பயன்பெறும்படி செய்துள்ளனர்.
ஆண்டவனது அருளைப் பெற ஆலயங் களுக்குச் சென்று வழிபடுகிறோம். தெய்வ விக்ர கங்களைத் தரிசிக்கும்போது நமது உள்ளத்தில் அருள் அலைகள் பாய்கின்றன. தெய்வச் சிலை களின் கண்களின் மூலமாகவே நாம் தெய்வ அனுக்கிரகத்துக்குப் பாத்திர மாவதாக உணர்கிறோம்.
ஆலயங்களிலுள்ள மூலமூர்த்தி சிலா விக்ரகம், சுதைமூர்த்தி, தாருக மூர்த்தி என மூவகைப்படும். சிலா விக்ரகங்கள் கல்லாலோ, உலோகத் தாலோ செய்யப்படுகின்றன. சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை களையும் சுண்ணாம்பையும் சேர்த்து வடிக் கப்படும். தாருகமூர்த்தி என்பது மரத்தினால் செய்யப் படுவது.
திருவுருவங்கள் செய்யப்படுவதற்கான பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே சிலைகள் வடிக்கப்படுகின்றன. கல் அல்லது உலோகங் களால் செய்யப்படும் சிலைகளின் கண் திறக் கப்படுவது என்பது கடைசி நிகழ்ச்சியாகவும்; சிலையின் புனிதத்துவத்தை நிலைபெறச் செய்வதற்கான நிகழ்ச்சியாகவும் அமைகிறது. சிலை கண் திறப்புக்கென சில நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
சிலை செய்து முடிக்கப்பட்டபின்- கண்கள் திறக்கப்படுவதற்குமுன் அங்க ரத்ன நியாசம் எனப்படும் ஆராதனை செய்யப்படும். நவரத்தினங்களை சிலையின் சிரசு, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்கள் போன்ற ஒன்பது இடங்களில் வைத்துப் பூஜை செய்து, பால் நிவேதனம் செய்து, தூப தீப ஆராதனைகள் செய்வார் கள். அதன்பின் சிலைக்கு அபிஷே கம் செய்யப்படும்.
அபிஷேகம் செய்தபிறகு சிலை செய்த சிற்பியைக் கொண்டு கண்திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
சிற்பி கண் திறக்கச் செல் வதற்குமுன் சில நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர் குளித்து, புத்தாடைகள் அணிந்து, பூணூல் தரித்து, நெற்றிக்கு திருக்குறி இட்டு, விரல்களில் மோதிரங்கள் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்துக்கொண்டு நிகழ்ச்சியின் முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.
பிறகு சிலைக்கு அருகில் ஓரிடத்தில் அரிசியைப் பரப்பி, அதன்மீது கலச ஸ்தாபனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்கலச நீரால் உரிய தேவதையைப் படிமத்தில் ஆவாஹனம் செய்து, அந்த தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபித்து, அந்தப் படிமத்தை பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது மணிமங்கள கோஷங்களை முழங்கச் செய்ய வேண்டும்.
பிறகு ஸ்தபதி விராட் விஸ்வ பிரம்மனைத் தியானித்து, வணங்கி, அவர் அனுமதி பெற்று கண்களைத் திறக்க வேண்டும். பொன்னாலான உளி அல்லது தங்க ஊசியைக் கொண்டு முதலில் வலது கண்ணையும் அடுத்ததாக இடது கண்ணையும் திறக்க வேண்டும். பல முகங்கள் இருந்தால் அவற்றிலுள்ள கண்கள் அனைத்தையும் திறக்க வேண்டும்.
கண் திறக்கப்பட்ட பிறகு சிலையின் கண்கள் முதலில் பார்க்க வேண்டி யவை எவை என சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின் றன. அவற்றைப் பார்க்கச் செய்யும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்.
சிற்ப நூல்களில் பார்க்க வேண்டியவை பற்றி மிகுதியாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் உள்ள “தச தரிசனங்கள்’ என்ற பத்து வகை தரிசனங்களைப் பார்ப்போம்.
கண்கள் திறந்தவுடன் சுவாமிக்குமுன் ஒன்றன்பின் ஒன்றாக கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கை யில் சுமங்கலிப் பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், கன்னியர்கள், சந்நியாசி கள் ஓரிருவர், வேத விற்பன்னர்கள், அடி யார்கள் என்ற வரிசையில் காட்டப்படும். இறுதியாக ஆலயம் கட்டுவித்த எஜமானனை சுவாமிமுன் நிறுத்தி வணங்கிடச் செய்வார்கள்.
இவற்றை ஸ்தபதி மற்றும் சிலர் உடனிருந்து செய்வதோடு, ஒவ்வொரு தரிசன இடைவெளியிலும் தூப தீப ஆராதனைகள் காட்டி மங்கள வாத்தியங் கள் முழங்கச் செய்தல் வேண்டும்.
இவ்வளவு சிறப்புடனும் சிரத்தை யுடனும் திறக்கப்படும் இறை விக்கிரகங் களின் கண்கள் பக்தர்கள்மீது அருள்மழை பொழிவதில் என்ன வியப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்