ஞாயிறு, 6 மே, 2012

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1)-அயர வைப்பார் ஆறாமிட குரு





புகழ்பெறுவதில் கூடுதல் விருப்பமுள்ள தனுசு ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். குருவின் ஆறாம் இட அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக நல்ல பலன்களும் ஏற்படும். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பத்தாம் இடமான தொழில், 12ம் இடமான கூடுதல் செலவு, இரண்டாம் இடமான குடும்பம், வாக்கு, பணவரவு ஆகிய இடங்களை பார்க்கிறார்.   பணரவரவு குறையும்
என்பதால், குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதே நேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது. தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புத்திரர்கள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்துகொள்வர்.  தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும்.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், அச்சகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், மருத்துவமனை நடத்துவோர், கட்டுமானப்பொருள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு,  ஆட்டோமொபைல் தொழில் செய்வோர் பல்வேறு குளறுபடிகளை எதிர்கொள்வர். பணவரவு பெறுதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்ல நிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், தோல் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, பூஜைப் பொருள், ஸ்டேஷனரி விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டாலும், சுமாரான விற்பனையும் அதற்கேற்ற லாபமுமே கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட லாபம் சுமாராகவே இருக்கும். நீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்க வைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு
கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் ஏற்படுகிற குளறுபடியால் சஞ்சலம் கொள்வர். பணி சார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்று பணியை விரைந்து முடிக்கலாம். சம்பளம், சலுகையில் தற்போதைய நிலை தொடரும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். அனுபவசாலிகளின் உதவியைக் கேட்டே பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் தாமதத்தால், அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். சலுகைகளைக் கேட்பதில் நிதானம் வேண்டும். குடும்பப் பெண்கள் பாசத்துடன் செயல்பட்டு குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெறுவர். வீட்டுச்செலவுக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால்,  சிக்கனம் பின்பற்ற வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள்  ஏற்கனவே பெற்ற ஆர்டர்களுக்கு பொருள்களை தருவதில் இழப்பு ஏற்படும். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணஇழப்பு வராமல் தவிர்க்கலாம்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், ஆசிரியர், ஜர்னலிசம், வணிக, கலைத்துறை, மேனேஜ்மென்ட், கேட்டரிங் துறை மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதால் மட்டுமே எதிர்பார்த்த தரதேர்ச்சி இலக்கை அடையலாம். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சற்று கவனமாகப் படிப்பர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால் தான் உயர் மார்க் பெறலாம். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் பெற்ற புகழை தக்கவைக்க அதிக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நடைமுறை செலவு அதிகரிக்கும். ஆதரவாள்ரகளின் எதிர்பார்ப்பை ஓரளவே நிறைவேற்ற முடியும். பொது விவகாரங்களில் கலந்துகொள்வதை தவிர்ப்பது சட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். அதிகாரிகளுடன் சமரசமாக நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளின் தொந்தரவு கூடும். முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
விவசாயிகள்: நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் சுமாரான வருமானமே உண்டு. விளைபொருட்களுக்கு தகுந்த விலை இல்லாததால் சிறு நஷ்டத்தை சந்திக்க இடமுண்டு.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் மனதைரியம், தொழில் சிறப்பு ஏற்படும்.
செல்ல வேண்டிய தலம்: சமயபுரம் மாரியம்மன் கோயில்.
பரிகாரப்பாடல்: இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுளிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!
வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 27.2.2013 வரை உங்கள் ராசிநாதன் குருவுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில், குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் திட்டமிட்ட செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இடம், பொருள் அறிந்து பேசுவதால் மட்டுமே தொந்தரவு அணுகாமல் தவிர்க்கலாம். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணிபுரிந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புத்திரர்கன் படிப்புக்கு கடன் வாங்க வேண்டி வரும். உடல்நிலையில் பாதிப்பு வரலாம். கவனம். எதிரிகள் ஏளனமாக பேசுவர். கண்டு கொள்ள வேண்டாம். தம்பதியர் குடும்ப நலன் காப்பதில் கூடுதல் அக்கறை கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு நிறைவேற கடும் உழைப்பைக் கொடுப்பது அவசியம். பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் நேரம் தவறாமையை பின்பற்றுவது மட்டுமே நற்பெயர் பெற உதவும். வெளியூர் பயணம் எதிர்பார்த்த நன்மையைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்