வெள்ளி, 23 நவம்பர், 2012

1. விநாயக சதுர்த்தி என்றால் என்ன?

விநாயக சதுர்த்தி


1. விநாயக சதுர்த்தி என்றால் என்ன?
அகஸ்தியன் துருவனாகி, திருமணமானபின் துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி, ஒளியான நன்னாளே “விநாயக சதுர்த்தி”

விநாயகர் சதுர்த்தியன்று, நாம் அனைவரும் மண்ணிலே விநாயகரைச் செய்து, அதற்கு கரும்பு, இனிப்புக் கொழுக்கட்டை, கனி வகைகள் வைத்து, நாம் பூஜித்துவிட்டு, அடுத்து மண்ணிலே செய்த அந்த விநாயகரை, கடலிலே கரைத்து விடுகின்றோம்.

அதனின் உட்பொருள், இந்த மனித வாழ்க்கையில், கடந்த ஒரு வருட காலத்தில், நாம் நல்லதையே எண்ணிச் செய்தாலும், நம்மை அறியாது சலிப்பு, சங்கடம், குரோதம், அவசரம் ஆத்திரம், வெறுப்பு, பயம், இதைப் போன்ற உணர்வுகள் நமக்கு வழிகாட்டியாக அமைந்து இருந்தாலும், அவை அனைத்தும் வேதனை கொடுக்கும் செயலாகும்.

இவ்வாறு, நமக்குள் சேர்த்துக் கொண்ட, “தீய வினைகளை அகற்றிவிட்டு”, நல்வினைகளை நமக்குள் சேர்க்கத் தூண்டும் நாளே, விநாயகர் சதுர்த்தி.

நம் வாழ்க்கையில் நம்மையறியாது சேர்ந்துள்ள வினைகளை நீக்குவதற்காக, இந்தச் சுவைமிக்க உணவுகளைப் படைத்துவிட்டு, இந்த உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள்சக்தி, நாம் பெற வேண்டுமென்று ஏங்க வேண்டும்.

2. விநாயகனுக்கு கொழுக்கட்டை படைப்பதன் விளக்கம்
அவ்வாறு ஏங்கி, நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் அருளிய அந்த அருள் வாக்கின்படி, நாம் செயல்படுவது அனைத்தும் அது, சுவைமிக்கதாக ஆக வேண்டும், என்ற அந்த எண்ணத்தை, நமக்குள் சேர்த்துக் கொள்ளக் கூடிய அந்த நினைவான நாள்தான், விநாயக சதுர்த்தி.

இயற்கையிலே, நாம் தாவர இனங்களின் சக்தியைப் புசிப்போமேயானால், அந்தத் தாவர இனச் சத்திற்கொப்பத்தான், நம்முடைய எண்ண அலைகளும் அதனுடைய இயக்கங்களும், அதனுடைய நோக்கங்களும் செல்லுகின்றன.

நாம் இன்று, சுவையாகச் சமைத்து, ஒவ்வொன்றையும் சேர்த்து, நமக்கு வேண்டிய நிலைகளுக்கொப்ப சமைத்து, நாம் ரசித்து சுவைத்துச் சாப்பிடும் இந்த செயலை செய்யவைக்கும் வினைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டாலும், இதைத்தான் நாம் மெய் ஒளி காணும் அந்த சதுர்த்தி, விநாயக சதுர்த்தி.

அதாவது, முந்தைய வினைகளை நிறுத்திவிட்டு, இன்றைய நிலைகளில், ஞானிகளின் அருள் வாக்கினை நாம் பெறக்கூடிய தகுதியினை, நமக்கு நினைவுபடுத்தும் நன்னாள் இது.

நாம் இன்று கொழுக்கட்டை செய்துவைத்து, சுவையான வினையைச் சேர்க்கின்றோம் அல்லவா. இதனை, நினைவுபடுத்துவதன் நோக்கங்கள், ஒருவன் தவறு செய்வான் என்றால், அந்தத் தவறைக் கண்ணுற்றபின், அந்த உணர்வின் சத்து, நமது உடலுக்குள் சேராவண்ணம் தடுப்பதற்கு, அன்பர்கள் அனைவருமே, “ஓம் ஈஸ்வரா” என்று எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை, எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று, அந்த ஞானிகளின் அருள் வாக்கான, அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து, அந்த ஞானியின் ஒளி கொண்டு, நமக்குள் அது சேர்க்கப்படும் பொழுது,
பிறர் நமக்கு எதிரில் செய்து கொண்ட,
அந்த எரிச்சலின் வேதனையான உணர்வுகள்
நம்மைச் சாடவண்ணம் தடுப்பதற்கும்,
அதை நீக்கிவிட்டு,
நல் வினையை நமக்குள் சேர்க்கின்றோம்.
ஆக, அப்படிச் சேர்க்கச் செய்யும், அதை நினைவுபடுத்தும் நன்னாள் தான், விநாயக சதுர்த்தி.
3. நமக்குள் சேரும் தீயவினைகளை நிறுத்த வேண்டும்
நாம் நல்ல உணர்வு கொண்டு இருந்தாலும்,
பிறரிடம் நாம் சந்தித்துப் பேசும் உணர்வுகளில்,
அவர்கள் குடும்பத்திலேயோ, அல்லது வேறு தொழில் வழிகளிலோ,
அல்லது புற நிலைகள் கொண்டு, பேசி உறவடிய நிலைகள் கொண்டு,
அவர்களுக்குள் எதிர்நிலையாக இருந்தால், அதே நண்பனிடத்தில்
வியாபார ரீதியாக ஆர்வ உணர்வுகள் கூட்டப்பெற்று,
அந்த உணர்வின் தன்மை நமக்குள் பட்டாலும்,
இந்த உணர்வின் சத்து வித்தாக ஊன்றி,
அதனின் நிலையாக எண்ணங்கள் தோன்றினாலும், 
அவர் உடலிலே விளையவைத்த, அந்த உணர்வுகள்,
நாம் கேட்கின்ற உணர்வுக்குள், நமக்கு தெரியாமலேயே இது கலந்து,
அதனின் வித்தாக ஊன்றி,
அதனின் நிலைகள் நமக்குள் சிறுகச் சிறுக விளைந்து,
அந்த உணர்வின் தன்மை நமக்குள் நோயாக முளைய வைக்கும்.
நாம் தவறு செய்யவில்லை.
       
இதைப்போன்றுதான் முழுமையடைந்த நிலைகள் கொண்டு, அது கலக்கப்படும் நிலைகள், சூரியன் எப்படித் தன் வெப்ப காந்தங்களை வெளிப்படும்பொழுது, அதனுடன் அல்ட்ரா வயலட்என்ற நஞ்சினைக் கலந்து, அது ஓடி வரும் வேகத்தில், “எதனுடன் இணைக்கின்றதோஅதனின் உணர்வைத் தாங்கி, அதனின் மணமாக செயல்பட்டாலும், அந்த மணமாக நாம் நுகரும்பொழுது, அதே எண்ணமாக நமக்குள் இயக்குகின்றது.

ஆக, இதைப்போல நமக்குள் பதிய வைத்த எண்ணங்களின் நிலைகளில்,  பிறர் வெளிப்படுத்தும் உணர்வினை நாம் கவர்ந்து, நமக்குள் கலக்கப்படும்பொழுது,  நம் உயிர் அதை,
புதுப்புது எண்ணங்களாக உருவாக்கி,
புதுப்புது உணச்சிகளைத் தூண்டும் நிலைகளாக
மாற்றிக் கொண்டேதான் இருக்கும்.

இப்படி மாற்றிக் கொண்ட வினையின் தன்மைகளில், நஞ்சின் தன்மை அதிகமாகிவிட்டால், நாம் தவறு செய்யாமலேயே அந்த வினைக்கு நாயகனாக நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. ப்படி ஆன்மாவில் சேரும் அந்த வினையை, நிறுத்த வேண்டும்.

நமது வாழ்க்கையில், நம்மையறியாது நாம் எடுத்திடும் எண்ணங்கள், நமக்குள் தீய வினைகளாக உருப்பெறும் நிலையிலிருந்து நமக்குள் வராது தடுத்திடும் நிலையே விநாயக சதுர்த்திஎன்பது.
4. நம் அன்றாட வாழ்க்கையில் வரும் தீயவினைகளின் செயல்கள்
இப்பொழுது மனித வாழ்க்கையில் நடந்த வினைகள் நமக்குள் எப்படி கேன்சராக மாறுகின்றது?  வாழ்க்கையில், இப்பொழுது நாம் ஒருவருடன் தொழிலுக்காகச் செல்கின்றோம்; அவருடன் ஆசாபாசத்துடன்  பேசுகின்றோம். தொழில் செய்தால், லாபகரமாக இருக்கும் என்று எண்ணி, அவருடன் தொடர்பு கொள்கிறொம்.

தே சமயத்தில், நம்மிடம் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடிப்பைத் தூண்டியவர், அவருக்கு எதிர்பாராத வகையில் தடை ஏற்பட்டுவிட்டால், அதனால் அவர் வேதனைப்பட்டு,
நாம் வாக்கு கொடுத்தோமே,
செயல்படுத்த முடியவில்லையே,
அந்த மனிதன் என்ன சொல்வான்
என்று தன் கௌரவத்தைக் காத்திட எண்ணுகின்றார்.

அப்படி, அந்த உணர்வுடன் இணைக்கப்படும்பொழுது, “நாளை என்னைக் குறைவாக நினைத்துவிடக்கூடாதேஎன்ற, ஒவ்வொரு நிலைகளிலும் வேதனை என்ற உணர்வு, அவருக்கு வருகின்றது.

ஆக, அது நஞ்சு. அதனுடன் சேர்த்துக் கொண்ட மனம்,
இப்படிச் சொல்வார்களே
இப்படிச் செய்வோம் என்று எண்ணினோமே
என்ற உணர்வுகளை எடுத்தபின்,
இந்த உணர்வு கலந்த வித்தாக, இந்த நினைவின் அலைகள் ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.

ஆனால், அவர் செய்த நிலைகளில் இந்த சந்தர்ப்பம், அந்த நண்பனிடத்தில் சொன்ன நிலைகளை எண்ணும்பொழுது,
நாளை நம்மை அவமதித்துப் பேசுவானே,
மதிக்கமாட்டானே
என்ற இந்த உணர்வுகள் கலந்து,
இந்த உணர்வின் நிலைகள் ஓர் வித்தாக மாறி, தன் உடலுக்குள் பதிவாகிவிடுகின்றது.

ஆக முதலில் சொன்ன நண்பரோ, இவர் வருவார் என்றும், “தன்னுடன் கூட்டாகத் தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினேன், அவர், நல்ல முறையில் வந்ததால் நல்ல பாதை கிடைத்ததுஎன்று இவரின் மகிழ்ச்சியைப் பலரிடம் சொல்லி வைப்பார்.

அப்பொழுது, உணர்வின் நிலைகள் கொண்டு, அவருக்கு ஆனந்தமும் சொல்லிய நிலைகளில் இருக்கும். ஆக, இனி தொழிலில் முன்னேறலாம் என்ற மகிழ்ச்சியான உணர்வை எடுத்து வைத்திருக்கின்றார், என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால், முதலில் சொன்னவரின் சந்தர்ப்பம், தன்னால் செயல்படுத்த முடியாத நிலைகளில்,
குறை ஏற்பட்டால் அவரை ஏமாற்றிவிடுவோமோ
என்ற நிலைகள் வந்தவுடன்,
அச்ச உணர்வுகள் உந்தப் பெற்று
அதனால் பய உணர்வுகள் தனக்குள் கலந்தவுடனே, 
சிந்திக்கும் திறன் இழந்து,
தீயவித்துகள் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.

யாரை நினைத்து, யாருக்குச் சொல்லவேண்டும் என்று எண்ணினாரோ, ஊழ்வினையாகப் பதிவாகி, அந்த நண்பனை எண்ணும்பொழுது,
அவன் முகத்தில் எப்படி விழிக்கிறது
என்ற இந்த பய உணர்வுகள்,
அவரை நினைக்கும்பொழுது பயந்துபோகச் சொல்லும்.

அப்பொழுது சொல்லிவிட்டு, ஆசையை ஊட்டிவிட்டு, சொன்ன கெடுவுக்கு வராவிட்டால், “என்ன காணோமே என்ற நிலை வரப்படும்பொழுது, அவரைத் தேடிச் செல்கின்றோம்.

இவரைக் கண்டவுடன், என்ன பதில் சொல்வதுஎன்று இந்த அச்ச உணர்வு, இவரைப் பார்க்கவிடாது ஒதுங்கிச் செல்வார்.

இவரைப் பார்த்து, “நம்மை மோசடி செய்ய வந்தவன் போல் இருக்கிறது, அதனால்தான், விலகிச் செல்கின்றான், என்ற உணர்வுகள் புது வித்தாக விளைந்துவிடுகின்றது.

அடுத்த நண்பர்களிடத்தில் ஒலிபரப்பு செய்து, ந்தத் தொழிலில் முன்னேறுவேன் என்ற எண்ணத்தைக் கொண்டு வரப்படும்பொழுது, இந்த எண்ணத்திற்கு மாறாக வந்தவுடன்,
வேதனை என்ற நிலையும், அதே சமயத்தில்,
அடுத்தவர்கள் நம்மை இப்பொழுது மதிக்கமாட்டார்களே,
இவர் வேலையே இதுதான், என்று எண்ணுவார்களே”
என்று மனம் சங்கடப்படுவார்.

இந்த நிலையில், தன்னுடன் சகோதரர்களோ, தாய் தந்தையரோ, தன்னுடைய நண்பர்களோ,
ஆசை காட்டுகிறவன் கையிலே சிக்குகின்றாயே,
அவர்கள் சொல்லியது போல் ஆகிவிட்டதேஎன்ற வேதனை வரும்.

அன்று அவர் சொன்னார்,
இன்று நடக்கவில்லையே
என்ற எண்ணங்கள் இங்கு ஓங்கி வளர்ந்தவுடனே,
முதல் நண்பரின் சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட நிலைகள், செயல்படுத்தமுடியாது,

அவரைக் கெடுத்துவிடக்கூடாது என்று நாம் சொன்ன நிலைகளுக்கு, அடுத்து, நம்மை மதிப்பு குறைவாக எண்ணுவார்களேஎன்று தன்னைக் காத்திடும் நிலைகள் கொண்டு,  உண்மையை சொல்லாமல் மறைத்து விடுவார்.

மறைத்த உடனே, அடுத்தபடி இவரின் நிலைகள்,
இதெல்லாம் வேண்டாம்,
பார்த்துச் செய் என்று சொன்னார்களே
என்ற உணர்வுகள் அவருக்குள் வித்தாகி, இந்த உணர்வின் தன்மை வலுவாகி, அவர்களுடைய எணங்கள் இங்கே ஓங்கி வளரப்படும்பொழுது இங்கு எதிரியான உணர்வுகள் சேர்க்கப்பட்டு, இப்படி உணர்வின் தன்மைகள் மாறுகின்றது.

நாம் குழம்பு வைக்கும்பொழுது, அதிலே எல்லாப் பொருள்களும், கலவை சமமாக இருந்தால்தான், சுவையாக இருக்கும். ஆனால், புது உணர்வுகள் மாறப்படும்பொழுது, இந்த குழம்பின் சுவை மாறுவது போன்று, இவரின் உணர்வின் நிலைகள் வித்தாக மாறுகின்றது.

ஆக இதைப்போல நாம் எண்ணிய எண்ணங்கள், அது வித்தாக (வினையாக) மாறி, அங்கே எதிரியாக உருவாகின்றது. அதே சமயத்தில் நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள், ஊழ்வினையாகப் பதிவாகி, வினைக்கு நாயகனாக நமது உடலில் இருந்து வரக்கூடிய மணம், அது உருவாகிவிடுகின்றது.

இந்த மணமே, நாம் சிந்திக்கும்பொழுதெல்லாம் வேதனையும், 
நாம் சுவாசிக்கும்பொழுது உடல் உறுப்புகள் சீராக இயங்காதபடி,
நாம் எடுத்துக் கொண்ட கலக்க உணர்வுகள்,
நம் உயிரின் நினைவலைகளுக்கு இயக்கினாலும்,
நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகளுக்கு வரப்படும்பொழுது
அது விரிவடைந்து இயக்கும் தன்மை குறைந்து,
அதற்குள் நாம் எடுத்துக்கொண்ட நிலைகள்
சரியாக விரிவடையும் பொழுது அதனுடைய அழுத்தத்தை,
வெளித்தள்ளும் நிலையை இழந்துவிட்டால்,
உள்ளே சிறு துகள்கள் நெருங்கி,
அதே சமயத்தில் சுவாசப்பைக்குள்
அதாவது நுரையீரலுக்குள் இருக்கும் இந்த உணர்வுகள்
பற்களைப்போன்று, அது அழுத்தி
சிறிதும் இல்லாதபடி, வெளி உந்தும் நிலையிலும்,
அதனை வழித்திடும் நிலைகொண்ட நுரையீரலில்
இவைகள் சிறுகச் சிறுக தேங்கி, அதனுடைய தன்மைகள்,
நாம் இப்பொழுது ஒரு கவலையோ
அல்லது பசப்பு உண்டான நிலைகள் மேலே பட்டால்,
நமக்குள் அரிப்பு ஏற்படுவதுபோல,
உள்ளே அந்த நுரையீரலில் அந்த உணர்ச்சிகள் தூண்ட,
நீர் கோர்த்து, அந்த சுவாசப்பைகளில் இது நீராக வடிந்து,
அந்த சலிப்பு என்ற நிலைகளை எடுத்துக் கொண்டால்
உப்புச் சத்து அதிகமாகிவிடுகின்றது,

சலிப்பு என்பது உப்பின் சத்து. நாம் நைப்பு என்று சொல்லுகின்றோமே, இதைப் போல உணர்வுகள் மாறி, சலிப்பு என்ற நிலைகள் அடையப்படும்பொழுது, இந்த உறுப்புகள் நீர் கோர்த்து, அந்த சுவாசப்பை சரியாக இயங்காதபடி, ஆஸ்மா போன்ற நோய்கள் வரும்.

அடிக்கடி சலிப்பின் தன்மையை அடைய நேர்ந்தால், அதே உப்புச் சத்தின் நிலைகள் இரத்தத்தில் சேர்க்கப்பட்டு, சிறுநீரகம் சரியாக இயங்காத நிலைகள் அடைந்துவிடுகின்றது. 

இப்படி நாம் எடுக்கும் உணர்வுகள், ஆன்மாவில் சேர்ந்த சுவாசம், இதைப்பிரிக்கும் நிலை இழந்து, நாம் எடுக்கும் சலிப்பின் தன்மைகள் இரத்தத்துடன் கலந்து, நாம் உணவாக உட்கொள்ளும் அல்லது, நமது எண்ணத்திற்குள் கலந்து சென்ற
அந்தத் தீய விஷத்தை,
"இரத்தத்திற்குள் கலக்காமல்
பிரிக்கும் நிலைகளின் செயலை" இழந்து விடுகின்றது.

அப்பொழுது, நாம் சிந்திக்கும் நிலையை இழந்து விடுகின்றோம்.  நாம் எதைச் சுவாசித்தாலும், நாம் எப்படி உணர்வின் தன்மையை உணர்வில் உள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் தன்மையை ஆன்மாவாக மாற்றுகின்றதோ, இதைப்போல இந்த ஆன்மாவில் பிறர் எண்ணும் உணர்வுகள் நமக்குள் கவர்ந்து, ஊழ்வினையாகப் பதிந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமது ஆறாவது அறிவிற்குள் இந்த ஆன்மாவாக மாற்றியபின், இது சுவாசிக்கும்  உணர்வுகள், நம் உணவுடன் கலந்து, அது இரத்தத்துடன் கலந்து வந்தாலும், இது அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது.

அந்த நிலையில், வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால், நமக்குள் இருக்கும் சிறுநீரகம், இந்த நஞ்சினைப் பிரிக்கும் செயலை, இழந்துவிடுகின்றது.

அது செயல் இழக்கப்படும் பொழுது, அறுசுவை உணவு உட்கொண்டாலும், சுவை அற்றதாக நம் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து, யார் சமைத்துப் போட்டர்களோ, அவருடன் சண்டையிடும் நிலையும், வெறுப்பும், வேதனையும் அடைகின்ற தன்மை அதிகமாகும்.

அந்த வேதனையின் தன்மை அதிகமாகும்பொழுது, மனிதனின் பரிணாம வளர்ச்சியின் நிலைகளில், நம் நஞ்சினை நீக்கிடும் இந்த ஆறாவது அறிவின் தன்மையை, முழுமையாக அந்த நஞ்சினை அடையும் தன்மையாக ஆக்கி விடுகின்றது.
5. தீயவினைகளை வேகவைத்து சதுர்த்தி செய்தல் (வளராமல் செய்தல்)
இவ்வாறு அடைந்த நிலைகள், நமக்குள் தீய வினைகளாகச் சேர்ந்து, மனிதனின் உணர்வின் நிலைகளை, நாம் எப்படி பரிணாம வளர்ச்சியில் இருந்து வந்தோமோ, அதன் நிலைக்கே (ஆரம்ப நிலைக்கே), நமது உயிர் ழைத்துச் சென்றுவிடுகின்றது.
புழுவிலிருந்து மனிதனாக,
பரிணாம வளர்ச்சியில் நஞ்சினை நீக்கி வந்தோம்,
மனிதனானபின், நஞ்சினை நுகர்ந்து வளரும் நிலைகள் வந்தால்,
மீண்டும் நஞ்சு கொண்ட உயிரனங்களாக,
நம் உயிர் நம்மை உருவாக்கிவிடும். 
இந்தத் தீய வினைகளை (தீய வித்துகளை) வளரவிடாமல் தடுக்கவேண்டும் அல்லவா?

அதற்குத்தான்,  நமது வாழ்க்கையில், நாம்    எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றோமோ, நுகர்கின்றோமோ, உடனே அதை சதுர்த்தி  செய்யவேண்டும் (வளர விடாமல் செய்ய வேண்டும்) என்பதற்குத்தான், விநாயக சதுர்த்திஎன்பதை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், இயற்கையில் விளைந்தவற்றை உணவாகப் புசித்து வந்துள்ளோம்.  ஆனால் மனிதனான பின், இயற்கையில் விளைந்த அனைத்தையும் வேகவைத்து, சுவையா உணவாக உண்ணுகின்றோம். 

தாவரத்தில் விளைந்ததை, வேக வைத்துவிட்டால்,
அது மீண்டும் முளைக்காது.
இதைப் போன்று, நாம் நமது வாழ்க்கையில்,  வேகாநிலை அடைந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரொளியைக் கவர்ந்து, நமது இரத்தங்களிலே செலுத்தி, உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

அப்படி நம் உடல் முழுவதும் பரவச் செய்து,
நம்மையறியாது நுகர்ந்த,
நுகரும் தீமைகளை,  தீய வினைகளை
"துருவ நட்சத்திரத்தின் பேரொளி கொண்டு
வேக வைத்து,
நஞ்சை நீக்கி
,
ஒளியின் தன்மையாக,
ஒளியான உணர்வுகளை வினைக்கு நாயகனாக்கி,  
பிறவியில்லா நிலை என்னும், அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்,
அனைவரும் பெறவேண்டுமென்று என்று தவம் இருப்போம். எமது அருளாசிகள்.

1 கருத்து:

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்