2009 ஆண்டு எனது நண்பர் மாறன் அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து போக வேண்டும் சிவா என்று கூறினார் . (சபரிமலைக்கு செல்லவேண்டும் என்றாள் 10000 ரூபாய் தேவை இன்றைய நிலையில்)
நானோ சரி சிவா உங்களை யாரோடாவது அனுப்பி வைக்கிறேன் என்றேன். பிறகு எனது
இன்னொரு நண்பர் ஜெயசந்திரன் என்பவர் வீட்டில் கோவில் கட்டவேண்டும் வேலைக்கு
ஆள்வேண்டும் என்றார் . நானோ மாறன் சிவாவை வர சொல்கிறேன் என்றேன் . மாறன்
அவர்களிடம் கூறினேன் . அவரும் வேலைக்கு வந்தார் . சுமார் 20 நாட்கள் வேலை
நடந்தது. ஒருநாள் ஜெயசந்திரன் அவர்கள் வீட்டிற்க்கு சென்று இருந்தேன் .
அப்போது எத்ர்ச்சையாக அவரிடம் மாறன் சிவா சபரிமலைக்கு மாலை போட்டு போக
வேண்டும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது என்றேன். அவர் சிவா எங்களோடு
வரசொல்லுங்கள் அவரின் முழு செலவும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் .
எனக்கோ மகிழ்ச்சி . மாலை போடும் நாள்
(தூத்துக்குடி யில் இருந்து சபரிமலைக்கு பாதையாத்திரை சுமார் 300to350km 12
நாள் யாத்திரை ) மாறன் அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்க்கு
வந்தேன் .
வந்து அன்று இரவு தூங்கும் போது கனவு மாறன் அவர்கள் ரோட்டில் ஓடி சென்று
கடலில் விழுவது போல . எனக்கு காலையில் மனமோ ஏதோ நடக்க போகிறது என்று
தெரிகிறது . 5 மணி வரை யோசித்தேன் 6 மணிக்கு என் அம்மாவிடம் சென்னை
போகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினேன் . ஜெயசந்திரன் அவர்களுக்கு போன்
செய்தேன் சிவா எங்கு போகிறீர்கள் என்று அவர் சிவா வல்லநாடுகிட்ட போகிறோம்
என்றார் . சிவா நானும் வருகிறேன் என்றேன் . அவர் வாருங்கள் என்றார் .
பஸ்சில் ஏறி வல்லநாடு கிளம்பினேன் . வல்லநாட்டில் இறங்கி அவர்களோடு இணைந்து
நடக்க ஆரம்பித்தேன் . நான் மட்டும் தான் கட்டு கட்டாமல் அவர்களோடு
செல்கிறேன் .சதுரகிரியில் அதிசயம்
நானும் எனது நண்பரும் பைபிள் வசனமும்

அதில் வந்த வசனம் மகனே நீ செல்லும் பாதை சரியான பாதை அதில் உள்ள முட்களையும் ,கற்க்களையும் சீர்படுத்தி உன்னை அழைத்து செல்வேன் என்று வந்தது . (அந்த வசனத்தின் குறிப்பு சரியா ஞாபகம் இல்லை) மனதிற்க்கு மகிழ்ச்சியும் சித்தர்களின் மேல் உள்ள பக்தியும் அதிகமானது .
நான் பார்த்தவை பைபிள் வசனமாக ஏற்று கொள்ளவில்லை ,என்னுடைய குருநாதர் அத்திரி மகரிஷியின் போதனையாக எடுத்துகொண்டேன். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் என்னிடம் இந்து மத தெய்வங்களை பற்றி பேசவே இல்லை . இது எல்லாம் குருநாதர் மகிமை.
அந்த பெண் ஆத்மாவை விரட்டியதும் ,கண்ணெதிரே நடந்த அதிசயமும்

ஆரம்பித்தது
.பிறகு எங்கள் ஊரில் மொட்டை கோபுரம் என்ற இடம் கடற்கரை அருகில் உள்ளது .
அங்கு அழைத்து வர சொன்னார் . நாங்களும் ஆட்டோவில் அவளை அழைத்து கொண்டு
சென்றோம் .அவர் சேவல் அரிவாள் ,எலுமிச்சைபழம்,முட்டை,தேங்காய், போன்றவைகளை
எடுத்து கொண்டு அவரும் பின்னால் வந்தார் . இந்த நிகல்வு நடக்கும் போதே அந்த சாமியார் எதும் செய்யவில்லை,ஆனால் அவரது பல் தனியாக கலந்து கீழே விழுவதை கண்டோம் . பிறகு அவளும் மயங்கி விழுந்தால் அவளை அழைத்து கடலில் குளிக்க சொன்னார் . நாங்கள் அந்த சாமியாரிடம் சென்று பல் கிழே விழுந்ததே ஏன் என்று கேட்டோம் .அவர் வாயை காட்டினார் அவர் பல்லை ஒருவர் உடைத்தது போல ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது .அவர் எனது கால்ளை பாருங்கள் என்று காட்டினார் .சுமார் இரண்டு கால்களிலும் ஐம்பது வெட்டுக்கள் இருக்கும் .அதில் ஒரு வெட்டு மட்டும் இப்போது வெட்டியது போல இருந்தது . இது என்ன என்று கேட்டோம் . அவர் அந்த ஆத்மாவை நான் விரட்டியதால் போகும் போது கோபத்தில் அது செய்த வேலை என்றார் .
(அந்த நேரத்தில் இந்து மதத்தயோ ,இந்து மத கடவுள்களை பற்றியோ ஒன்றும் தெரியாது .இந்து மத தெய்வங்களை பேய் என்று சொல்லிக்கொண்டு இருந்த காலம் அவர் சொன்னது கேட்டு குழப்பம் மற்றும் கோபம் வந்தது)நாங்கள் கேட்டதற்க்கு அவர் சிவன் அருள் இருப்பவர்களை எந்த துஷ்ட சக்தியும் எதும் செய்யாது என்றார் . எங்களுக்கு புரியவில்லை . அவர் இந்த ஆத்மாவை விரட்ட வாங்கிய பணம் ரூபாய் 100 மட்டும் . இந்த நிகல்வுகள் மிகவும் அதிசயமாக இருந்தது . மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .
ஹனுமனின் அருள்
சில வருடங்கள் கழித்து அந்த இடத்தை ஒரு கேட்ரிங் பயிற்சி
சொல்லிக்கொடுக்கும் நிறுவனம் வாங்கியது .அங்கு இவளின் தம்பி சேர்ந்தான் .
அவனை பார்க்க இவள் அங்கு வந்தால் நல்ல பூ செண்டு போட்டுட்டு வாசமா வந்தா நா
அங்கவுள்ள வேப்ப மரத்தில இருந்தேன் . இவள ரொம்ப பிடிச்சது . உடனே இவல்ட்ட
வந்துட்டேன் .நா எந்த தப்புமே செயல நா இன்னும் கொஞ்ச காலம் இவள்ட
இருந்துகிறேன் .என்று அந்த ஆத்மா உருக்கமாக பேசியது .கண்ணீர் வரவைத்தது .
மீண்டும் நாளை அந்த ஆத்மா அவளை விட்டு விரட்டிய நிகழ்வும். அதிசயமும் நாளை
தொடரும்ஹிந்துவும்,முஸ்லீமும் எனது அனுபவம்

2001,2002
ஆகிய ஆண்டுகளில் நான் அதிகமாக இருந்தது எனது நண்பர் காசிம் வீட்டில்தான்
இரவு படுக்க மட்டும் தான் வீட்டிற்க்கு செல்வேன் . அந்த காலகட்டத்தில் தான்
முஸ்லீம்களை பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன் .2002 டில் நண்பர்
திருநெல்வேலியில் உள்ள ஒரு கேட்ரிங்க் படிப்பிற்க்காக சென்றார் . அவனை
பார்க்க அவனின் குடும்பம் ஒருநாள் திருநெல்வேலி சென்றது . அவனை பார்த்து
விட்டு ஊருக்கு வந்தனர் . வழக்கம் போல நான் ஒருநாள் காசிம் வீட்டிற்க்கு
சென்றேன் .இரண்டாவது மாடியில் குளிர்சாதனபெட்டி உள்ளது. வழக்கம் போல
தண்ணீர் குடிக்க மேலே சென்றேன் .அங்கு காசிம் அக்கா இருந்தார்கள் . திடீர்
என்று என்னிடம் கோபமாக பேசினார்கள் . வீட்டை விட்டு வெளியே போ என்று காரணம்
இல்லாமல் கத்தினார்கள் . நானும் மன வருத்தத்தில் இனி இங்கு வரக்கூடாது
.என்று நினைத்து விட்டு வீட்டிற்க்கு வந்தேன் . ஒரு அரைமணி நேரம் கழித்து
காசிம் அம்மா எனக்கு போன் செய்தார்கள் .உடனே வீட்டிற்க்கு வாஎன்று நானும்
வீட்டிற்க்கு சென்றேன் . வீட்டிற்குள் போகும் போது காசிம் அக்கா உறத்த
குரலில் உள்ளே வராதே என்று கத்தினார்கள் . உள்ளே சென்று பார்த்தால் தலை
முடியை விரித்து போட்டுக்கொண்டு அக்காவும் சுற்றி பள்ளிவாசலில்
ஒதுபவர்களும் .முன்னாள் கூரானும் இருந்தது அப்போது அம்மா அக்காவுக்கு பேய்
பிடித்து இருக்கிறது .அதனால் தான் உன்னிடம் காரணம் இல்லாமல் கோபம் பட்டா
என்றார்கள் . சிறிது நேரத்தில் அவனை வெளியே அனுப்பு என்று கத்திக்கொண்டு
அலறினார்.உடனே நானும் வெளியே வந்து விட்டேன் .பிறகு மூன்று நாட்க்களாக
சுமார் 25 பள்ளிவாசலுக்கு கூட்டி சென்றனர் .பலனே இல்லை .காசிம் அக்காவை
யாராலும் கட்டுப்படுத்த முடிய வில்லை . பிறகு நடந்த்தை நாளை பார்ப்போம்
.அதில்தான் முஸ்லிம்களின் உண்மையான முகம் தெரிந்தது .


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்