ஞாயிறு, 6 மே, 2012

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)-ஏழரையின் தாக்கத்தை ஏழாமிட குரு குறைப்பார்





உலக நிகழ்வுகளை அறிவதில் ஆர்வமுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான ரிஷபத்தில் மிகுந்த அனுகூலமாக உள்ளார். ஏழரைச் சனியின் ஆரம்பக்கட்டத்தில் சில சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த சமயத்தில் அவற்றில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் மாறி சுறுசுறுப்பு பெறுவீர்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாய பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத்துணிவு, தெளிவான சிந்தனைத்திறன் ஏற்படும். 9ம் பார்வை ராசிக்கு 3ம்
இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு.  புத்திரர்கள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கவுரவமான நிலையை அடைவர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள். சந்திரனுக்கு ஏழில் குரு அமர்ந்து கெஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், நிதி,
கல்வி நிறுவனம், மருத்துவமனை நடத்துவோர், காகிதம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், பட்டாசு, மின்சார, மின்னணு சாதனங்கள், தோல் தொழிலில் உள்ளவர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, அரிசி, எண்ணெய், பட்டாசு, மருந்து, தீப்பெட்டி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மினரல் வாட்டர் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி லாபம் உயரும். வியாபார சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட அதிக லாபமும் முந்தைய பாக்கி வசூலாவதுமான நற்பலன் நடக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளை செவ்வனே நிறைவேற்றுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக நடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர். குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர், மேனேஜ்மென்ட், வணிகம், கலை, ஜர்னலிசம், தொழில்நுட்ப மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களுக்கும் படிப்பு சிறப்பாக இருக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.புத்திரர்களால் அரசியலில் உதவி உண்டு.
விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து அபரிமிதமான மகசூல்வரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு.கூடுதல் நிலம் வாங்க அனுகூலம் உண்டு.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் சிறந்து சமூக அந்தஸ்து உயரும்.
செல்ல வேண்டிய தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்.
பரிகாரப்பாடல்:
புத்தியும் பலமும் தூயபுகழோடு
துணிவும் நெஞ்சில்
பத்தியும் அச்சமிலாப் பணிவும்
நோயில்லா வாழ்வும்
உத்தமஞானச் சொல்லின் ஆற்றலும்
இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே.
வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் உங்கள் செயல்திறனில் சற்று சரிவு ஏற்படும். விலகிச் சென்ற உறவினர் விரும்பி வந்து நட்பு கொள்வர். இயன்ற அளவில் சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். பணவரவு அதிகம் பெற புதிய வழி ஏற்படும். குடும்பத்தில் நடத்த வேண்டிய சுபநிகழ்ச்சி சீரும், சிறப்புமாக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள். உடல்நலம் நல்லவிதமாக இருக்கும். புத்திரர்களின் செயல்திறன் வளரும். புகழ்பெறும் வகையிலான செயல்களைச் செய்வீர்கள். எதிரிகள் உங்கள் வளர்ச்சி கண்டு விலகி ஓடுவர். தொழில், வியாபாரத்தில் வளம் சிறந்து அதிக அளவு லாபத்தை பெற்றுத் தரும். பணியில் உள்ளவர்கள் உயர்பதவி, பொறுப்பு எளிதில் கிடைக்கப் பெறுவர். பயணங்களின் போது பாதுகாப்பு நடைமுறையில் கவனம் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்