ஞாயிறு, 5 மே, 2013

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும்


உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதைக் கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்தக் கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலு
ம் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.



பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்தக் கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்தக் கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்தக் கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்தக் கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்தக் கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதைப் பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்