புதன், 17 ஜூலை, 2013

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும்,
நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர். சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ?

ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார்.

மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி... கடவுள் ஒன்றுதான் ! இந்து மதம் ஒரு சனாதன தர்மம், சமதர்ம சமுதாயத்தையே அது சிருஷ்டித்தது என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்