அவரிடம் தம் மனக்கலக்கத்தை வெளியிட்டார் வியாசர். அறநெறியைக் காலதேசத்திற்கேற்றவாறு புரிய வைக்கவும் புகட்டவும் தகுதியுள்ளவர் தான் வியாசர்; அறநெறிச் சான்றோரென்றால் வியாசர்தான்; எனினும் அவரது திருப்பணியில் ஒரு குறை ஏற்பட்டுவிட்டது. அவர் தாம் இயற்றிய நூல்களில் பக்தி மார்க்கத்தை விரிவாக விளக்கவில்லை. ஆதலால், வியாசருக்கு இந்தக் கலவரம் ஏற்பட்டதாக நாரதர் கண்டு
பிடித்தார். கடவுளை அன்பு மயமாகப் பாவனை செய்து அவரை அன்பினால் அடையச் செய்யும் மார்க்கம் பக்தி மார்க்கம். பெரும்பாலோரும் எளிதில் பயிலக்கூடிய வழியும் இதுவே. எனவே பொதுமக்கள் நலனுக்காக பாகவத புராணத்தை இயற்ற வியாசரை ஊக்கினார். முன்னொரு காலத்தில் தமக்கு பாகவத சிரவணத்தாலே மனத்தேறுதல் ஏற்பட்டதாக முனிவர் எடுத்தோதினார். இந்தக் கைங்கரியத்தினாலே மன நிம்மதி கைகூடுமென்று நாரதர் உறுதியாகச் சொன்னார். பிரம்மதேவரிடம் நாரதர் கற்ற ஸ்ரீ மகாபாகவத புராணம் வியாசருக்கு உபதேசிக்கப்பட்டது. வியாசர் கண்ணபிரான் விளையாடல்களை வருணிக்கும் பாகவத புராணம் எழுதினார். நாரதர் சொன்னதுபோல் வியாசருக்கு மன அமைதி கிடைக்கலா யிற்று.
சத்தியம், தருமம் முதலிய பல் குணங்களுடைய ஒரு மகானுடைய விவ ரத்தை வால்மீகி நாரதரிடம் பெற விரும்பினார். நற் குணங்களுக்கெல்லாம் சான்றாக ராமபிரான் கதையைக் கூறினார் நாரதர்.
வேடன் ஒருவன் கிரெளஞ்சம் என்னும் இணைப் பறவைகளில் ஒன்றைக் கணையால் எய்து கொன்றான். இதைப்பார்த்த வால்மீகியின் மனம் நொந்தது. இந்த அதருமச் செயலினால் இதயம் கொந்தளித்த முனிவர் வேடன் மீது சாபமிட்டார். சாபவார்த்தைகள் செய்யுள் வடிவமாக அவரது வாயிலிருந்து வெளிப்பட்டது முனிவருக்கே விந்தையாக இருந்தது. அதற்கு முன் ஒருவரும் பாடல் இயற்றியது கிடையாது. வால் மீகி முனிவர் ஆசிரமம் திரும்பி இந்த நிகழ்ச்சியைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கையில் பிரம்ம தேவர் அவர் முன் தோன்றினார். நாரதரிடமிருந்து வால்மீகி கற்றுக் கொண்ட இராமாயணத்தைப் பாடலாக இயற்றப் பிரம்மதேவர் கட்டளையிட்டார். இவ்வாறு வால்மீகி இராமாயண நூல் எழுதலானார்.
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமுதத்தின் பொருட்டு பாற்கடலைக் கடைந்தனர். சமுத்திரத்திலிருந்து பல பொருள்கள் கிடைத்தன. அவற்றை இரு சார்பினரும் பங்கு கொண்டனர். கடைசியில் அமுதம் கிளம்பி வந்தபோது அதன் உரிமைக்காக வழக்கு ஏற்பட்டது. வழக்கு முற்றிச் சண்டையாயிற்று. கொடிய போர் மூண்டு விட்டது. இருபக்கமும் நாச நஷ்டங்கள் அளவுமீறன. போரை நிறுத்த சமாதான தூதுவராக நாரதர் தொண்டு செய்தார். தேவர்களும் அரசர்களும் சண்டையை ஒதுக்கிவிட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
சித்திரகேது என்பவர் சூரசேன தேசத்து மன்னன். குழந்தைப்பேறு வாய்க்காமல் வெகுகாலம் சென்ற பிறகு அவருக்கு ஆங்கீரஸ் என்னும் முனிவரது அருளால், பட்டமகிஷியிடம் குழந்தை ஒன்று பிறந்தது. ஆசையுடன் அதைப் பேணி வளர்த்தான் மன்னன். மன்னனுக்குப்பட்ட மகிஷியைத் தவிர வேறு மனைவிமார் பலர் இருந்தனர். அவர்களுக்குக் குழந்தை இல்லை. ஆதலால், அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு நாள் மாற்றாந்தாய்மார்கள் மன்னனது மகனுக்கு விஷம் ஊட்டி அதைக் கொன்று விட்டார்கள். சித்திர கேதுவும் பட்டமகிஷியும் ஆறாத்துயரத்தில் முழ்கினார்கள். ஆங்கீரசும் நாரதரும் சித்திரகேதுவைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் நாரதர் சிறிது நேரத்திற்கு இறந்த குழந்தைக்கு உயிர்ப் பிச்சை அளித்தார். அதைப் பேசவைத்து மன்னனுக்குக் குழந்தையின் நாவாலே வேதாந்தம் புகட்டினார். இங்ஙனம் சித்திரகேதுவைத் தேற்றினார் நாரதர். குழந்தை மறுபடியும் உயிர் நீத்தது. இந்தச் சித்திரக்கேதுவே பார்வதி தேவியின் சாபத்தால் விருத்திராசுரனாகப் பிறந்தார். நாரதரின் உபதேசத்தின் கருத்தை அவர் ஒருக்காலும் மறக்க வில்லை.
இராஜசூய வேள்வி செய்ய யுதிஷ்டிரரை வற்புறுத்தியவர் நாரதரே ஆவார். மன்னனுக்கு வேள்விக்கு வேண்டிய எல்லா உதவிகளும் செய்யக் கண்ணபிரானை வேண்டியவரும் நாரதரே. வேள்வியில் அக்கிரபூஜை கிருஷ்ண பரமாத்மாவுக்கு வழங்கப்பட்டது. சிசுபால மன்னன் இதை ஒப்புக் கொள்ளவில்லை. அவன் கண்ணபிரானை அக்கிரபூஜைக்குத் தகுதியற்றவன் என்று எண்ணினான். அவன் கண்ண பிரானுடைய பிருந்தாவன லீலைகளை எடுத்துக்காட்டி அவரைப் பழித்தான். சிசு பாலனுடைய முற்பிறப்பைப் பற்றிய சமாச்சாரங்களை யுதிஷ்டிரரிடம் நாரதர் வெளியிட்டார். சிசுபாலனும் தந்தவக்கிரனும் முற்பிறப்பில் வைகுண்டத்திலே துவாரபாலகர்களாக இருந்தவர். சனகாதி மஹரிஷிகளின் சாபத்தினாலே இவர்கள் ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பிறந்தனர். அவர் துவேஷ பக்தியைக் கடைப் பிடித்தவர் என்று விளக்கினார் நாரதர். (வேள்வியின் நடுவில் கண்ணபிரானால் சிசுபாலன் வதையுண்டான்). வேள்வியின் இறுதியில் நாரதர் தருமருக்கு வருணாசிரம தரும் தத்துவத்தை விரிவாகக் கூறினார்.
நாரதருக்கு மிகவும் பிடித்தது. பக்திமார்க்கமான பாகவத தருமம். இதை அவருக்குப் புகட்டியது அவருடைய பிதாவான பிரம்மதேவர். பாகவத தருமம் நாரதருக்கு மன நிம்மதியைத் தந்ததாக அவரே வியாசபகவானிடம் கூறியுள்ளார். வியாசரைப் போல் நாரதரும் வேதசாஸ் திரங்களையெல்லாம் ஒழுங்காகக் கற்றவர். ஆனால், கற்ற அறிவின் பயனாக அவர் ஆனந்தம் பெறவில்லை. அவர் சனத் குமார ரிஷியை நெருங்கித்தம் குறையைப்பற்றிக் கூறினார். ரிக்வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வணவேதம், இதிகாசம், புராணம், இலக்கணம், ஜோதிடம், தர்க்கம் முதலிய வித்தைகளையெல்லாம் தாம் கற்றிருந்ததாகவும் நாரதர் முனிவரிடம் சொன்னார். ஆனால், துக்கத்தைக் கடக்கக் கூடிய பிரம்மஞானம் கை கூடவில்லை என்று தெரி வித்துக் கொண்டார் நாரதர். எல்லையற்ற பொருளே “பூமா” என்றார் சனத்தகுமார். பூமாவை அறிந்தால் சோகத்தைத் தாண்டலாம் என்று புகட்டினார் சனத்குமாரர். அந்த அறிவு ஆன்மஞானத்திலே நிலைத்திருப்பதையும் புகட்டினார்.
ஸ்ரீராமகிருஷ்ணதேவர் கூறுவார். “செயல்கை பொருள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு அகண்ட சச்சிதானந்தத்தை அடைகிறான் ஞானி” என்று. தள்ளப்பட்ட பொருள்களும் சச்சிதானந்தத்தின் தோற்றமே என்றுணர்கிறேன் விஞ்ஞானி, எப்படியெனில், மாடிமேல் ஏறப் படிக்கட்டுகளை ஒவ்வொன்றாக கடந்தாக வேண்டும். மாடிமேல் ஏறின பிறகு, தள்ளப்பட்ட படிக்கட்டுகளும் மாடியும் எல்லாமுமே கல்லினுலும் கண்ணாம்பினாலுலோ ஆக்கப்பட்டவை என்பது புலப்படுகிறது. அதாவது, ஞானோதயம் ஆனதும் பிரம்மத்திற்கு வெளியில் ஒரு பொருளும் இல்லை என்றுணருகிறோம். உலகம் கடவுளுக்குப் புறம்பானதன்று. அது கடவுளின் தோற்றம். இந்த அறிவையே விஞ்ஞானம் என்பார் குருதேவர்.
நாரதர் விஞ்ஞானத்தை பாகவத தருமத்திலிருந்து கற்றுக் கொண்டார். அதனால் நாரதருக்கு பாகவதத்தின் மீது அபிமானம் மிகுந்தது.
விருந்தாவனத்திலே ஒரு நாள் நாரதர் ஒரு இளம் மங்கையைச் சந்தித்தார். மூப்படைந்த இரண்டு மக்கள் அவளுடன் இருந்தனர். அந்த மங்கை பக்தி தேவதை. அவளுடைய மக்கள் ஞானமும் வைராக்கியமும் ஆவர். திராவிட தேசத்திலே பிறந்தவன் பக்தி; கர்நாடகதேசத்திலே பருவம் எய்தினாள்; மகாராஷ்டிரத்திலே ஆங்காங்கு சில போஷணைகள் கிடைத்தன. ஆனால் , கூர்ஜர தேசம் சென்றதும் பக்திக்கு விருத்தாப்பியம் ஏற்பட்டது. வடதிசை நோக்கி நகர்ந்தாள் பக்தி. அவள் விருந்தா வனம் எட்டியதும், இளமையை மீட்டுக் கொண்டாள். அவளுடைய மக்கள் ஞான வைராக்கியங்கள் கிழவராகவே இருந்தனர். அவர்களது விதியைக் குறித்து அவள் நொந்தாள். அழுது கொண்டே அவள் தன் கதையை நாரதரிடம் சொன்னான். மக்கள் இளைமை மீள நாரதரிடம் உபாயத்தை கேட்டாள்.
நாரதர் தம்மால் கூடியவரையிலும் முயன்று பார்த்தார். ஞான வைராக்கியங்களின் இளமை திரும்பவில்லை. பின் வேறு வழியை ஆராய முனிவர் புறப்பட்டார். “சத் கருமத்தைச் செய்வாய்” என்று அசரீரி பிறந்தது. ஆனால், சத் கருமத்தின் பொருள் நாரதருக்கு விளங்கவில்லை. நாரதர் ஆன்றோர்கள். பலரைச் சந்தித்து சத் கருமத்தின் விளக்கம் கேட்டார். பதில் சொல்ல ஒருவராலும் இயலவில்லை. முடிவில் சனகாதி முனிவர்களைச் சந்திக்க, அவர்கள் சத்கருமத்தின் பொருளை விளக்கலாயினர். சத்கருமத்தை ஞான யக்ஞம் என்றனர். ஞான யக்ஞம் என்றால் பாகவத ஸப்தாக யக்ஞம், ஏழுநாளில் பாகவத புராணத்தைப் பாராயணம் செய்து முடித்தல் என்றனர். கங்கா நதியின் கரையிலே ஆனந்த் என்னும் இடத்தில் பாகவத சப்தாகம் நடத்த நாரதரைப் பணித்தனர். சனகாதியர். நாரதர் ஞான யக்ஞம் நடாத்துகையில் பக்தி தேவதை ஞானவைராக்கியங்களுடன் ஆங்கு விஜயம் செய்தாள். யக்ஞத்தின் இறுதியில் ஞான வைராக்கியங்கள் வயோதிபம் நீங்கி வாலிபம் பெற்றனர். பக்தி தேவதை நாரதருக்கு ஆசி கூறி அவரை மகிழச் செய்தாள்.
நாரதர் சொன்னார்: “பக்தியைப் பயில், கலியு கத்திற் கொப்பான வேறு யுகமே இல்லை. ஆதலால், பக்தி தேவியான உன்னைக் கலியுகத்தில் நான் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும், ஒவ்வொரு இல்லத்திலும் நிறுவுவேன்.”
இமயமலையிலே ருத்திரப் பிரயாக் என்னும் இடத்திலே நாரதர் தவம் செய்து சிவபெருமானுடைய அருளைப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகின்ற ருத்திரபிரயானக் கேதார் -பதரி யாத்திரை மார்க்கத்திலே இருக்கிறது. அது மந்தாகினியும், அளகா நந்தாவும் கலந்து கொள்ளும் சங்கம் §க்ஷத்திரம்.
பதரீநாத கோவிலில் நாரதர் சிலை ஒன்று உள்ளது. நாரதர் எப்போதும் அங்கே இருக்கிறார் என்பது ஐதிகம். பதரியில் ஆறுமாதம் தான் பூஜை வழிபாடுகள் நடைபெறும். பனிகாலமான ஆறுமாதம் கோவில் மூடப்பட்டிருக்கும். பனிகாலத்தில் நாரதரே பக வானுக்குக் கைங்கரியங்கள் செய்கின்றார் என்று கூறுவர்.
நாரதர் எப்பொழுதும் தொண்டு செய்துகொண்டே இருக்கிறார் என்று கூறுவர். மக்களுள்ளத்தில் பக்தி தீபத்தை ஏற்றி வைக்க நாரதர் அருள் புரிவாராக!





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்