முன்னதாக வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி வீரகத்தி விநாயப்பெருமான் உள்வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் புதிதாக கொழும்பில் இருந்து வடிவமைத்து தருவிக்கப்பட்ட சித்திரத்தேரில் எழுந்தருளினார் விநாயகப்பெருமான்.
மிகவும் பத்தி பூர்வமாக நடைபெற்ற எம்பெருமானின் தேர்த்திருவிழாவினை காண தீவத்தின் பல பாகங்களில் இருந்தும், யாழ் குடாநாட்டிலிருந்தும், மற்றும் பலர் வெளிநாடுகளில் இருந்தும் வருகைதந்திருந்தனர். கடந்த காலங்களை விட விநாயகப்பெருமானின் திருவருளால் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வருகைதந்திருந்தனர்.
எம்பெருமானின் தேர்த் திருவிழா நிகழ்வினை இலங்கை ரூபவாகினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வாயிலாக நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
தீவக மக்களுக்கெல்லாம் வழித்துணையாக இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானின் தேர்த் திருவிழா நிகழ்வுகளை தீவகம் இணையம் பதிவு செய்வதில் மட்டற்ற மகிழ்சியடைகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்