எம் பெருமானின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 2014 ஜுன் மாதம் 2 ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
எம் பெருமானின் 2014 வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கணபதிஓமம் எதிர்வரும் ஜுன் மாதம் 1 ம் திகதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆலய நிர்வாகம்
1991ம் ஆண்டு (18.10.1991)நவராத்திரி காலத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வு காலத்திற்கு பின் 1996ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் மீண்டும் மக்கள் குடியேறத் தொடங்கினர். 15.03.1998ம் ஆண்டு ஆலயத்தில் மகா சபைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பணிகள்
வேலனை முடிப்பிள்ளையார் ஆலயத்தின் புணர்நிர்மான பணிகள் மிகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்பணிகளிலே அன்னதான மண்டபம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது ஆலயத்திலே மேலும் சில திருப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது
கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது
மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்
Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI
இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.
1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.
இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.
அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்