மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
வரலாறு
மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்திசையிலே உள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தழவ முதன்மையானது.இங்கு உலகப்புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகம்களில் ஒன்றான ஊர்காவற்றுறை உண்டு இந்தத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சி புரியும் மணியகாரன் பதவிவகித்தோர் நிலைகொண்டிருந்த இடம் வேலணை என்பதால் தீவுகளுக்கு வேலணை ஒரு தலைநகர் போல விளங்குகிறது.
வேலணை கிழக்கு,மேற்கு என இரு பிரிவுகளை உடையது வேலனை மேற்கில் கோவில் கொண்டு எழுந்தருளி அடியவர்களுக்கு எளியவராகி அருள் புரிந்து கொண்டிருக்கிறார் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் கோவில் தாபிக்கப்பட்டிருக்கும் தலத்தின் பெயர் பெரியபுலம் என்பதாகும் இதனால் இவர் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலம்களில் பல சைவக்கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டன என்பது வரலாறு அப்பொழுது அவர்களின் கைகளில் அகப்படாமல் முடியோடு நித்திய நைநித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் ‘முடிப்பிள்ளையார்’ என்ற சிறப்பு பெயரும் இக்கோயிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட மூர்த்திக்கு மகாகணபதி என்று கும்பாபிஷேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதனால் மகா கணபதிப்பிள்ளையார் என்றும் வழங்கப்படுகிறது.
இத்திருக்கோவிலைச் சூழ சமய விசேட நிருவாண தீட்சை பெற்ற சைவர்களால் வசித்து வந்ததனாலும் அச்சைவர்களாலே நித்திய பூசைசெய்யப்பட்டு வந்ததாலும் அவர்களுடைய பரம்பரையில் தாபிக்கப் பெற்றனாலும் சைவப்பிள்ளையார் கோவில் என்றும் கர்ணபரம்பரையில் பேசப்படுவதுமுண்டு. இந்த விநாயகப் பெருமான் கரசரணாதி அவயவங்களை வியக்தமாக தேற்றமளிக்க செய்யப்பட்டிருக்காவிடினும் இம் மூர்த்தியை யாழ்ப்பாணத்து ஊரெழுவிலே ‘பெரியார்’ என்று எல்லேராலும் பெற்றப்பட்ட சோமசுந்தரக்குருக்கள் அவர்கள் சுயம்பு மூர்த்திக்கு நிகரானது எனக்குறிப்பிட்டார். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக முடிப்பிள்ளையார் ஆலயம் இயங்கி வருகிறது. கர்ணபரம்பரைச் செய்திகள் ஊடாகவும்; நொத்தாரிசுமார்களின் சாசனங்கள் மூலமான சான்றுகள் மூலமாகவும் பல செய்திகளை அறிய முடிகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பிள்ளையார் மேல் பாடப்பட்ட பதிகங்கள். ஊஞ்சல் பாட்டுக்கள் பல செய்திகளைச் சொல்லி நிக்கின்றன.
* இற்றைக்கு ஒரு நூற்றான்டுக்கு முன்னர் ஆசிரியர் திரு.வி.கந்தப்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட திருவூஞ்சல் பாடல்கள்
* முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த சரவணமுத்து புலவரால் வேலணை மேற்கு மகா கணபதிப்பிள்ளையார் திருப்பதிகம் ஒன்று பாடப்பட்டுள்ளது.
* சரவணையை சேர்ந்த ஆ.தில்லை நாதப்புலவரினால் பிள்ளையார் பெயரில் திருப்பதிகம் பாடப்பட்டுள்ளது.
இவற்றை நோக்கும் போது ஆலயம் தோன்றி இரண்டொரு நூற்றான்டுக்ளின் பின்னர் இவை பாடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.
சைவமும் தமிழும் ஒருங்கே போற்றுப்பட்டது வேலணை மேற்கில் தான் என்று கூறப்படுகிறது. இது பெரும் அறிவாளிகளாக திகழ்ந்த கந்தப்பு உபாத்தியாயர் தம்பு உபாத்தியாயர் நாகலிங்க உபாத்தியாயர் இராசா உபாத்தியாயர் அப்பாத்துரை உபாத்தியாயர் ஆகியோர் வாழ்ந்த பூமி. யாழ்ப்பாணத்தின் முதல் சைப்பத்திரிகை ‘சைவசூக்குமார்த்த போதினி’ வேலணை மேற்கு நடராச அச்சு இயந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. ‘நெல்லாவில்’ என்ற இடத்தில் இந்த அச்சு இயந்திரசாலை அமைந்திருந்தது..
பல சந்ததிகளின் திருப்பணி வேலைகளால் இவ் ஆலயம் வளர்ந்து நிலை பெற்று நிற்கின்றது என்றால் மிகையாகாது.
வரலாறு2
ஸதாபிக்கப்பட்ட வரலாறு
முடிப்புள்ளையார்ஆலயம் எப்போது யாரல் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. வேலணைக்கும் வேதாரணிய ஆதீனத்துக்கும் இடையில் நோருங்கிய தொடர்வுகள் இருந்தன. வேலணை மேற்குக் கிராமத்தில் வேதாரணிய ஆதீனத்தை சார்ந்த வரணி கரணவாய் சைவக்குருமார் ஆன்மார்த்தம் பாரார்த்தம் என்னும் இரு நெறிகளுக்கும் குல குருவாய் அமைந்தது தீட்சை கோவில் உற்சவம் முதலிய கிரியைகளைச் செய்து வந்தவர். இவர்களுள் சந்திரசேகரக்குருக்கள் என ஒருவர் இருந்தார். இவர் முல்லைத்தீவுப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களுடன் தொடர்வு கொண்டிருந்தார்.
கோவில்களில் கும்பாபிஷேகம் கிரியைகளைச் செய்து வந்தவர் இவர். பெரியபுலம் சுப்பிரமணியர் என்னும் சைவ உத்தமர் ஒருவரை முல்லைத்தீவிற்கு அழைத்துச்சென்று திரும்பிவரும் வழியில் நிழலுக்கு இளைப்பாறிய மரம் ஒன்றின் கீழ் சருகுகளைக் கூட்ட இந்தப் பிள்ளையாருடைய சிலை அங்கு காணப்பட்டது. ‘சுப்பிரமணியா இதை எடு பெரியபுலத்தில் கொண்டுபோய் தாபிப்போம்’ எனக்குருக்கள் சொல்லியபடியே அம் மூர்த்தியை ஒரு சாக்கில் கட்டிக் கொண்டு வந்தார். வரும் வழியில் குருக்களும் சுப்பிரமணியரும் மண்டைதீவுக்குச் சென்று வரவேண்டியிருந்ததால் மண்டைதீவுக்கு செல்லும் வழியில் ஆலமரத்தடியில் வைத்துவிட்டு மீள அங்கிருந்து வரும் போது பிள்ளையாரையும் தூக்கிக்கொண்டு வந்து சுப்பிரமணியர் தனக்கு சொந்தமான காணியில் ஓலைக்குடிசை அமைத்து பிள்ளையாரை பூஜித்ததாகக் கூறப்படுகிறது.
இதை விட,சோழநாட்டில் உள்ள திருப்பூண்டியில் இருந்து வந்து வேலணை மேற்கில் வாழ்ந்தவர் பூண்டி மாமுதலியார் என்பவர். இவர் 17 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவருடைய மூத்த மகள் பெரியநீலயினார் என்பவர்தான் பிள்ளையாரை வைத்து ஆலயத்தைக் கட்டினார் எனவும் கூறப்படுகிறது. இவருடைய செயற்பாட்டிலும் சுப்பிரமணியம் என்பவர் முல்லைத்தீவிலிருந்து கொண்டு வந்த பிள்ளையாரே இக்கோவிலில் தாபிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கோண்டு வரப்பட்ட பிள்ளையார் விக்கிரகம் பெரியநீலயினார் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பூண்டி மாமுதலிக்கும் இதற்கும் தொடர்பில்லை. சுப்பிரமணியருடைய காணியில் அமைக்கப்பட்டது என்று கூறுபவரும் உளர் சுப்பிரமணியர் என்பவருக்கு அம்பலவாணர்,முருகப்பர்,குமாரவேலர் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். சுப்பிரமணியரின் மனைவி கேணிகரையில் உள்ள கந்தர் என்பவரின் மகளாவர் இவர் பெரும் பொருள் வசதியுள்ளவராக இருந்தபடியால் மருமகன் சுப்பிரமணியருடைய இக்கோவிலை சுதையினாலே கட்டுவதற்கு தொடங்கினார். இப்போது உள்ள கருங்கற்க்கோவிலுக்கு முன்பிருந்த கோவில் இதுவாகும்.
இக்கோவில் அமைந்துள்ள இடம் பரம்பரையாக சைவர்கள் வாழும் பகுதியாகும் சிதம்பரம், கரணவாய், வரணி,காரைநகர் வேலணை மேற்கு சைவர்கள் நெருங்கிய தொடர்புகள் வைத்து இருந்தார்கள் வேத,ஆகம,தேவாரங்கள்,புராணபடலம்,சிவபூசை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களுடன் சுப்பிரமணியர்இணைந்து கொண்டார் பிள்ளையாருக்கு முதலாவது பூசகராக திருத்தொண்டு செய்யும் பாக்கியம் இவருக்கு கிடைத்தது சைவர்கள் முடிப்பிள்ளையாரின் பூசகர்களாகவும் ஆலயத்தின் தேவார,புராணபடணங்பள் ஓதுபவர்களாகவும் விளங்கினார்கள் இதனால் அவர்கள் ஆலயநிர்வாக,நித்திய,நைநித்திய பூசைகளிள் தம்மை இணைத்துக்கொண்டனர்.
1840 ஆம் ஆண்டு இவ்வாலயத்தில் முதலாவது கும்பாபிஷேகம் நடைபொற்றதாக கூறப்படுகிறது பின்னர் இக்கோவிலின் ஆரம்பக்கர்த்தாக்களினாலும் பொதுமக்களினாலும் பராமரிக்கப்பட்டு வந்தது என்பதை 1880 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட சாசனம் எடுத்துக்காட்டுகிறது.
நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்கு
இடைக்காலத்தில் பொதுமக்கள் முற்று முழுதாக நிர்வாகத்தில் பங்குபற்ற ஆரம்பித்ததார்கள். 1880 இல் இக் கோயிலுக்குகான பரிபாலன சபை அமைக்கப்பட்டதெனக் குறிப்பிடப்பட்டகிறது. ஈ1880; ஆம் ஆண்டு இச்செயற்குழுவில் சின்னக்குட்டியர் சண்முகம் கணபதிப்பிள்ளை ஆகியோர் இடம்பெற்றதாக அறியப்படுகிறது.
1902 ஆம் ஆண்டு தை மாதம் எழுதப்பட்ட 1702 ஆம் இலக்க சாசனப்கடி இச் சபை உறுதிப்படுத்தப்பட்டது. இச்சாசனம் நொத்தாரிசு ஐ.அம்பலவாணர் அவர்களால் எழுதப்பட்டது.
1902 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட காலத்தில் ஐவர் கொண்ட பரிபாலன சபை தெரிவு செய்யப்பட்டது.
1. க.அம்பலவானர் (கந்தப்பு உபாத்தியார் மகன்)
2. செ.கணபதிப்பிள்ளை (இராசா உபாத்தியார்)
3. வை.செல்லப்பா
4. சீ.கதிரசேலு
5. நா.முருகர்
இந்த பரிபாலன சபையின் காலத்தில் தான் பிள்ளையாரின் ஆலயத்துக்கு கருங்கல்லால் திருப்பணி செய்ய வேண்டும் என்னும் முயற்சி ஆரம்பமானது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆலயத்திற்கு மடப்பள்ளி;, யாகசாலை, வசந்தமண்டபம், சுற்றுமதில் சுதையினாலே கட்டப்பட்டன. ஆலயத்திற்கு காண்டாமணியும் இக் காலத்தில் பொருத்தப்பட்டது.
ஆரம்ப காலத்தில் ஆலயத்தில் சுதையினால் கட்டப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் கற்றன் நா.சபாவதிப்பிள்ளை அவர்களால் கட்டப்பட்டது. மணி நாகலிங்கம் உபாத்தியாரினால் உபயமாக வழங்கப்பட்டது.
இன்றும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எழுந்தருளி விநாயகர் விக்கிரகம் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது.. திரு.நாகலிங்கம் அவர்களால் உபயமாக வழங்கப்பட்டது.
கடந்த நூற்றாண்டின்; ஆரம்ப ஆண்டுகளில் கருங்கல் திருப்பணிகென 22 வருடங்கள் நிதி சேகரிக்கப்கட்டது. 1920 இல் ஸ்ரீலஸ்ரீ கை.நவசிவாயக்குருக்கள் தலைமையில் கருங்கல் திருப்பணி ஆரம்பமானது. கோவிலின் கர்ப்பக்கிரகம், சபாமண்டபம,; மகாமண்டபம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் வை.பொ.சோமசுந்தரம், க.வைத்தியலிங்கம், படிகலிங்கம் ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர். 1930 களில் ஆரம்பகாலத்தில் க.வைத்தியலிங்கம், சே.பொன்னையா, மு.குமாரசாமி, சே.கந்தையா, நா.சரவணமுத்து ஆகியோர் கருங்கல் திருப்பணியில் பெரும் பங்கு பகித்தனர்.பூசகர்களாக ஆரம்பத்தில் சைவர்களும் பின்னர் பிராமணர்களும் இடம் பெற்றனர்.
1938ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ தி;.கைலாசநாதக் குருக்கள் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது 15 உறுப்பினர் கொண்ட பரிபாலன சபை தெரிவு செய்யப்பட்டது.
1938ஆம் ஆண்டு நொத்தாரிசு கா.வினாசித்தம்பி முன்பாக எழுதப்பட்ட சாசனம் உறுதிப்படுத்தப்டுகிறது. பின்வருவோர் பரிபாலன சபையில் இடம்பெற்றனர்.
1. ம.தம்பு
2. சே.பொன்னையா
3. மு.சின்னையா
4. நா.சுப்பிரமணியம்
5. சு..ஏரம்பு
6. மா.கணாதி
7. வே.பேரம்பலம்
8. கு.சங்கரப்பிள்ளை
9. இ.வைத்தியலிங்கம்
10. நா.அமிர்தலிங்கம்
11. ச.திருஞானசம்மந்தர்
12. த.அருளம்பலம்
13. வே.தருமலிங்கம்
14. வ.அம்பலவானர்பிள்ளை
15. வி.நாகலிங்கம்
இப் பரிபாலன சபைக்கு சிறிது காலம் சே.பொன்னையா தலைவராக இருந்தார். இவர் காலமாக 1940 இல் சே.கந்தையா தலைவரானார் 1940 களில் தொடர்திருப்பணிகள் நடைபெற்றன 1948 இல் ஊரெழு சிவஸ்ரீ பாலச்சந்திரக்குருக்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது இந்நிகழ்வு சைவகுருமார்கள் பிராமணக்குருமார்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்
1950 களை அடுத்த காலப்பகுதியில் மீளவும் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன 1960 இல் உள்வீதிக் கொட்டகைகள் போடப்பட்டன பொதுமக்கள் பலர் திருப்பணி வேலைகளுக்கு உதவினார் ஆலயத்திருப்hணி வேலைகளில் தொண்டாற்றிய சோ.சீவரத்தினம் அவர்கள் முக்கியமானவர் வீடு வீடாகச்சென்று பிடி அரிசி எடுத்து திருப்பணி வேலைகளுக்கு உதவினார் பூந்தோட்டம் அமைப்பதில் பெரிதும் தமது முயற்சிகளை மேற்கொண்டார்.ஆலயத்தில் இன்று காணப்படும் தென்னம்பிள்ளைகள் இவரால் நடப்பட்டவையாகும். இவரின் வரிசையில் ஆ.வி.நாகலிங்கம் அவர்களும் மனேஜராக கடையாற்றி திருப்hணி வேலைகளுக்கு உதவினார். பிடி அரிசி திருப்பணியில் திரு.சிவலை கந்தையர் என்பவரும் முக்கியம் பெற்று விளங்கினார். பனையோலையால் செய்யப்பட்ட குட்டான்களினால் வீடு வீடாகச்சென்று அரிசி பெற்று திருப்பணிக்கு உதவினார்.
மிக நீண்ட காலமாக ஆலய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உழைத்தவர் மு.குமாரசாமிப்பிளளை அவர்கள் இவரது முயற்சியினால் 1950 இல் தேர் ஒன்று அமைக்கப்பட்டது.
1960 இல் பரிபாலனசபையில்
1. திரு.நா.சரவணமுத்து – தலைவர்
2. திரு.க.சண்முகலிங்கம் – தனாதிகாரி
3. திரு.ந.கணேசபிள்ளை – செயலாளர்
இவர்களுடைய காலத்தில் ஆலயம் புதுப்பொலிவு பொற்றது. 1969 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் சிவஸ்ரீ வைத்தியநாதக்குருக்களால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடைபெற்றன.ஆலய கோபுரவாசலின் இடப்பக்கத்தில் புதிய மணிக்கூட்டுக்கோவுரத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. இது பொ.சண்முகநாதன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சேதுபதி குடும்ப உபயகமாக இடமபெற்றது இது முற்றிலும் வெள்ளைக்கல்லினால் கட்டப்பெற்றது தொடர்ந்து ‘பிள்ளையார் விலாஸ்’ கணபதிப்பிள்ளை அவர்களால் இராஜகோபுரத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது 1974 ஆம் ஆண்டு அம்பலவாணர் கணபதிப்பிள்ளை குடும்பத்தவர்களால் வசந்தமண்டபம் புதிதாக மீள அமைக்கப்பட்டுப் புதுபடபொலிவுடன் மெருகு பெற்று விளங்குகிறது.
1976 ஆம் ஆண்டு ஆலய பரிபாலன சபை புதிதாக தெரிவு செய்யப்பட்டது. அதில் பின்வருவோர் இடம்பெற்றனர்.
1. திரு.கு.இராசதுரை -தலைவர்
2. திரு.நா.வீரசிங்கம் -உபதலைவர்
3. திரு.ப.அரசகேசரி – செயலாளர்
4. திரு.மு.சுந்தரலிங்கம் -உபசெயலாளர்
5. திரு.க.நாகநாதபிள்ளை –பொருளாளர்
இப்பரிபாலன சபையில் 24 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இவர்களது காலத்திலும் பல திருப்பணி வேலைகள் நடைபெற்றன.
* வசந்தமண்டபத்திற்கு எதிரே வாசலும் மண்டபவமும் அமைக்கப்பட்டது
* கோபுர வாசலின் வலப்பக்கம் புதிய மணிக்கூட்டுக்கோபுரம் திரு.து.சிற்சொருபன் அவர்களால் அமைக்கப்பட்டது
* இராஜகோபுர வேலை தொடர்ந்து நடைபெற்றது
* உள்வீதி தரை சீமந்து இடப்பட்டது வெளிப்பக்க சுவர்கள் புனரமைப்பு செய்யப்பட்டன
* மின்னினைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன
* திரு.மு.தியாகரசா அவர்களால் ஓலியமைப்புச் சாதனங்கள் உபயமாக வழங்கப்பட்டன
* கிக்கடுவ நா.சண்முகம் நினைவாக அவர்களது மக்களால் பூந்தோட்ட மதில் வேலை பூரணப்படுத்தப்பட்டது
1986 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் புதிய பரிபாலன சபை பொறுப்பெற்றது.
புரிபாலன சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு புரிந்துணர்வு அடிப்படையில் இப்பரிபாலன சபை அமைக்கப்பட்டது. இதில் பின்வருவோர் இடம்பெற்றனர்.
1. திரு.ச.நல்லைநாதன் -தலைவர்
2. திரு.நா. வீரசிங்கம் -உபதலைவர்
3. திரு.மு.சுந்தரலிங்கம் -செயலாலர்
4. திரு. மு. பரராசசிங்கம் – உபசெயலாளர்
5. திரு. மு. மகேந்திரன் -பொருளாளர்
இப்பரிபாலன சபையில் 22 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இவர்களது காலத்திலும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மீண்டும் 1988 இல் புதிய பரிபாலன சபை தெரிவு செய்யப்பட்டது இதில் பின்வருவோர் இடம்பெற்றனர்.
1 .திரு.ச.நல்லைநாதன் -தலைவர்
2. திரு. கு.. இராசகோபால் -உபதலைவர்
3. திரு. யா. இராமநாதன் -செயலாலர்
4. திரு. க. கமலநாதன் – உபசெயலாளர்
5. திரு. மு. மகேந்திரன் -பொருளாளர்
இப்பரிபாலன சபையில் 25 உறுப்பினர்கள் இடம்பெற்றனர் மகாகும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறன.
* ஆலய வாசலின் இடப்பக்க மணிக்கூட்டுக் கோபுரத் திருப்பணி நிறைவேறியது
* வுhசலின் இரண்டு பக்கமும் மணிக்கூட்டுக் கோபுரம் எடுப்பாக வளர்ந்து நின்று இராஜகோபுர திருப்பணியை
துரிதமாக்க வேண்டும் எனக்கூறின.
* கருங்கல் திருப்பணியில் மண்டபம்களில் குறை வேலையாக இருந்த கருங்கல் வரிசுகள் புதிதாகக்
கட்டப்பட்டன.
* எழுந்தருளி விநாயகருக்கு கருங்கல்லினால் புதிதாக கோயில்கள் அமைக்கப்பட்டது.
* சுற்றுப்பிரகாரக் கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டன.
1. லக்குமி திரு.க.யோகலிங்கம் அவர்கள் (யோகு ரேடிங் கம்பனி)
2. கெரியம்பாள்- திரு.ஆ.பொ.பரராசசிங்கம் குடும்பம்
3. சந்தனகோபாலர்- திரு.ஆ.வி.நாகலிங்கம் குடும்பம் சார்பாக திரு.மேகனதாஸ் அவர்கள்
4. சுப்பிரமனியர் திரு.சே.செல்லத்துரை குடும்பத்தினர்
5. நவக்கிரகம்- திரு.க.சிவசரணம் குடும்பத்தினர்
6. சண்டேஸ்சரர்- திரு.ச.பழனிநாதன்; திரு.ச.சிதம்பரப்பிள்ளை
* மூலஸ்தானம் ஸ்தூபி,வசந்தமண்டபம் ஸ்தூபி புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
* சபாமண்டபம்,மகாமண்டபம் சீமந்தினால் புதிதாக அமைக்கப்பட்டன. மகாமண்டப புனரமைப்பு சேலைகள் எமது ஊரைச் சோர்ந்த பிரபல வர்த்தகர் திரு.ந.கேசுநாதன்(மாலவன்ஸ்) உபயபமாக செய்யப்பட்டன.
* ஆலய உள்வீதிச்சுவர்கள் வர்ணம் பூசப்பட்டுச் திருமுறைகள் எழுதப்பட்டன.
இத்தகைய திருப்பணி வேலைகள் பூர்த்தியடைந்தது 1990 ஆம் ஆண்டு (11.04.1990)பங்குனி 29ஆம் திகதி அவர்கள் தலைமையில் மகாகும்பாஷேகம் நடைபெற்றது தொடர்ந்து ஆலயத்தில் சதுர்த்தி,விசேட தினங்கள் பிள்ளையார் கதை,நவராத்திரி,திருவெம்பாவை ஆகிய திருவிழாக்கள் சிறப்பக நடைபெற்றன.
1991 புலம்பெயர்வுக்குப் பின்னர்
நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டு வருகின்ற யுத்தங்களின் விளைவாக 1990 ஆம் ஆண்டு (18.10.1991) நவராத்திரி காலத்தில் வேலணையில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக எமது ஊர்மக்கள் அனைவரும் யாழ்ப்பாண நகரம் நோக்கி நகர்ந்தனர். எமது கிராம சமூகக் கட்டமைப்புக்கள்எல்லாம் பாதிப்பிற்குள்ளாகின.
இந்த நேரத்தில் எமது ஆலயத்தில் 1965 ஆம் வருடம் தொடக்கம் நித்திய பூசை ஆற்றி வந்த பிரம்மஸ்ரீ. இ.சோமாஸ்கந்தசர்மா அவர்கள் இடம் பெயரும் நோக்குடன் சிறிது தூரம் சென்ற பின்னர் பிள்ளையார்pன் புதுமையோ என்னவோ திரும்பவும் கோவிலுக்கு திரும்பி வந்து இடம்பெயராமல் பிள்ளையாருடன் தங்கிவிட்டார். புலம்பெயர் காலத்திலும் எமது பகுதியில் பூசை நடைபெற்ற ஒரேயொரு ஆலயம் என்றால் எமது முடிப்பிள்ளையார் ஆலயம் தான். ஆற்த வகையில் பிள்ளையாரின் திருவருளை வியந்தவர்கள் பலர்.
இடம்பெயர முடியாத வயோதிபர்களுக்கு ஆதரவழிக்கும் ஒரு நிலையமாக எமது ஆலயம் விளங்கியது. கோவிலில் ஐயா பிள்ளையாருக்கும் அவர்களுக்கும் ஆதரவு வழங்கி உதவினார்கள். கோவிலில் ஐயா அவர்களின் இப்பணி காலத்தினால் மறக்கமுடியாத ஒன்றாகும். இது எமது ஆலயத்தின் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருந்தது.
இடம்பெயர் காலத்தில் எமது ஆலயத்தோடு தொடர்புபட்ட அடியார்கள் பலர் இடம்பெயர் நிலையிலும் எம்பெருமானின் பூசை ஒழுங்குகள் நடைபெற தம்மாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். அதற்கேற்ற பயனுறுதி வாய்ந்த பர நடவடிக்கைகள் ஈடுபட்டனர். இவர் பணி போற்றுதந்குரியது. இவர்களுடைய முயற்சிகள் இன்று பயன்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
1996 மீள்குடியேற்றத்தின் பின்னர்
1996 இல் மீளவும் எமது பிரதேச மக்கள் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். 1996 ஏப்பிரல் மாத்தில் இருந்து மக்கள் குடியேறத் விவசாய பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கினர். இந்நிலையில் எமது ஆலயப்பகுதியிலும் மக்கள் குடியேறத் தொடங்கினர்.
15.03.1998 எமது ஆலயத்தில் மகாசபை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 07 வருடகால இடைவெளியின் பின்னர் ஆலயப் புனரமைப்பு வேலைகள் நடைபெற தொடங்கின. இக் கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய பரிபாலனசபை அமைக்கப்பட்டது. இதில் பின்வருவோர் இடம்பெற்றனர்.
1. திரு.பொ.அருணகிரிநாதன் -தலைவர்
2. திரு.ந.கணேசபிள்ளை -உபதலைவர்
3. திரு.க.பரமேஸ்வரன் – செயலாளர்
4. திரு.வி.சாம்பசிவம் -உபசெயலாளர்
5. திரு.மு.மகேந்திரன் -பொருளாளர்
1998 ஆம் ஆண்டில் இருந்து வழமை போல மகோற்சவம் நடைபெற தொடங்கியது. புலம்பெயர்ந்த காலத்திலும எமது கோவில் குருக்கள் பிரம்மஸ்ரீ. இ.சோமாஸ்கந்தசர்மா குருக்கள் அவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்த 7 வருடங்களுகம் பிள்ளையாருக்கு நித்திய பூசை செய்து வந்தார். இது பிள்ளையாரின் பெரும் கருணையினால் ஆகும்.
இதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் மகாசபைப் பொது கூட்டம் நடைபெற்று பரிபாலனசபை தெரிவு இடம்பெற்று வருகிறது. இப்பரிபாலனசபையினது காலத்தில் ஆலயத்தில் பெரும் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
* பஞ்சதள இராஜகோபுர வேலை பூர்த்தியடைந்துள்ளது.
* வெள்ளைகல்லினால் கட்டப்பெற்ற புதிய தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டுள்ளது. (வேலணை மேற்கு முருகேசு செல்லம்மா குடும்பம்).
* தேர் இருப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது(மயில்வாகனம் குடும்பம்).
* ஏம்பெருமானுக்கு புதிய சித்திரத்தேர் திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.(திரு.ந.ஜவகர்லால் நேரு குடும்பம்).
* ஆலயத்தில் மின்னினைப்பு வேலைகள் புனரமைக்கப்பட்டு புதிய மின்பிறப்பாக்கி இயந்திரம் பெறப்பட்டுள்ளது (திரு.ஆ.பொ.பரராசசிங்கம் குடும்பம்).
* ஆலய நாற்புற வீதிகளும் மண் இடப்பட்டு உயர்த்தப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன.
* ஆலய சுற்றுக்கொட்டகை வெளிப்புற சுண்ணாம்பு சுவர் அகற்றப்பட்டு மதில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
* வருடாவருடம் ஆலயத்தின் உட்பகுதி வர்ண வேலைகள் செய்யப்படுகின்றன.
* அனைத்து வாகனங்களும் மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
* சப்பரம், தேர் புனரமைப்பு வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
* ஆலய முன் வாயில் மணிமண்டப வேலைகள் நடைபெற்று வருகின்றன.
* ஆலயத்தில் பாலஸ்தானம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
வருடந்தோறும் மகோற்சவம் வைகாசிமாத பௌர்ணமி திதியில் தீர்த்தோற்சவம் வரத்தக்கதாக 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. மகோற்சவகாலத்தில் வரும் அடியார்களுக்கு உதவ திரு.சி.க குடும்பது;தினர் தாகசாந்தியும் திரு.ஐங்கரன் அன்னதான சபையால் அன்னதானமும் வருடந்தோறும் தவறாது வழங்கப்படுகிறது. மேலும் ஆலய வளர்ச்சியில் ஆலய விஸ்தரிப்புப்பணிகளுக்கு பெருமனதுடன் உதவியவர்களில் முக்கியமானவர்கள்.
அ. முன்பக்கம் -இராசா உபாத்தியார் (இரத்தினசபாபதி) பரம்பரை
ஆ. தெற்குபக்கம்- பேரம்பலம் பராசக்தி(அப்பாத்துரை)குடும்பத்திணர்
இ. மேற்குபக்கம்- மயில்வாகனம் இராசரட்ணம் குடும்பம்
ஈ. வடக்குபக்கம்-கந்தையா பாக்கியம் குடும்பம்
உ. வடமேற்குபக்கம்- பொ.சோமசுந்தரம் (கேணியடிவீடு குடும்பம்)
ஊ. முன்வடக்கு-மு.குமாரசாமி குடும்பம்
இக் குடும்பம்கள் ஆலய வளர்ச்சிக்கும் விஸ்தரிப்புக்கும் பொரும் பங்காற்றியுள்ளனர்
இவர்களுக்கு எல்லோரும் நன்றி கூறவேண்டும.
ஏம் பெருமானின் திருவருளாலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இக்கிராமத்து மக்கள் இன்று செய்து வரும் உதவிகளால் ஆலயம் பல வழிகளில் புதுப்பொலிவு பெற்று வருகின்றது. கனடாவிலும், லண்டன் நகரிலும் இயங்கும் வழிபடுநர் அமைப்புக்கள் இத்திருத்தலத்துக்கு ஆக்கபூர்வமான பல உதவிகளை காலத்துக்குக் காலம் செய்து கொண்டிருக்கின்றன. மேலும் பல திருப்பணி வேலைகள் அன்பர்களின் உதவியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முற்றும்..
தமிழ் இனம் மிகும் பறந்து விரிந்து உள்ளது என்பதை இவைகள் மூலம் அறியலாம்
பதிலளிநீக்குhttp://www.indianist.com/puthiya-thalaimurai-news-online-live/