வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது.
சிவாம்சமாக ஒரு மந்திரம்
பஞ்சபூதங்களைத் தாண்டிய பர நிலைதான் சரபம்.எவன் ஒருவன் “ஸாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்”
என்று காலையும் மாலையும் 27 முறை ஜெபித்துவருகின்றானோ,அவனை யாராலும் ஜெயிக்க முடியாது.இந்த சரப காயத்ரி மந்திரத்தை ஆயுள் முழுக்க ஜெபிப்பவர்களின் ஆத்மா,அவர்கள் இறந்ததும் நேராக கையிலாயத்துக்குப் பறந்து சென்று சிவன் பாகம் சேரும்.இதற்கு,அசைவ உணவுப்பழக்கத்தையும்,மது,போதை,ச
நம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்
நாளை சனிப்பிரதோஷம்.பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.எனவே,சனிப்பிரதோஷம் மிகவும் புண்ணியமான நாள் ஆகும்.இந்துக்களாகிய நம்மில் சிவனை வழிபடுவோருக்கு இது நமது பாவங்களை விரைவாக அழிப்பதற்கு உகந்த நாளாகும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.எனவே,இந்த ஒன்றரை மணி நேரமும் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை 4 மணிக்கே சென்றுவிடுவோம்.மாலை 6 மணி ஆகும் வரையிலும் சிவ மந்திரங்களை ஜபித்துக்கொண்டே இருப்போம்;
ஒரு முறை ஓம் அண்ணாமலையே போற்றி என ஜபித்தால் 3,00,000 முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபித்ததற்குச் சமம் என்று அருணாச்சலபுராணத்தில் சிவபெருமானே தெரிவிக்கிறார்.அதை நாம் ஜபிக்கலாம்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;
அடுத்தபடியாக,ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் அமிர்த நேரமான மாலை 5.30 முதல் 6.00 மணிவரையிலும் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து,(மஞ்சள் நிற துண்டு எனில் மிகவும் ஏற்றது)அதில் நந்திபகவானை நோக்கி அமர்ந்து,ஜபித்துக்கொண்டே இருப்போம்.
ஒரு மந்திரத்தை வாயால் பேசுவது போல் ஒரு முறை சொன்னால்,ஒரு தடவை ஜபித்ததற்குச் சமமாகும்.
மனதுக்குள் உதடு அசையாமல் சொன்னால்,அதன்பலன் பல மடங்கு ஆகும்.
மனதுக்குள் உதடு அசையாமல்,வீட்டில்,அலுவலகத்தில்
கருங்கல்லால் கட்டப்பட்ட(பழமையான) கோவிலுக்குள் அமர்ந்து மனதுக்குள் ஒரு முறை சொன்னால்,ஆயிரம் முறை ஜபித்ததற்குச் சமமாகும்.
மலைமீதிருக்கும் கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,ஒரு கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
கடலோரக்கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,இரண்டு கோடி தடவை ஜபித்ததற்குச் சமமான பலன் கிடைக்கும்.இவையெல்லாம் சாதாரண நாட்களில் கிடைக்கும் பலனாகும்.
சனிப்பிரதோஷத்தன்று,இவ்வாறு பழமையான கோவில்களில் மனதுக்குள் ஒன்றரை மணி நேரம் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தால்,மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் நூறு கோடி மடங்காக ஜபித்த பலன்கள் கிடைக்கும் என மந்திர ராஜ பதப்பிரயோகம் என்ற ஆன்மீகநூல் தெரிவிக்கிறது.
ஆக,கலிகாலத்தில் இறை நாம ஜபம் மட்டுமே நமது பாவங்களையும்,நமது முற்பிறவி மற்றும் முன்னோர்களின் பாவங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.
For Further Details Contact
Brahma Kumar Raja Yogi Dr.V.S.Suresh Cell :9884380229
செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப்பட்டது
ஒரு எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக்கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம் எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு வருடம் ஆனதும் ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக ஜலம் ஓடும் ஆற்றில் போடவும்.இதனாலும் செல்வ வளம்(தன ஆகர்ஷணம்) உண்டாகும்.இதுவும் செய்ய முடியாதவர்கள் மாப்பொடி,மஞ்சள்பொடி கொண்டு ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.
வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு 6 மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே வரலாம்.இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரும்.
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கின்ற்து.அதே சமயம் சிறிய நாணற்புற்கல் வளைந்து கொடுக்கின்றன.வெள்ளம் நின்றவுடன் நிமிர்ந்து கொள்கிறது.இதே போன்றதுதான் நம் வாழ்க்கைச்சக்கரம்.யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்.இதை நாம் அனேகர் வாழ்க்கையில் காணலாம். “ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது.மந்திரங்களுக்கேற
பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது
இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர
தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2006 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.
ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.ஆம்,சென்னையிலிர
உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2006க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.
2006க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2006க்குப்பிறகு
பழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.
தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:
கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614
நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்
இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக்கோலமாக்கிவிடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.
கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.
நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92
பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்றால்
பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது
கி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்