்பர் விடைபெற்ற பின்னரும் அவருக்குப் பொய் சொன்னது பற்றிய மன உளைச்சல் இருந்தது. பொய் மாபெரும் பாவமல்லவா?
அதுவும் கடவுளை முன்னிட்டுப் பொய் சொல்லலாமா? அவர் சிந்தனையிலும் கவலை யிலும் ஆழ்ந்தார். அப்போது அவர்முன் கையில் வேலோடு ஜல் ஜல் எனச் சலங்கை குலுங்க நேரில் தோன்றினான் கந்தக் கடவுள்.
“உன்னை நான் பழனிக்கு வரச் சொன் னேனா? எப்போது வரச் சொன்னேன்? என்று வரச் சொன்னேன்? நீயாகப் பல தலங்களுக்குச் செல்கிறாய். அப்படி பழனிக்கும் வர விரும்புகிறாய்.
அவ்வளவுதானே? என்னவோ என்னிடம் உத்தரவு கேட்டுத்தான் எல்லாத் தலங்களுக்கும் செல்வது போல ஏன் ஒரு பொய்த் தோற் றத்தை உண்டு பண்ணினாய்? இத்தகைய போலிலிப் பெருமைகள் உனக்குத் தேவையா என்ன?’ என அதட்டினான் முருகன். குமரனின் தாமரைப் பூமுகத்தில் புன்முறுவலையே பார்த்தவர் பாம்பன் சுவாமிகள். அந்தத் திருமுகத்தில் கடும் கோபத்தைக் கண்டதும் கலங்கிப் போனார்.
முருகன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? பழனிக்கு வர வேண்டும் என்ற ஆசையால்தானே பொய் சொன்னார்? முருகன் கட்டளை கிடைத்து விட்டது என்று கூறினால் யாரும் அவர் பழனி யாத்திரையைத் தடுக்க மாட்டார்கள் என்பதால் தானே அப்படிச் சொல்ல நேர்ந்தது? இஷ்ட தெய்வம் நேரில் தோன்றி இப்படி அதட்டினால் என்ன செய்வான் ஓர் அடியவன்?
பழனிக்கு வந்து முருகன் அருளில் கரைய வேண்டும் என்ற ஆன்மிக லாபம் கருதியே பொய் சொன்னதாக சுவாமிகள் கண்ணீர் பெருகத் தெரிவித்தார்.
“ஆன்மிக லாபமெல்லாம் என்னால் ஆகாதோ? பொய்யுரைத்த நீ இனி என் கட்டளை கிடைக்கும் வரை பழனி வராதே!’ என்று அறிவுறுத்தினான் குமரன். பாம்பன் சுவாமி களின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. தன் பக்தன் கண்ணீரைப் பார்த்து முருகன் மனம் கசிந்தது. தான் அப்படிக் கட்டளையிட்டதற்கு என்ன காரணம் என முருகன் விவரித்தான்.
“கலிலிகாலம் விந்தையான காலம். என்மேல் பக்தி இல்லாதவர்களும் பக்தி உள்ளவர்கள் போல் நடிப்பார்கள். என்னைக் கண்டு விட்ட தாகவும் என்னுடன் பேசியதாகவும் பொய் யுரைப்பார்கள். தங்களையே கடவுள் என்று கூடச் சொல்லிலிக் கொள்வார்கள். தங்கள் புகைப் படத்தை பிரம்மாண்டமாய் வெளியிட்டுத் தங்களுக்குத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொண்டு மக்களிடமிருந்து பணத்தைக் கறந்து நிறைய சம்பாதிப்பார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவன் அல்ல நீ. உண்மையான துறவி நீ. உண்மைத் துறவியின் நாவிலிலிருந்து பொய் வரக்கூடாது! கலங்காதே. நான் எதுசெய்தாலும் உன் நன்மைக்குத் தான்.’
சொல்லிலிவிட்டு காட்சியிலிலிருந்து மறைந்துவிட்டான் கந்தன். மறு கட்டளை கிடைக்காததால் பாம் பன் சுவாமிகள் தம் வாழ்நாளில் பழனி செல்லவே இல்லை என்பது அவர் வாழ்வில் கிடைக்கும் விந்தையான தகவல்.
ஒருவேளை பழனி முருகனின் அம்சமேயான அவர் அங்கு சென்றால் மனம் மயங்கி, தாம் நிகழ்த்த வேண்டிய தொண்டுகளை மறந்து இறையருளின் ஜோதியில் கலந்துவிடக் கூடும் என்று முருகன் கருதியிருக்கலாம். தம் அடியவன் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிய வேண்டும் என்பது முருகனின் எண்ணமாக இருக்கலாம்.
பாம்பன் சுவாமிகள் சிறுவனாக இருக்கும் போதே அவரது பெருமையைச் சிலர் இனங் கண்டிருக்கிறார்கள். இலங்கைக்குப் படகேறிப் பயணம் போவதற்காக ராமேஸ்வரக் கரைக்கு வந்தார் ஒரு ஜோதிடர். பாம்பன் சுவாமிகளுக்கு அப்போது ஏழெட்டு வயதி ருக்கலாம். அப்போதைய அவர் பெயர் அப்பாவு. தன் வயதொத்த சிறுவர் களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் அவர்.
சிறுவர்களின் விளை யாட்டை ரசித்தவாறே இருந்த ஜோதிடர், அப்பாவு மட்டும் சிறந்த உடல் கட்டோடும் ஒளி வீசும் திருமுகத்தோடும் திகழ்வ தைக் கவனித்தார்.
“ஏ பையா. இங்கே வா’ என்று அழைத்தார். “நான் பையனல்ல. என் பெயர் அப்பாவு!’ சிரித்தவாறே கூறிக்கொண்டு அவர் அருகில் வந்தான் சிறுவன்.
“எங்கே உன் கையை நீட்டு!’
“நான் யாரிடமும் கைநீட்ட மாட்டேன்!’
“அட. நான் ரேகை சாஸ்திரி அப்பா. என் னிடம் கை நீட்டுவதால் உன் சுயமரியாதைக்கு எந்த பங்கமும் வந்துவிடாது!’
அப்பாவு சிரித்துக்கொண்டே கைநீட்டினான். அவன் உள்ளங்கையின் ரேகைகளை ஆராய்ந்தார் ஜோதிடர். அந்தச் சிறுவனின் கையில் அபூர்வமான கபாலிலி முக்கோண ரேகை காணப்பட்டது. ஆன்மிகத்தின் பெருநிலைக்கு அடையாளமல்லவா அந்த ரேகை! எதிர் காலத்தில் இவன் சொல்வதெல்லாம் உலகில் மிகுந்த செல்வாக்குடையதாக அல்லவா ஆகப் போகிறது! முற்றும் துறந்த முனிவர்களுக்கல் லவா இந்த ரேகை தென்படும்!
“அன்பனே அப்பாவு! நீ மாபெரும் ஞானி யாக மாறுவாய். இறைவனின் பரிபூரண அருள் உனக்கு உள்ளது. இளம் வயதிலேயே இறைச் சிந்தனையில் ஈடுபடு!’
அவன் கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ஜோதிடர். அவர் வாக்கு பின்னாளில் பலிலிக்கத்தான் செய்தது.
சேதுமாதவக்கோவிலிலில் பணிபுரிந்து வந்தார் இன்னொரு முருக பக்தர். சேதுமாதவ ஐயர் என்பது அவர் பெயர். அவர் சிறுவன் அப்பாவு அவ்வப்போது எழுதிய பாடல்களைப் படித்துப் பார்த்தார். வரகவியாக இருப்பான் போல் இருக் கிறதே என்று வியந்தார். ஒரு விஜயதசமி நன்னா ளில் அப்பாவுக்கு ஷடாட் சர மந்திரத்தை உபதேசித் தார். அன்று தொட்டு சரவணபவ என்னும் மந்திரத்தையே ஓதியவாறு வாழலானார் அப்பாவு.
அவர் முகத்தில் தவப் பொலிலிவு பெருகத் தொடங் கியது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் என்ற இடத்தில் வாழ்ந்ததால் அவரைப் பாம்பன் சுவாமி கள் என அழைத்தார்கள் பலர்.
வாலிலிப வயதையடைந்த அப்பாவுவுக்குத் திருமணம் முடிக்கப் பெற்றோர் நினைத் தார்கள். யார் சொன்னால் அப்பாவு கேட்பார் என்று பெற்றோருக்குத் தெரியாதா என்ன? சேதுமாதவ ஐயரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். சேதுமாதவ ஐயரும் வற்புறுத்தவே திருமணத்திற்கு அரைமனதோடு உடன்பட்டார் அப்பாவு.
தந்தையின் விருப்பம் நிறைவேறியது.
அப்பாவுவுக்கு இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. தந்தை மனநிறைவோடு காலமானார். அப்பாவுவுக்கு வாழ்க்கை சலிலிக்கத் தொடங்கியது. அதன்பின்னர்தான் அவர் மயானத்தில் தவம் நிகழ்த்தித் துறவு பூண்டார்.
பாம்பன் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் நேரிலும் பல்வேறு வடிவங்களிலும் தோன்றி அருள் புரிந்த சம்பவங்கள் ஏராளம். அவர் அப்பாவுப் பிள்ளையாய் இல்லற வாழ்வை மேற்கொண்டபோது அவரது மனைவி காளிமுத்தம்மாள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். முருகையா பிள்ளையும் குமரகுருதாச பிள்ளையும் ஆண்மக்கள். சிவஞானாம்பாள் புதல்வி.
சிவஞானாம்பாள் கைக்குழந்தையாக இருந்த போதுதான் குழந்தைக்கு ஒரு வியாதி வந்தது. என்ன வியாதி என்று யாருக்கும் தெரியவில்லை. நள்ளிர வில் பாலும் குடிக்காமல் குழந்தை வீல் வில் என்று ஓயாமல் கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தது. தாய் காளிமுத்தம்மாள் குழந்தை அழுது அழுதே உயிரை விட்டுவிடுமோ என்று அஞ்சினாள்.
ஆனால் குழந்தையின் தந்தை முகத்தில் ஒரு சின் னச் சலனமாவது இருக்க வேண்டுமே! அமைதியே வடிவாக அமர்ந்திருந்தார் அப்பாவு. எது நடக்க வேண்டுமோ அது முருகன் திருவுள்ளப்படி நடக்கும் என எண்ணினார்.
திடீரென்று டொக் டொக் என யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அந்த நள்ளிரவில் யார் கதவைத் தட்டுவது? காளி முத்தம்மாள் நடுக்கத்தோடு கதவைத் திறந்தாள்.
வந்தவர் உடலெல்லாம் திருநீறு பூசிய ஒரு சிவயோகி. அவர் கையில் ஒரு பிடி திருநீறு. “குழந்தையைக் கொண்டுவா’ என்ற அவர் திருநீற்றைக் குழந்தையின் மேனி முழுதும்அள்ளியள்ளிப் பூசினார். “எமனைத் தடுக்கும் கவசம் அம்மா இந்தத் திருநீறு! இனி கவலைப் படாதே!’ என்றார்.
சிறிது பால் அருந்துகிறீர்களா சுவாமி எனக் கேட்டவாறே பால் கொண்டுவர உள்ளே போனாள் காளிமுத்தம்மாள். அவள் ஒரு குவளைப் பாலோடு வந்தபோது குழந்தைதான் பால்வடியும் முகத்தோடு அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. யோகியைக் காணவில்லை. யோகி எங்கே என்று கணவரைக் கேட்கத் திரும்பினாள். ஆனால் கணவரோ விழிமூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
குழந்தையை மட்டு மல்ல; தம் அடியவரான அப்பாவுவையும் உரிய நேரங்களில் வந்து காத்து ரட்சிக்க முருகன் தயங்கிய தில்லை. ஆனால் அதன் பொருட்டு முருகப் பெரு மான் மேற்கொள்ளும் வடிவங்கள்தான் விதவித மாக இருக்கும்.
ஒருமுறை தூத்துக்குடி யில் ஒரு வேலை நிமித்தம் அப்பாவு போயிருந்தார். இருமல் அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு கணமும் விடாது துரத்திய வறட்டு இருமல்.
புது ஊரில் மருத்து வரை எங்கே போய்த் தேடுவது? “மருத்துவர்க் கெல்லாம் மருத்துவனான குமரா, நீயே சரணம்’ என்று கந்தக் கடவுளை சிந்தித்தவாறு இருமிக் கொண்டே அமர்ந்திருந்தார்.
அப்போது மயில் வாகனத்தில் கோட்டும் சூட்டுமாகப் புறப்பட்டான் குமரன்! முன்வினை நோயையெல்லாம் தீர்க்கும் மருத்துவன்தானே அவன். ஆங்கிலேய மருத்துவரைப்போல வடிவம் மாறுவது அவனுக்கு சிரமமா என்ன?
கருடனில் ஏறிப் பறந்து அடியவர் வினை தீர்க்கும் மாமா திருமால், “மயில் மேல் பறக்கும் தம் மருமகனின் புதுக் கோலம் எத்தனை அழகாக இருக்கிறது பார்’ என்று தன் மனைவி லட்சுமிக்குக் காண்பித்து மகிழ்ந்தார்.
அழகே வடிவான குமரனுக்கு எந்த வேடம் போட்டாலும் அழகாய்த்தான் இருக்கிறது என்று தாய் பார்வதி குமரனுக்குக் கண்ணேறு கழித்தாள். குமரன் கை வேல், ஸ்டெதாஸ்கோப் பாய் புதுவடிவம் கொண்டு கழுத்தில் புரண் டது. தன் மகனின் கழுத்தில் தன் கழுத்துப் பாம்புக்குப் போட்டியாக இதென்ன என வியந்து பார்த்தார் பரமசிவன். வள்ளியும் தெய்வானையும் வெள்ளை உடை தரித்து இரண்டு செவிலியர்களாக கணவருடன் புறப்பட்டார்கள்.
அப்பாவு தங்கியிருந்த இல்லத்தின் கதவை தடதடவென்று தட்டினான் குமரன். செவிலியர்களோடு வீடுதேடி வந்திருக்கும் முருக மருத்துவரைக் கதவைத் திறந்து வரவேற்றார் அப்பாவு. தன் காலில் சரண்புகுந்து பக்தி செய்யும் அடியவனின் கையில் நாடி பார்த்தான் கந்தன். தன்னை நாடியவருக்கு நாடி பார்த்துச் சரிசெய்வது அவன் பொறுப்புதானே?
“நான் இந்த ஊர் மருத்துவர் அப்பா. இந்த மாத்திரையை உடனடியாக சாப்பிட்டுத் தண்ணீரைக் குடி!’ என்று சொல்லிலி, மருத்துவ வருகைக்கான கட்டணமும் பெற்றுக் கொள்ளா மல் ஒருநொடியில் செவிலிலியர்களோடு மறைந் தான்.
மாத்திரையை வாயில் போட்டார் அப்பாவு. ஒரு மாத்திரை உள்ளே போன அரை மாத்திரை நேரத்தில் இருமல் போன இடம் தெரியாமல் போய்விட்டது. இளம் வயதில் பாலன் தேவரா யன் அருளிய கந்த சஷ்டி கவசத்தை முப்பத்தாறு முறை நாள்தோறும் ஓதியவர் அல்லவா அவர்! “எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கருள்வாய்!’ என்று அவர் உள்ளம் உருகி வேண்டிய வேண்டுதல்கள் வீண்போகுமா என்ன?
அவர் எப்போது நோய்வாய்ப் பட்டாலும் அவருக்கு மருத்துவம் பார்த்தது முருகன்தான். காதில் ஒரு குத்தல் வந்து அவர் வருந்திய துண்டு. தொடையில் கட்டிகள் தோன்றிய துண்டு. அம்மை நோய் பாடாய்ப் படுத்தியதும் உண்டு. முருகன் என்ற மருத்துவன் இருக்க அவருக்கென்ன கவலை?
நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனை வேண்டி நாராயணீயம் பாடி தன் வாதநோயைக் குணப்படுத்திக் கொண்ட மாதிரி, கந்தன்மேல் தமிழ்ப் பாட்டுப் பாடித் தன் நோயையெல்லாம் போக்கிக் கொண்டார் பாம்பன் சுவாமிகள்.
அப்படி அவர் நோயுற்ற வேளைகளில் பாடியவை தான் சண்முக கவசம், குமாரஸ்தவம் ஆகிய தோத்திரப் பாடல்கள்.
இன்றும் பயில்வாருக்கு நோய் தீர்க்கும்
அருமருந்தாக அந்த நூல்கள் பயன்பட்டு வருகின்றன. நோயுற்றவர்கள் சண்முக கவசம், குமாரஸ்தவம் ஆகிய நூல்களை பக்தியோடு பாராயணம் செய்தால் இன்றும்கூட தங்கள் நோய்க்கடுமை மெல்ல மெல்லக் குறைந்து பின் நோயே முற்றிலுமாக மறைந்து போகும் அதிசயத்தைக் காணலாம்.
அப்பாவு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நேர்ந்த காலங்களும் உண்டு. அவருக்கு முருக னைத் தவிர வேறு எந்த நீதிபதியைத் தெரியும்? “கந்தா சரணம் கடம்பா சரணம்!’ என்றவாறு நீதிமன்றம் செல்வார்.
மகான் ஸ்ரீஅரவிந்தருக்கு நீதிமன்றத்தில் எல்லாருமே கையில் குழலோடும் தலையில் மயில்பீலிலியோடும் கண்ணனாய்க் காட்சி தந்தார் களே! அதுபோல் பாம்பன் சுவாமிகளுக்கும் ஒரு காட்சி கிட்டியது. அந்தக் காட்சி….
(தொடரும்)
யோன் மேய மைவரை உலகமும்’ என்னும் தொல்காப்பியர் கூற்றுப்படி, குன்றுகளில் கோவில் கொண்டு பக்தர் களின் குறைகளைக் களைந்து வருபவன் முருகன். அவ்வாறு அவன் கோவில் கொண்ட  அற்புத தலங்களிலொன்று நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில், கேரள எல்லையை ஒட்டியுள்ள இந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியானது- ஐயப்ப சுவாமி வரலாற்றோடு தொடர்புடைய பந்தள மன்னரின் வம்சாவழியினரின் ஆட்சிக்குட் பட்டதாக இருந்தது. அப்போது இம்மலை உச்சியில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. அந்த வேலுக்கு பூவன் பட்டர் என்ற அர்ச்சகர் பூஜைகளைச் செய்து வந்தார்.
ஒருநாள் பகல் நேரத்தில், அர்ச்சகர் பூஜைகளை முடித்துவிட்டு அருகிலிருந்த புளியமர நிழலில் சற்று கண்ணயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், “நான் இங்கே கோவில் கொள்ள விரும்புகிறேன். சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில்- மூங்கில் புதர்களுக்கிடையே நான் இருக்கிறேன். அங்கே எறும்புகள் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கும். அந்த இடத்தை அடையாளம் கண்டு, அங்கே தோண்டினால் எனது சிலை கிடைக் கும். அதைக் கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்டுக் கண்விழித்த அர்ச்சகர், கனவை எண்ணி அதிசயித்து, விரைந்து சென்று மன்னரிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட மன்னர், “”பகல் கனவு கண்டுவிட்டு, அதை என்னிடமும் வந்து சொல்கிறீரே… பகல் கனவு எப்படி பலிக்கும் பட்டரே?” என்று கேட்டார்.
“”நான் கண்டது பகல் கனவு என்றாலும், முருகனை நம்புவோரின் கனவு எந்த நேரத்திலும் பலிக்கும்” என்றார் அர்ச்சகர்.
அதை ஏற்றுக்கொண்ட மன்னர், தனது பரிவாரங் களோடு அர்ச்சகர் குறிப்பிட்ட இடத்தைச் சென்று பார்த்தார். அங்கே ஓரிடத்தில் எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்துகொண்டிருந்தன. அந்த இடத்தை பணியாளர்களைக் கொண்டு தோண்டச் செய்தபோது, அடிவயிற்றில் பெரிய மச்சத்துடன், வேல் தாங்கிய பாலமுருகன் விக்ரகம் வெளிப்பட்டது. அதை முறைப்படி கொண்டு சென்று மலைமீது பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்தனர்.
இவ்வாலயத்தை பலரும் அறிந்து வழிபடும் தலமாக மாற்றியவர் பண்பொழி கிராமத்துக்கு அருகிலுள்ள அச்சன்புதூரைச் சேர்ந்த சிவகாமி அம்மையார். அந்த அம்மையாருக்கு மகப்பேறில்லாததால் மனம் வருந்தி, இவ்வாலயத்துக்கு கல் மண்டபம் ஒன்றை அமைத்துத் தருவதாக வேண்டிக் கொண்டவர். அதன்படி பணிகளையும் மேற்கொண்டார்.
கல் தூண்களையும் உத்தரங்களையும் மலைமீது இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. பனை நாரினாலான கயிறுகளைக் கொண்டு கற்களை மேலிழுக்கும்போது, சிலசமயம் கயிறு அறுந்து கல் கீழ்நோக்கிச் சரியுமாம். அப்போது சிவகாமி அம்மையார் தலையால் முட்டுக்கொடுத்து கல்லைத் தாங்கிப் பிடிப்பா ராம். இந்த வல்லமை முருகன் அருளால் அவருக்கு கிடைத்தது என்கிறார்கள். இப்படி பலவாறு முயன்று கல் மண்டபத்தைக் கட்டி முடித்தார் சிவகாமி அம்மையார்.
இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு மகப்பேறு கிட்டவில்லை. அப்போது அவர் கட்டிய கல் மண்டபத் தில் ஒரு மகான் வந்து தங்கினார். அவரிடம் தன் மனக்குறையைக் கூறினார் சிவகாமி அம்மையார். அதற்கு அந்த மகான், “”இந்த முருகனே உன் பிள்ளை. அவனையே மகனாக ஏற்றுக்கொள். இது நீ செய்த பாக்கியம்” என்றார்.
உண்மையை உணர்ந்த அம்மையார், கிராமத்திலிருந்த தன் சொத்துகள் அனைத்தையும் ஆலயத்துக்கு எழுதி வைத்தார். புளியரை கிராமத் தில் கோவிலுக்குச் சொந்தமான சொத்துகளை சிலர் ஆக்ரமித்திருந்தனர். திருவனந்தபுரம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங் களைச் சான்றாகக் காட்டி, அவற்றை மீண்டும் கோவிலுக்கே உரிமைப்படுத்தினார். அதற்கான நகல் படிவம் இப்போதும் உள்ளது. முருகனுக்கே தொண்டு செய்து துறவு வாழ்க்கை வாழ்ந்ததால், அவ்வம்மையார் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார். ஆலயத்தில் அவரது சிற்பத்தைக் காணலாம்.
திருமலை சுமார் 500 அடி உயரம் கொண்டது. மேலே செல்ல 626 படிகள் உள்ளன. மலைப் பாதையின் துவக்கத்திலுள்ள வல்லப விநாய கரை வணங்கி, அருகிலுள்ள பாத மண்டபத்தைத் தரிசித்துவிட்டு மலையேற வேண்டும். வழியில் நடுவட்ட விநாயகர் சந்நிதி, இடும் பன் சந்நிதிகள் உள்ளன. அங்கே வணங்கிவிட்டு மேலே சென்றால்  உச்சிப் பிள்ளையார் சந்நிதியைக் காணலாம். இந்த சந்நிதிக்குப் பதினாறு படிகள் உள்ளன. அவற்றில் ஏறிச்சென்று விநாயகரைத் தரிசித்தால் பதினாறு செல்வங் களும் கிட்டும் என்பர். மலைமீது திருமலைக் காளி சந்நிதியும் உள்ளது.
மலைமீதுள்ள தீர்த்தக்குளம் அஷ்டபத்மக் குளம் என்று அழைக்கப்பட்டு வந்தது. தற் போது பூஞ்சுனை என்கிறார்கள். முற்காலத்தில் இந்தக் குளத்தில்- இலக்கியங்களில் வர்ணிக் கப்படும் குவளை மலர் பூக்குமாம். ஒரு நாளுக்கு ஒரு மலர்தான் பூக்குமாம். இந்த மலரைக் கொண்டு சப்தகன்னியர் முருகனை வழிபட்டனர். இதன் நினைவாக குளக்கரையில் சப்தகன்னியர் விக்ரகங்கள் உள்ளன. பொதுவாக சிவாலயங் களில் காணப்படும் சப்தகன்னியர் இவ்வாலயத் தில் அமைந்துள்ளது சிறப்பு. பார்வதிதேவியின் ஏழு சக்திகளே சப்தகன்னியர்.
கருவறையிலுள்ள முருகனின் திருமுகத்தில், மூக்குப்பகுதியில் சிறு பின்னம் இருக்கிறது. நிலத்திலிருந்து தோண்டி எடுக்கும்போது ஏற்பட்ட பின்னம் இது. அதுவும்கூட முருகனின் திருமுகத்துக்கு அழகையே சேர்க்கிறது. இதன் காரணமாக இந்த முருகனை “மூக்கன்’ என்றும் செல்லமாக அழைக்கின்றனர். நெல்லை மாவட்ட கிராமப் புறங்களில் இந்த முருகனின் நினைவாகவே மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறார்கள்.
சிலருக்குப் பிறக்கும் குழந்தை கள் அடுத்தடுத்து இறந்தால், அடுத்து பிறக்கும் பிள்ளைக்கு மூக்கு குத்தி மூக்கன் என்று பெயரிடுவதாக வேண்டிக்கொள் வார்கள். அதன்பின் பிறக்கும் பிள்ளை நீண்டகாலம் வாழும் என் பது நம்பிக்கை. அப்படிப் பிறக்கும் ஆண்பிள்ளைகளுக்கு மூக்கு குத்தியிருப்பார் கள். (தற்போது மூக்கு குத்தும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.)
இத்தல முருகன் பாலாபிஷேகப் பிரியன் என்பதால், பக்தர்கள் பால்குடம், பால் காவடி என நேர்த்திக்கடன் செலுத்தி அருள்பெறுகின்றனர்.
முற்காலத்தில் விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நாட்களில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகள் வளருமாம். செல்வ விருத்திக்காக திருமலைச் செடியின் வேரையும், தனாகர்ஷண யந்திரத்தை யும் இணைத்து பூஜை செய்திருக்கிறார்கள். தற்போது இந்த மூலிகைகள் இல்லாவிட்டாலும், இந்த ஆலயத்துக்கு வந்து சென்றாலே வாழ்க்கை யில் ஒரு திருப்பம் ஏற்படும் என்கிறார்கள்.
குறிப்பாக விசாக நாள் இங்கு சிறப்பானது என்கிறார்கள். “வி’ என்றால் மேலான என்றும்; “சாகம்’ என்றால் ஜோதி என்றும் பொருள். விமல சாகம், விபவ சாகம், விபுல சாகம் என்னும் மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது விசாக நட்சத்திரம். இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது இந்தத் தலம் என்று சித்தர்கள் கூறியுள் ளனர். செவ்வாய் தோஷப் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
இங்குள்ள பைரவருக்கு வடைமாலை சாற்றி மனமுருக வேண்டிக் கொண் டால் பிணக்குகள் அனைத் தும் தீர்ந்து சுபிட்சம் நிலவும் என்கிறார்கள்.
இப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்வது சிறப்பானது.
முதியோர், உடல்நலம் குன்றியோர் போன்றவர்கள் மலையேறிச் செல்வது சிரமம் என்பதால், அவர்களும் முருகனருள் பெறும் பொருட்டு நான்கரை கோடி ரூபாய் செலவில்- வாகனங்கள் செல்லும் வண்ணம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சித்திரை முதல் நாள் படித் திரு விழா,  வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகை தெப்பம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராள மான பக்தர்கள் திரள்கின்றனர். மாத கார்த்திகையும் இங்கு சிறப்பு.
“”இதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நிச்சயமானால், இந்த பாலமுருகனுக்கு பால்குடம் எடுத்த பின்னரே திருமணத்தை நடத்துகின்றனர். இது மணவாழ்க்கையில் வளம் சேர்க்கும். திருமணத் தடை விலக வும் இங்கு நேர்ந்துகொண்டு பலன் பெறுபவர் பலர்!” என்கிறார் முத்து ஓதுவார் சுவாமிகள்.
வந்தவரையெல்லாம் வாழ்விப்பவன் கந்தன் என்பதற்கு இவ்வாலயமும் ஓர் எடுத்துக்காட்டு!
நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பண்பொழி கிராமம். இந்த கிராமத்திற்கு மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது திருமலை.
Click Here

மறதி- என்பது பலமா, பலவீனமா? மறதி பலமாவ தும் உண்டு; பலவீனமாவதும் உண்டு. புறவுலகத்தை மறந்து தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தேடுவதில் மறதியே பலம். ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாக வும் அமைந்துவிடுகிறது.
“நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.’
“எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள்’ என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள்.
ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும். கடுமையான போர்க்களத்தில் ஒரு காட்சி.
அரக்கன் சூரபத்மனின் வீரமகேந்திர புரம். போர்க்களத்தில் நிற்கிறான் சூரன். சுற்றிலும் ஆயிரம் ஆயிரம் வெள்ளம் அசுரர் சேனைகள். எதிரே லட்சத்து ஒன்பது வீரர்களுடன் தேவசேனா பதியாக பாலமுருகன் நிற்கி றான். அவனது அழகுத் திருமுகம் காண்கிறான் சூரன். பாலனென்று பரிகாசம் செய்தவனிடம் பாசம் பொங்குகிறது. முகத்தைப் பார்த்தவன் அந்த அழகில் மயங்கி அப்படியே கீழே பார்க்கிறான். இரு செம்மலர்த் திருவடிகள். அந்தத் திருவடிகளில் உள்ள சிலம்புகளில் ஓங்கார ஒலி கேட்கிறது.
அப்படியே நிமிர்ந்து ஆறு திருமுகங்களின் பேரழகைக் காண்கிறான்.
“ஆஹா, என்ன தெய்வீகக் களை!’ என்று வியக்கிறான். கணநேரம் தன்னை மறந்து வணங்குவதற்கு கைகளைத் தூக்கு  கிறான். அவ்வளவுதான்! அடுத்த கணம், “சீ, இச்சிறு பாலனுடனா நான் போரிடுவது?’ என்ற ஆணவம் தலை உச்சிக்கு ஏறிவிட்டது. “”ஏ, சிறுவனே! நான் கையில் ஆயுதம் எடுக்குமுன் ஓடிவிடு!” என்று உறுமுகிறான்.
அருகேயிருந்த தம்பி சிங்க முகன் மெதுவாகக் கூறுகிறான்: “”அண்ணா, அது சிறுபாலன் அல்ல;  சிவபாலன். அவனை எதிர்ப்பது சிவனையே எதிர்ப்பதாகும்.”
“”ஏய் சிங்கமுகா, என்ன பிதற்றுகிறாய்? சிவனாம் பாலனாம். சிவனும் சக்தியும் எப்பொழுதடா கூடிக்குலவினார்கள்? குழந்தை பெற்றார்கள்? என்னிடமே புதுக்கதை கூறுகி றாயா?”
“”மன்னிக்க வேண்டும் அண்ணா. புதுக்கதை இல்லை; பழங்கதைதான். நாம் சிவனாரிடம் வரம் பெற்றபோது அவர் சொன்னதை மறந்து விட்டீர்கள் அண்ணா.”
“சிங்கமுகா, சூரியப்பகைஞனான எனது மகன் பானுகோபன் இறந்ததும் உனக்கும் பயம் வந்துவிட்டது!  அன்று சொன்னதை நான் ஒன்றும் மறக்கவில்லை. சிவனார்தான்
எனக்கு “யாவராலும் வெலப்படாய்’ என்று வரம் தந்திருக்கிறார்.”
“”நீங்கள் சொன்னது சிவன் தந்த வரத்தின் பிற்பகுதி. முற்பகுதியில் அவர் சொன் னது “எமது சக்தி ஒன்றின் அல்லால் யாவராலும் வெலப்படாய்’ என்பதுதான்.”
“”நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”
“”எமது சக்தி என்று சிவனார் அன்று சொன்னதை நான் மறக்க வில்லை. நீங்கள் மறந்துவிட்டீர்கள். சிவனது சக்தியாக- சிவனிடமிருந்து மட்டுமே தோன்றியவன்தான் இந்த சிவபாலன். நீங்கள் எண்ணியிருப்பதுபோல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவனல்ல! முழுக்க முழுக்க ஓர் ஆணின் சக்தியில் மட்டுமே தோன்றிய ஆண் மகன்! எனவே அவர் அன்று சொன்ன “எமது சக்தி’ என்பது இச்சிறு பாலனே.”
அப்போதும் அதன் உண்மையை சூரன் உணரவில்லை. “”எவரானாலும் சரி; இதற்கெல் லாம் அஞ்சி நான் தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்க மாட்டேன். முன்வைத்த காலைப் பின்வைப்பவன் இந்த சூரனல்ல. சிங்கமுகா, அந்த சிறுவனை நீயே தொழுதுகொண்டிரு!” என்றான்.
இவ்வாறு சூரபத்மன் வாங்கிய வரத்தை மறந் தது இயல்புதான். அந்த மறதிக்குக் காரண மாயிருந்தது மனதில் குடிகொண்டுவிட்ட ஆணவம்! எனவேதான் கருணை வள்ளலாகிய முருகனும் சூரனை அழிக்காமல் அவனது ஆணவத்தை மட்டுமே அழித்தான்.
பொதுவாக அசுரர்கள் கடுந்தவம் புரிவதில் வல்லவர்கள். அதன்பின் தந்திரமாக சாகாவரம் கேட்பதும் அவர்களது வழக்கம். வரம் கொடுப்பதில் எளியவர்கள் சிவனும் பிரம்மனும். இவர்கள் கேட்டபடி வரத்தைக் கொடுத்து விடுவர். பின்னர் அசுரர்கள் ஆணவத்தில் அழிவுகளைச் செய்யும்போது இவர்களாகவோ அல்லது சக்திதேவியின் துணைகொண்டோ அல்லது திருமாலின் துணையினாலோ அந்த அரக்கர்களை அழிப்பதும் புராணங்கள் காட்டும் உண்மை.
இவர்கள் கொடுக்கும் வரத்தில் எங்காவது சிறு விஷயம் அசுரர்களின் அழிவுக்கு ஆதார மாய் அமைந்துவிடும். சூரன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவன் வரம் வாங்கும் பொழுது, “தாங்கள் அன்னை சக்திதேவியுடன் கூடாமல் பிறக்கும் ஒரு பிள்ளையால்தான் எனக்கு மரணம் வரவேண்டும்’ என்று சாமர்த் தியமாகக் கேட்டான். ஆண்- பெண் சேர்க்கை இன்றி பிள்ளை பிறக்காது  என்ற அவன் எண் ணம் தவறாகிப் போனது. இரணியன் பெற்ற வரமும் இப்படித்தான் அமைந்துவிட்டது.
இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லா னாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.
இராவணன் கேட்கும் முன்னாலேயே, “”முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று- எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும்” என்றார்.
இந்த வரத்தை இராவணன் எப்படி- எப்பொழுது மறந்தான்?
சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத் தில் சிறை வைத்துவிட்டான். அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான்.
வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது. தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது.
“”சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள் ளது? வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே?” என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி.
இராவணன், “”அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி” என்றான்.
“”என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா?” என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.
இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். “”ஆம் தேவி. இப்பொழுதுதான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது.
அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.”
“”அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா?”
“”அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன் பட்டது. வேறெதுவும் இல்லை.”
“”சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணிதான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தைமறந்துவிட்டீர்களே சுவாமி!”
“”ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.”
ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள்.
இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர்.
“காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன்
நாமம்கெடக் கெடும் நோய்.’
சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று கோஷமிடும் ஒலி விண்ணை பிளக்கும்.
அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான்.
சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான்.
வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு. சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது.
உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் “வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர். கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானை தாங்கி மகிழ்வோம்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது. முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் தொடங்கினர்.
ஆறு நாட்கள் நடந்த அந்த யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
12 நாள் விழா…….
முருக ஸ்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். சில ஸ்தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்ந்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறு நாட்களில் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும்.
சஷ்டி யாகம்……..
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும்.
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். சம்ஹாரம் முடிந்த பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புகிறார்
மும்மூர்த்தி முருகன்…..
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.
இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.
மறுநாள் (8-ம் நாள்)அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது.
கண்ணாடிக்கு அபிஷேகம்…..
ஜெயந்திரநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர்.
சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்……..
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள்.
மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.
அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சி படுத்துகின்றனர்.
குரு பெயர்ச்சி……
திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, சண்முகர் சன்னதி எதிரே உள்ள பீடத்தில் வைத்து குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை கூறினார். எனவே இத்தலம் குருதலம் என்கிறார்கள். பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம்.
அஷ்ட நாகங்கள் மற்றும் அஷ்ட யானைகள், மேதா மலை என மூன்று ஆசனத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், 4 கிளிகள் வடிவில் இருக்கின்றன. இவர் அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் ஞானஸ்கந்த மூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.
வழக்கமாக இடது கையில் அக்னியும், வலது கையில் உடுக்கையும் வைத்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு வலது கையில் மழுவும், இடக்கையில் மானும் வைத்தபடி காட்சி தருகிறார். நவம்பர் 21-ல் நடக்கும் குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், நன்மை நடக்கும்.
இரண்டு வடிவங்களில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு வந்த முருகன், சுப்பிரமணியாக நான்கு கரங்களுடன் மூலஸ்தானத்தில் அருளுகிறார். இவர் சிவனை வணங்கியபடி, தவக்கோலத்தில் உள்ளார். தவிர சண்முகர், பிரதான உற்சவமூர்த்தியாக தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.
இவருக்கு மூலவருக்குரிய மரியாதை அனைத்தும் செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இவரை சுற்றிவர பிரகாரம் இருக்கிறது. ஆனால் மூலவரின் தவம் கலைந்து விடக்கூடாது என்பதால் சுற்றி வருவது இல்லை.
அன்று பாட வேண்டிய பாடல்………..
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஆணவம், அகங்காரம் அதிகமானால் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான்.
இரண்ய கசிபுவின் ஆணவத்தை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார்.
அகங்காரம், காமவெறி கொண்ட இராவ ணேஸ்வரனை மகாவிஷ்ணு மனித அவதார மாக- ராமனாக உருக்கொண்டு அழித்தார்.
சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக- சுப்ரமண்யனாக உதித்து அழித்தார்.
மற்ற அசுரர்கள் அழிவை வதம் என்கிறோம்; சூரபத்ம அழிவை சம் ஹாரம் என்கிறோம். என்ன வேறுபாடு? மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க, அதன் ஒரு பாதி மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது. மறுபாதி சேவலாகி, அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான். அவர்கள் ஒப்பந்தமும்
அவ்வாறே. இருவரும் மற்றவரை ஏந்த வேண்டும். இந்த மாதிரியான வினோதம் முருகப் பெருமானுக்கு மட்டுமே.
கஜமுகாசுரனை வென்ற கணபதிக்கு அசுரன் எலியாகி வாகனமானான்; ஆனால் அவனை கணபதி ஏந்தவில்லை.
சுப்ரமண்யன் உதித்தது வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று. விசாக நட்சத்திரத்தில் தோன்றிய மற்ற இருவர்- கணபதியும் ராதாதேவியும். ராதை- கண்ணன் மணமும்
அந்த நாளில்தான் நடந்தது.
சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூர் என்பதால், கந்தனின் அவதார தின வைகாசி விசாகப் பெருவிழாவும் திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கிறது. மற்ற எல்லா இந்துக் கோவில்களிலும் இவ்விழா விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன.
வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான்.
கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
கங்கை ஏந்தியதால் காங்கேயன்.
சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண   பவன்.
கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.
ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.
தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்-
அதனால் முருகன்.
விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன். இதுவும் ஒரு சிறப்பு.
கந்தனின் அவதார சமயம்… சிவ- பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே! பாரதம் இவ்வாறு கூறுகிறது:
சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.
பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.
அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.
சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதி யிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம்.
முருகு என்றால் தமிழில் அழகு. இதில் மற்றொரு தத்துவ மும் உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.
ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.
கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.
அதிகமாக மகாராஷ்டிரத்தில் தத்தாத் ரேயரை பரமகுருநாதராக வணங்குவர். மகா விஷ்ணுவை ஹயக்ரீவ அவதாரத்தில் ஞானகுருவாக வைணவர்கள் வணங்குவர். கிருஷ்ண அவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு’ என போற்றப்படுகிறார்.
பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார்.
பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அவரை குருவாக- ஏன் ஒரு தெய்வமாகக்கூட  கோவில்களில் வணங்குவதில்லை. காரணம், அருணாசலத்தில் பொய் கூறினார். சதுர்வேத புருஷன் என்று மார்தட்டினாலும், “ஓம்’ என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால் சிறையிலிடப்பட்டார். “நீ அறிவாயோ’ என சிவன் கேட்க, “கேட்கும் முறையில் கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம்’ என்று, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்!
சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே. விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள்.
எனவே, ஸ்கந்தன் (ஒன்றியவன், சேர்ந்தவன்) ஞானஸ்கந்தன்- ஞானபண்டிதன்- ஞானகுருநாதனாக வணங்கப்படுகிறான்.
குகன் என்ற பெயர், பக்தர்களின் இதயக் குகையில் இருக்கும் எந்தக் கடவுள்களுக்கும் ஒப்பும் என்றாலும், முருகனுக்கே அது உரியதாக உள்ளது. காசியிலிருந்து திரும்பிய முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக “ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி’ என்று பாடினார்.
ஸ்ரீவைகுண்டம் வாழ் குமரகுருபரன் ஊமை யாக இருக்க, திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்து பயன் கிட்டாததால் கடலில் விழ யத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் “பூமருவும்’ என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின் அருளை என்ன சொல்வது!
காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு “திகடச்சக்கர’ என ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார்.
அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது- அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம் என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு ஈந்து முருக தரிசனமும் தந்தாரென்றால் கந்தன் கருணையை என்ன சொல்வது!
முற்காலத்தில் பஞ்சாயதன பூஜை என்ற வழக்கமிருந்தது. சிவன், அம்பிகை, கணபதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரே அதற்குரிய தெய்வங்கள். சிவ பஞ்சாய தனம்  என்றால், சிவன் நடுவே இருப்பார். மற்ற நான்கு தெய்வ வடிவங்கள் நான்கு புறமும் இருக்கும். இதனில் முருகன் இல்லை.
திருச்செந்தூர் முருகன் ஆதிசங்கரரிடம் சிறிது விளையாடினான். சங்கரருக்கு நோய் ஏற்பட்டது. செந்தூர் முருகன்மீது அவர் புஜங்கம் பாட, நோய் தீர்ந்தது. அதன்பின் முருகனை பஞ்சாயதன தெய்வ ரூபங்களுடன் சேர்த்து “ஷண்மதம்’ என போற்றி வழிபட வகுத்தார். என்னே முருகன் பெருமை! ஷண்முகனே ஷண்மதம் என போற்றும் அளவுக்கு பக்தர்கள் வழிபடு கிறார்கள்.
எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட, புனித கங்கை போன்று ஆறாக அருள் மழை பெய்து, அவகுணங்களை அடியோடு அழித்து, ஞானானந்த பிரகாசத் தில் நம்மை ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம்; குகமயமாக ஆவோம்.
ஸர்வம் குஹ மயம் ஜகத்.
வேலுண்டு வினையில்ல; மயிலுண்டு பயமில்லை; சேவலுண்டு ஏவலில்லை; குகனுண்டு குறைவேயில்லை!
 சஷ்டிக்கு இன்னொரு காரணம்!
தமிழகத்தில் ஐப்பசி அமாவாசைக்குப் பின் (தீபாவளி) வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடநாட்டில் சில இடங்களில் ஐப்பசி சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும்.சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நலமுடன் இருக்க மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள்.கங்கை நதி ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள். நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.சுமங்கலிகள் சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.
மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாக இருப்பதாகச் சொன்னாலும், தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனைப் பிரார்த்திப்பதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும்.
இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.

பேசும் கடவுள், பச்சைமலை முருகன்!



‘‘முருகா, நான் இப்படியே கஷ்டப்பட்டுகிட்டே இருக்கணுமா? என் கஷ்டத்தை கொஞ்சம் கண்திறந்து பார்க்கமாட்டியா? கருணைக் காட்டு கடவுளே’’ என சாதாரணமாக இவன் முன்னால் கைக்கூப்பி நிற்க, கந்தன் கருணையோடு சிரிக்கிறான்.
‘உன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லிட்ட இல்ல; எல்லாம் பனியா மறைஞ்சிடும். நீ உன் வேலைய பாரு’ என தன்முன் கைகூப்பி நிற்பவரின் மனதோடு பேசுகிறான். மனதோடு பேசுகிறான் என்பது சத்தியம் என்பது இவன் திருமுக தரிசனம் கண்ட அத்தனை பேரும் சொல்லும் அனுபவ அதிசயம்.
பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமும் கொஞ்சலாய் இந்த தெய்வக் குழந்தை பேசுவது கண்டு சிலிர்த்து போகிறார்கள்; சிலாகித்து பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல, வாழ்க்கையை ஓட்ட அடிப்படை வசதி தந்தால் போதும் என்று வேண்டியவரை கோடீஸ்வரனாக்கி குதூகலிக்கிறான் இந்த குகன்.
யார் இந்த அருள் குழந்தை?
பச்சைமலை முருகன். முருகன் என்றாலே அழகன். அவன் அருளால் அண்டியவரின் துயரங்களை எல்லாம் தூசாக்கி, மகிழ்ச்சியோடு வாழ வைக்கும்போது, பலன் பெற்றவர்களெல்லாம் தன் வீட்டுப் பிள்ளையாய் சீராட்டுவது இயல்புதானே! கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில், பச்சைமலை முருகனை தங்கள் வீட்டுப் பிள்ளையாகக்தான் பக்தர்கள் சீராட்டுகிறார்கள்.
இவன் இங்கு வந்தமர்ந்த கதை என்ன?
ஈசனின் அம்சமான துர்வாச முனிவர், பொதிகைமலை சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் வந்தடைந்தார். இத்தல ஈசனை தரிசித்த முனிவர், தினமும் சிவபூஜை செய்ய தகுந்த இடம் அங்கே உள்ளதா என கண்மூடி பார்த்தார். அவரது ஞான திருஷ்டியில் ஒரு பெரிய அரசமரமும் அதன் கீழ் பெரிய பாம்பு புற்றும் இருப்பதைக் கண்டார். அந்த இடத்தை நோக்கி நகர்ந்த துர்வாசர், வருண பகவானை வர வழைத்து நல்ல மழை பெய்யச் செய்து, அந்த இடத்தை குளிரச் செய்தார். மந்திரங்களால் தூய்மைப்படுத்தினார். அங்கு ஈசனை ஸ்தாபிதம் செய்து அற்புதமாய் ஒரு சிவபூஜை செய்தார்.
பூஜையில் மூழ்கித் திளைத்த முனிவருக்குள் ஏனோ ஞானமயனாக முருகனைப் பற்றிய எண்ணம் பூத்துக் கொண்டே இருந்தது. பிரணவத்துக்கு பொருள் சொன்ன முருகனுக்கும் அதே எண்ணம் முகிழ்த்தது.
அந்தக் கணத்துக்காகவே காத்திருந்த ஈசன், ‘‘துர்வாசரே, கவலை வேண்டாம். உங்கள் மனம் தரிசிக்க ஏங்கும் முருகன், இங்கிருந்து அரைக்காத தூரத்தில், மரகதகிரி என்ற குன்றின் மேல் குடிகொண்டிருக்கிறான். மரகதவல்லி என்னும் திருநாமம் கொண்ட அன்னையின் திருவுருவ நிறத்தின் பெயராலேயே அக்குன்று பச்சைமலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையும் தாயன்போடு குமரனை சுமந்து நிற்கிறது. உன் ஆசைப்படி அழகனை தரிசித்து வா’’ என அசரீரியாய் சொன்னார்.
அரனின் ஆணைப்படி அங்கு சென்ற துர்வாசர், முருகனை மனங்குளிர தரிசித்தார். பிரபஞ்சம் உள்ளமட்டும் இங்கு வீற்றிருந்து மக்களுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றார். முருகனும் துர்வாசரின் வேண்டுதலை ஏற்று மக்களின் துயரை துடைத்து வந்தார். கால ஓட்டத்தில் மரகத
கிரியின் மகத்துவத்தை மக்கள் மறந்து போனார்கள்.
கலியுகத்தில் தனது அருளை மீண்டும் பொழிய விரும்பிய முருகன், குப்புசாமி கவுண்டர் என்பவரை அதற்கான கருவியாக்கிக் கொண்டான்.
குப்புசாமி கவுண்டர் தீவிர கடவுள் பக்தர். அவர் ஒருநாள் தனது பூஜையறையில் தியானத்தில் இருந்தபோது அவர் முன் ஜோதியாய்  தோன்றிய குமரன், பச்சைமலையில் தான் வீற்றிருப்பதையும் ஆலயத்தைப் புதுப்பிக்கும்படியும் கூறி மறைந்தான். குமரனின் வாக்கை கட்டளையாய் ஏற்ற அவர் திருப்பணி தொடங்க, பலரும் கைகொடுத்து உதவ, இன்று ஆலயம் பொலிவு மிகுந்து, அருள் பரப்பி நிற்கிறது.
ஆலயத்தில் மயில்வாகனன், வித்யாகணபதி, மரகதீஸ்வரர், மரகதவல்லி அம்மன், அருணகிரிநாதர் ஆகியோர் அருள்கிறார்கள். கருவறையில் பாலகனாய் வீற்றிருக்கும் பச்சைமலை முருகனை காணும் போது நம் கவலைகள் காண£மல் போகிறது. பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி, தங்கபீடத்தில் நின்ற கோலத்தில் அருள்கிறான் இந்த சிவபாலன்.
சிவ சந்நதியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியையும் மூலஸ்தான முருகனையும் நாம் ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கும் வகையில் அமைத்திருப்பது இத்தல விசேஷங்களில் ஒன்றாகும். இத்தல கல்யாண சுப்ரமணியரை பணிந்து நின்றால் வீட்டில் கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம்.
இத்தல மூலவருக்கு தாரா அபிஷேகம் செய்வது பிரசித்தமான வழிபாடுகளில் ஒன்று. 108 லிட்டர் பால் கொண்டு 11 முறை ருத்ரம் ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு கிடைக்கிறது.
அதே போல குழந்தை பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள் கந்தசஷ்டி விரதமிருந்து இத்தல நாதனை வழிபட, குழந்தை பாக்கியம் அருள்கிறான் குமரன். இந்த விரதத்திற்காக வருடத்திற்கு சுமார் 5000 பேர் இத்தலத்தில் காப்புக் கட்டிக் கொண்டு விரதமிருக்கிறார்கள்.
இத்தலத்தில், நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய்  தத்தமது வாகனங்களில் வீற்றிருந்து அருள்கிறார்கள். பச்சைமலை மீது அருளும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நடக்கும் வழிபாடுகளில் கலந்துகொண்டால் கடன், நோய் தீரும்.
பச்சைமலையேறி முருகன் முன்பு நிற்கும் நமக்கு என்ன வேண்ட வேண்டும் என்பதே மறந்து போகிறது. அந்த அழகிய திருமுகத்தை ஒரு முறை காண, மனம் அமைதியில் நிறைகிறது. ‘உன் குறை என்ன என எனக்கு தெரியும், கவலைப்படாதே!’ என புன்னகையோடு முருகன் பேசுவது நமக்குள் தெளிவாய் கேட்கிறது. பச்சைமலை முருகன் வேண்டியதை விரைவாக நிறைவேற்றி வைக்கும் தெய்வக்குழந்தை!
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது பச்சைமலை முருகன் கோயில்.
&எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: புதூர் சரவணன்
பச்சைமலை முருகன்
31-10-2011- சூரசம்ஹாரம் கந்தசஷ்டி
தீபாவளி பண்டிகைக்குப்பின் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பார்கள்.
இந்த சஷ்டி விழா பல தலங்களில் நடத்தப்பட்டாலும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடும் தலம் திருச்செந்தூர்தான். ஏனெனில் இங்குதான் செந்தில்நாதன் சூரனை சம்ஹரித்தார்.
சூரபத்மன் முற்பிறவியில் தட்ச னாக இருந்தான். பின் மாயைக்கும் காஸ்யப முனிவருக்கும் சூரபத்மனா கப் பிறந்து, தன் பேரன் குமரனால் வதம் செய்யப்பட்டு- வாழ்வளிக்கப் பட்டு, பேரனுடனேயே மயிலாகவும் சேவலாகவும் எப்போதும் இருக்கும் பேறு பெற்றான்.
மயில் வாகனம்
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.
சிக்கல்
“சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்பர். சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும் பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.
கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர்.
சுக்ராச்சாரியார் அசுர குரு. அசுரர் குலம் தழைக்க அவர் விருப்பப்படி, அசுரமங்கை மாயை காஸ்யப முனிவரை மயக்கினாள். இருவருக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன் எனும் மூன்று மகன்கள். மகள் அஜமுகி. பின் மாயை முனிவரை விட்டு விலகிவிட்டாள்.
இந்த மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பற்பல வரங்கள் பெற்றனர். பின் இவர்கள் சாமர்த்தியமாக ஒரு வரம் பெற்றனர். அதாவது சிவனின் சக்தியால் மட்டுமே அழிவு வரவேண்டும்; கர்ப்பத்தில்  பிறக்காத ஒரு ஆண் மகனால் மட்டுமே               இறக்க வேண்டும் என்பதுதான் அது. பின் அனைவருக்கும் பல துன்பங்களைத் தந்தனர். தேவர்களை அடிமைப்படுத்தினர்.
இதனால் தேவர்கள் சிவனிடம் முறையிட்ட னர். “என் ஆற்றலால் உருவாகும் மகனால் நன்மை பெறுவீர்கள்’ எனக் கூறிய சிவன் தவத்தில் ஆழ்ந்தார்.
சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர். அவன் எய்த அம்பால் சிவன் நெற்றிக்கண் திறக்க, மன்மதன் தகனமானான். பின் சிவன் தன் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜா தம், அதோமுகம் என்ற ஆறு முகங்களின் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தார். (இப்படி காமதகனமும் ஆறு பொறிகளும் தோன்றிய தலம்தான் கொருக்கை. அதனால் இத்தலம் முருகன் பிறந்த தலம் என்கின்றனர். இது சீர்காழி- திருப்பனந்தாள் வழியில் மலைமேடு அருகேயுள்ளது.)
இந்த ஆறு பொறிகளும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆயின. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்ட இவர்களை பார்வதி பாசத்துடன் சேர்த்தணைக்க, ஓராரு முகமும் ஈராறு கரமும்  கொண்டு ஆறுமுகன் தோன்றினான். இவன் வளர்ந்து குமரன் ஆனதும் (கர்ப்பவாசமின்றி பிறந்தவன்) சிவன் முருகனது அவதார நோக்கத்தைக் கூறி சூரனை வதம் செய்யச் சொன்னார்.
சிவன் தன் ஆற்றல்களைத் திரட்டி ஒரு வேலாக்கி, அந்த சிவசக்தி வேலை முருகனுக்குக் கொடுத்து, வீரபாகு தலைமை யில் படைகளை உருவாக்கி அவர்களையும் முருகனுடன் அனுப்பினார். சக்தியும் தன் சக்தியத்தனையையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் செய்து முருகனிடம் கொடுத்தாள். (அதைத்தான் சிக்கலில் வாங்குகிறார்.)
இப்படி போரிடச் சென்ற முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.
குமரன் சூரனை வதம் செய்யப் போரிடும்போது சூரபத்மன், “இந்த சிறுவனையா கொல்வது? வேண்டாம். எனினும் போரில் நான் வெல்ல வேண்டும்’ என எண்ணிப் போரிட்டான். இதை அறிந்த கந்தன் தன் விஸ்வரூபத்தை ஒரு நொடி காட்டினான். அப்போது சூரன் இந்த சிறுவன் தன் பேரன் என்பதை உணர்ந்தான். ஒரு நொடிப் பொழுதுதான்; பின் மறந்தான். அந்த ஒரு நொடியிலேயே முருகனிடம் “உன்னைத் தாங்கும்பேறு தருவாயா?’ என கேட்டும் விட்டான்.
எனவே தாத்தாவைக் கொல்ல மனமின்றி முருகன் போர் செய்து கொண்டி ருந்தபோது, சூரபத்மன் மாமரமாகி கடலில் தலைகீழாய் நின்றான். குமரன் தன் கூர்வேலால் மாமரத்தை இருகூறாக்கி, ஒன்றை தன்னைத் தாங்கும் வாகனமான மயிலாகவும்; ஒன்றை சேவலாக்கி தன் கொடியிலும் வைத்துக்கொண்டு சூரனுக்குப் பெருவாழ்வு கொடுத்தான். சூரசம்ஹாரம் முடிந்தது. சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில்அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி னான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத் தைக் காணலாம்.
சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா
இந்த ஆறு நாட்களும் வேள்விக் கூடத்தில் காலையும்  மாலையும் வேள்வி நடத்துவார்கள். பின் செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் இருத்தி வீதியுலா வரச் செய்து சண்முக விலாச மேடையில் தீபாராதனை செய்வர்.
ஒவ்வொரு நாள் இரவும் சஷ்டி மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கத் தேரில் வலம் வரச் செய்வார்கள். அப்போது அடியார்கள் வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு பாடியபடி செல்வார்கள்.
ஆறாம் நாள் மாலை கடற் கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது கடலும் உள்வாங்கி இடம் தரும். இந்நிகழ்ச்சியைக் காண பக்தர் கூட்டம் அலை மோதும். பார்க்கும்போது            தலையா கடல் அலையா எனத் தோன்றும்.
முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர்.
மகிமை மிக்க முருகன் கோயில் எது?

பாடல்- 11
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே
உனது பழநி மலையெனும் ஊரைச் சேவித்தறியேனே
பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் படைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர் புர சூரைக்காரப் பெருமாளே
தொழுது வழிபடும் அடியர் காவற்காரப் பெருமாளே
விருதுகவி விதரண விநோதக்காரப் பெருமாளே
விறன் மறவர் சிறுமி திருவேளைக்காரப் பெருமாளே.
பொருள்: பாவம் செய்த அசுரர்களின் நகரங்களைச் சூறையாடிய பெருமை கொண்டவரே! மெய்யன்போடு வணங்கி வழிபடும் அடியவர்களைக் காத்தருள்கின்றவரே! விருதுகவி பாடுகின்ற வாக்குவன்மை கொண்டவரே! லீலாவிநோதம் புரிந்திடும் அற்புதமானவரே! வலிமை மிக்க வேடர்குலத்தில் உதித்த வள்ளியை ஆட்கொண்டவரே! முருகப்பெருமானே! நான் சொல்வதைக் கேள். உன் திருவடிகளை ஒரு தடவை கூட அன்புடன் வணங்கவில்லை. உமது திருத்தலமாகிய பழநி மலையை வணங்கி வழிபடவில்லை. இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, அரியதும் பெரியதுமான முக்தியின்பத்தை அடையும் வகையில் பிறவிப்பிணி தீர வழி தேடவில்லை. பிறவி வேண்டாம் என ஒரு பக்கம் எண்ணினாலும், ஆசாபாசங்களை இன்னும் ஒழிக்க முடியவில்லை. நீ தான் பிறவி தீரும் வழி காட்டி அருள்புரியவேண்டும்.
பாடல்-12
காமியத்து அழுந்தி இளையாதே
காலர்கை படிந்து மடியாதே
ஓம் எழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
தூம மெய்க் கணிந்த சுகலீலா
சூரரைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற்பு உயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
பொருள்: நறும்புகை வரும் தூபங்களை ஏற்பவனே! வித்தியாசமான லீலைகளைச் செய்பவனே! சூரர் குலத்தை அடியோடு சம்ஹாரம் செய்த கதிர்வேலனே! பொன்மலை போல் சிறந்தோங்கும் மயிலில் வலம் வரும் வீரனே! திருவேரகம் என்னும் சுவாமிமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே! என்னை ஆசைக்கு அடிமையாக்கி விடாதே. உலக இன்பத்தில் மூழ்கி மெலிந்து போகாமல் தடுத்து விடு. காலதூதர்களின் கையில் சிக்கி இறந்து போகாமல் பாதுகாப்பைத் தந்திடு. “ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தில் அன்பு கொள்ளச் செய். தற்காலிக இன்பங்களைக் கண்டு ஓட வைக்காதே. சித்திரம் போல ஆடாமல் அசையாமல் இருக்கும் மோனநிலையைத் தந்து அருள் செய்.
பாடல்- 13
பிறவியலை யாற்றினில் புகுதாதே
பிரகிரதி மார்க்கமுற்று அலையாதே
உறுதி குருவாக்கியப் பொருளாலே
உனது பத காட்சியைத் தருவாயே
அறுசமய சாத்திரப் பொருளாலே
அறிவுளறி வார்க்குணக் கடலோனே
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே.
பொருள்: ஆறுசமய சாஸ்திரங்களின் பொருளாக விளங்குபவனே! அறிவு சார்ந்த ஞானியருக்கு குணக்கடலாக திகழ்பவனே! குறுமுனிவரான அகத்தியரால் வணங்கப்படுவனே! முத்தமிழ் வித்தகனே! குமரகுருவாக விளங்கும் கார்த்திகேயனே! முருகப்பெருமானே! என்னை பிறப்பு என்னும் அலைகள் விளையாடும் ஆற்றிற்குள் தள்ளாதே. பிறப்பு, இறப்பு என்ற தேவையற்ற அலைச்சலைத் தராதே. இவற்றுக்குப் பதிலாக, இந்த உலக இன்பத்தில் சிக்கி அலையாமல் ஆன்மலாபம் தரும் உபதேச மொழிகளைக் கூறுவாயாக. முருகா! உன் திருவடி தரிசனத்தைத் தந்தருள்வாயாக.
விளக்கம்: மூன்று பாடல்களிலுமே பிறவிப்பிணி தீர்க்க அருளுமாறு அருணகிரியார் முருகனிடம் வேண்டுகிறார். “ஒரு பொழுது’ என்ற பாடலில், பழநி தலத்தைப் பார்க்கவில்லையே என வருந்துகிறார் அருணகிரியார். எத்தனையோ, முருகத்தலங்களைப் பற்றி பாடியவர், பழநியை பார்க்க முடியவில்லையே என ஏங்குவதன் மூலம், அதன் மகிமை புரிகிறது. ஆக, பழநிக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் அவசியம் சென்று வாருங்கள்.
ஆன்மிகத்திலுமா பொறாமை!
முருகபக்தனான இளைஞன் ஒருவன், அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களை மாலை துவங்கி இரவு வரை பாடுவான். அவனது பக்திக்கேற்ப முருகப்பெருமான் செல்வவளமும், அழகான மனைவியும், நல்ல குழந்தை களையும் அருளினார்.
இதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரனுக்குப் பொறாமை. அவனும் திருப்புகழ் புத்தகம் வாங்கி வாசித்துப் பார்த்தான். திருப்புகழின் சந்தப்பாடல்கள் அவன் வாய்க்குள் நுழையவில்லை. பக்கத்து வீட்டுக்காரனின் பக்தியைக் கெடுத்தால் அன்றி, அவன் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று நினைத்தவன் தன் அரங்கேற்றத்தை துவக்கினான்.
பக்தனின் மனைவி வெளியூர் சென்றிருந்த சமயத்தில், ஒரு தாசியை அனுப்பி அவனை மயக்கும்படி ஏவினான். அவளும் தன்னால் ஆன முயற்சியை செய்து பார்த்தாள்.
பக்தனோ, அவள் முன்பும் திருப்புகழ் பாடினானே ஒழிய அவளது அழகில் மயங்கவில்லை. ஒருநாள் அவன் மனைவி திரும்பி விடவே, பக்கத்துவீட்டுக்காரன் அவளிடம், “”உன் கணவன் வீட்டுக்குள் தாசியுடன் இருக்கிறான்,” என வத்தி வைத்தான்.
அவள் வீட்டுக்கு வந்தாள். தன் பணியை பார்க்க ஆரம்பித்து விட்டாள். தாசி அவளிடம் சென்று, “”உன் கணவனைப் போன்ற உத்தம ஆண்களை நான் பார்த்ததில்லை. எல்லாரும் அவரைப் போல இருந்திருந்தால் என்னைப் போன்ற தாசிகள் இந்த உலகில் <உருவாகியே இருக்கமாட்டார்கள். மேலும், அவர் பாடிய திருப்புகழ் என் மனதை மாற்றிவிட்டது. நான் திருந்திவிட்டேன். இனி ஒழுக்கம் மிக்க வாழ்க்கை நடத்தி முருகனடி சேர முயற்சிப்பேன்,” என்றாள்.பக்கத்து வீட்டுக்காரனை அழைத்த இளைஞனின் மனைவி,”"அண்ணா! என் கணவரைப் பற்றி எனக்கு தெரியும். பார்த்தீர்களா! நீங்கள் அனுப்பிய பெண் உண்மையைச் சொல்லி விட்டாள். நீங்கள் பக்தியாளராக இருக்க வேண்டுமென்பதில்லை.பிறரது பக்தியும், வாழ்வும் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள்,” என்றாள். அவன் தலை குனிந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்