நியூ யார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒரே மணி நேரத்தில் சென்றடையும் ரயிலை அமெரிக்க பொறியாளார் டேரில் ஆய்ஸடர் உருவாக்கியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஒரு மணி நேரம் கூட ஆகாதாம்! வெறும் 45 நிமிடங்கள் போதுமாம்!
மணிக்கு 4000 மைல்கள் செல்லக் கூடியது இந்த ரயில். இது வருவது போலத் தோன்றி ஒரு நொடியில் பல மைல்கள் தள்ளி பறந்திருக்கும்!இதன் வேகம் கருதி இதில் செல்வதை பூமியில் விண்வெளிப் பயணம் என்று அழைக்கிறார்
டேரில் ஆய்ஸ்டர். வெற்றிடத்தில் செல்வதால் இதை வெற்றிட ரயில்(Vac Train) என்றே அழைக்கிறார்கள்.
இன்னும் பத்தாண்டுகளில் ஓடத் தொடங்கும் என்று எதிர் பார்க்கும் இந்த ரயிலை ஓட்ட இது வரை 60 லைசன்சுகள் கொடுக்கப் பட்டுள்ளன. நகரங்களுக்கு இடையே தரை மீதும் கடலுக்கடியிலும் இதை ஓட்டலாம். வழக்கமான அதி வேக வண்டிகளை விட பத்தில் ஒரு மடங்கு செலவே ஆகும்
இந்த வெற்றிடத்தில் காற்றால் தள்ளப் படும் கருத்து ஒன்றும் புதிது இல்லை. நூறு வருடங்களுக்கு முன்பே ராக்கெட் உருவாக்குவதில் முன்னோடியான ராபர்ட் கோட்டர்டால் முன் வைக்கப் பட்டது. அறிவியல் கதைப் புதினங்களான லோகனின் ஓட்டம்(Logan's run) மற்றும் பாரன்ஹீட்451 ஆகியவற்றிலும் இந்த கருத்து பயன் படுத்தப் பட்டுள்ளது. தொலைக் காட்சி தொடரான ஸ்டார் ட்ரக்கிலும் இது போல காண்பிக்கப் பட்டது.
வெற்றிட ரயில் இங்கே எப்போ வரும்? இங்கே வரும் போது சிங்கப்பூருக்கும் டோக்யோவுக்கும் நாமும் பயணிக்கலாமே இதில்!





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்