கல்வி செல்வம் அருளும் ஹயக்ரீவர்!
அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக
முக்கியமானது, சிறப்பானது, பிரசித்தி பெற்றது மனித உடலும், குதிரை முகமும்
கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள்
எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’
என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள். ஆனால், ஞானம் எனும் கல்விச்
செல்வத்துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற
செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர்
மாறானது.
ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு
அதிகரிக்கும். நம் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய
கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம்.
சரஸ்வதி தேவிக்கும் ஒரு
குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி. அறியாமை எனும் இருளில் இருந்து
ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர்
அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும்
விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர்
அருள்புரிகிறார்.
இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம்
போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும்
ஹயக்ரீவரை வணங்கலாம். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி
குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல
குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த
வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள்,
பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள்,
தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9-ம்
அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண
நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை
சாற்றி வழிபடலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர்
அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை
ஹயக்ரீவ ஸ்தலங்கள் ஆகும். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத
சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
ஔஷத மலையில் ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவர் எப்படி காட்சி
தந்தாரோ, அதே கோலத்தில் இங்கு இவரை தரிசிக்கலாம். புதன்கிழமையும், திருவோண
நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஹயக்ரீவரை வழிபட ஞானமும் அறிவும்
மேம்படும். ஞாபக சக்தி கூடும். ‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி
தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’ என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும்
சொல்லி வந்தால், படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண்
பெறலாம். நாளை ஹயக்ரீவ ஜெயந்தி ஆகும். இந்நன்னாளில் அவரை வழிபட்டு அருள்
பெறுவோம்.
சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (cOzanADu kAviri vaDakarai)
- கோயில் (சிதம்பரம்)
- திருவேட்களம்
- திருநெல்வாயில்
- திருகழிப்பாலை
- திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
- திருமயேந்திரப்பள்ளி
- தென்திருமுல்லைவாயில்
- திருக்கலிக்காமூர்
- திருச்சாய்க்காடு (சாயாவனம்)
- திருப்பல்லவனீசுரம்
- திருவெண்காடு
- கீழைத்திருக்காட்டுப்பள்ளி
- திருக்குருகாவூர்
- சீர்காழி
- திருக்கோலக்கா
- திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
- திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி)
- திருக்கடைமுடி (கீழையூர்)
- திருநின்றியூர்
- திருப்புன்கூர்
- திருநீடூர்
- அன்னியூர் (பொன்னூர்)
- வேள்விக்குடி
- எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
- திருமணஞ்சேரி
- திருக்குறுக்கை
- கருப்பறியலூர் (தலைஞாயிறு)
- குரக்குக்கா
- திருவாழ்கொளிப்புத்தூர்
- மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
- ஓமாம்புலியூர்
- கானாட்டுமுள்ளூர்
- திருநாரையூர்
- கடம்பூர்
- பந்தணைநல்லூர்
- கஞ்சனூர்
- திருக்கோடிகா
- திருமங்கலக்குடி
- திருப்பனந்தாள்
- திருஆப்பாடி
- திருச்சேய்ஞலூர்
- திருந்துதேவன்குடி
- திருவியலூர்
- கொட்டையூர்
- இன்னம்பர்
- திருப்புறம்பயம்
- திருவிசயமங்கை
- திருவைகாவூர்
- வடகுரங்காடுதுறை
- திருப்பழனம்
- திருவையாறு
- திருநெய்தானம்
- பெரும்புலியூர்
- திருமழபாடி
- திருப்பழுவூர்
- திருக்கானூர்
- அன்பில்ஆலந்துறை (அன்பில்)
- திருமாந்துறை
- திருப்பாற்றுறை
- திருவானைக்கா
- திருப்பைஞ்ஞீலி
- திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
- திருஈங்கோய்மலை
சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (cOzanADu kAvirith thenkarai)
- திருவாட்போக்கி (ரத்னகிரி)
- கடம்பந்துறை (குளித்தலை)
- திருப்பராய்துறை
- கற்குடி (உய்யக்கொண்டான்மலை)
- மூக்கீச்சுரம் (உறையூர் – திருச்சி)
- திருச்சிராப்பள்ளி – (மலைகோட்டை கோவில்)
- எறும்பியூர் (திருவெறும்பூர்)
- நெடுங்களம்
- மேலைதிருக்காட்டுப்பள்ளி
- திருஆலம்பொழில்
- திருப்பூந்துருத்தி
- கண்டியூர்
- திருச்சோற்றுத்துறை
- திருவேதிகுடி
- தென்குடித்திட்டை
- திருப்புள்ளமங்கை
- சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)
- திருக்கருகாவூர்
- திருப்பாலைத்துறை
- திருநல்லூர்
- ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
- திருச்சத்திமுத்தம்
- பட்டீச்சுரம்
- பழையாறை வடதளி
- திருவலஞ்சுழி
- குடமூக்கு (கும்பக்கோணம்)
- குடந்தை கீழ்க்கோட்டம் (நாகேச்சுரசுவாமிக் கோவில்)
- குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர் கோவில்)
- திருநாகேச்சுரம்
- திருவிடைமருதூர்
- தென்குரங்காடுதுறை
- திருநீலக்குடி
- வைகல்மாடக்கோவில்
- திருநல்லம்
- கோழம்பம்
- திருவாவடுதுறை
- திருத்துருத்தி
- திருவழுந்தூர்
- திருமயிலாடுதுறை
- திருவிளநகர்
- திருப்பறியலூர் (பரசலூர்)
- திருச்செம்பொன்பள்ளி
- திருநனிபள்ளி
- திருவலம்புரம்
- தலைச்சங்காடு
- ஆக்கூர்
- திருக்கடவூர் வீரட்டம்
- திருக்கடவூர் மயானம்
- திருவேட்டக்குடி
- திருத்தெளிச்சேரி
- தருமபுரம்
- திருநள்ளாறு
- கோட்டாறு
- அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்)
- அம்பர் மாகாளம்
- திருமீயச்சூர்
- திருமீயச்சூர் இளங்கோயில்
- திலதைப்பதி (மதிமுத்தம்)
- திருப்பாம்புரம்
- சிறுகுடி
- திருவீழிமிழலை
- திருவன்னியூர்
- கருவிலி (திருகருவிலிக்கொட்டிடை)
- பேணுபெருந்துறை
- நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
- அரிசிற்கரைப்புத்தூர்
- சிவபுரம்
- கலயநல்லூர் (சாக்கோட்டை)
- கருக்குடி (மருதாந்தநல்லூர்)
- திருவாஞ்சியம்
- நன்னிலம்
- திருக்கொண்டீச்சரம்
- திருப்பனையூர்
- திருவிற்குடி வீரட்டம்
- திருப்புகலூர்
- திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
- இராமனதீச்சுரம்
- திருப்பயற்றூர்
- திருச்செங்காட்டங்குடி
- திருமருகல்
- திருச்சாத்தமங்கை
- நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
- சிக்கல்
- கீழ்வேளூர்
- தேவூர்
- பள்ளியின்முக்கூடல் (அரியான்பள்ளி)
- திருவாரூர்
- திருவாரூர்அரநெறி
- திருவாரூர்ப்பரவையுன்மண்டலி
- திருவிளமர்
- கரவீரம்
- பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை)
- தலையாலங்காடு
- குடவாயில்
- திருச்சேறை (உடையார்கோவில்)
- நாலூர்மயானம்
- கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்)
- இரும்பூளை (ஆலங்குடி)
- அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
- அவளிவணல்லூர்
- பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)
- வெண்ணி
- பூவனூர்
- பாதாளீச்சுரம்
- திருக்களர்
- சிற்றேமம்
- திருஉசாத்தானம் (கோவிலூர்)
- இடும்பாவனம்
- கடிக்குளம்
- தண்டலைநீள்நெறி
- கோட்டூர்
- திருவெண்துறை
- கொள்ளம்புதூர்
- பேரெயில்
- திருக்கொள்ளிக்காடு
- திருத்தெங்கூர்
- திருநெல்லிக்கா
- திருநாட்டியத்தான்குடி
- திருக்காறாயில் (திருக்காறைவாசல்)
- கன்றாப்பூர்
- வலிவலம்
- கைச்சின்னம்
- திருக்கோளிலி (திருக்குவளை)
- திருவாய்மூர்
- திருமறைக்காடு (வேதாரண்யம்)
- அகத்தியான்பள்ளி
- திருக்கோடி (கோடிக்கரை)
- திருவிடைவாய்
ஈழநாடு (IzanADu)
- திருக்கோணமலை
- திருக்கேதீச்சுரம்
பாண்டியநாடு (pANDiyanADu)
- திருஆலவாய் (மதுரை)
- திருஆப்பனூர்
- திருப்பரங்குன்றம்
- திருவேடகம்
- திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
- திருப்புத்தூர்
- திருப்புனவாயில்
- திருஇராமேச்சுரம்
- திருவாடானை
- திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
- திருப்பூவணம்
- திருச்சுழியல் (திருச்சுழி)
- திருக்குற்றாலம் (குறும்பலா)
- திருநெல்வேலி
கொங்குநாடு (kongunADu)
- திருஅவிநாசி
- திருமுருகன்பூண்டி
- திருநணா (பவானி)
- திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
- திருவெஞ்சமாக்கூடல்
- திருப்பாண்டிக்கொடுமுடி
- திருக்கருவூரானிலை (கரூர்)
நடுநாடு (naDunADu)
- திருநெல்வாயில்அரத்துறை
- திருத்தூங்கானைமாடம்
- திருக்கூடலையாற்றூர்
- திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
- திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
- திருச்சோபுரம் (தியாகவல்லி)
- திருவதிகை
- திருநாவலூர் (திருநாமநல்லூர்)
- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
- திருநெல்வெண்ணெய்
- திருக்கோவலூர்
- திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
- திருஇடையாறு
- திருவெண்ணெய்நல்லூர்
- திருத்துறையூர் (திருத்தளூர்)
- திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
- திருமாணிக்குழி
- திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
- திருமுண்டீச்சுரம்
- திருபுறவார்பனங்காட்டூர்
- திருஆமாத்தூர்
- திருவண்ணாமலை
தொண்டைநாடு (thoNDainADu)
- திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)
- திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
- திருஓணகாந்தன்தளி
- திருக்கச்சிஅனேகதங்காவதம்
- திருக்கச்சிநெறிக்காரைக்காடு
- திருக்குரங்கணில்முட்டம்
- திருமாகறல்
- திருவோத்தூர்
- திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
- திருவல்லம்
- திருமாற்பேறு
- திருஊறல் (தக்கோலம்)
- திருஇலம்பையங்கோட்டூர்
- திருவிற்கோலம் (கூவம்)
- திருவாலங்காடு (பழையனூர்)
- திருப்பாசூர்
- திருவெண்பாக்கம் (பூண்டி)
- திருக்கள்ளில்
- திருக்காளத்தி
- திருவொற்றியூர்
- திருவலிதாயம் (பாடி)
- வடதிருமுல்லைவாயில்
- திருவேற்காடு
- திருமயிலை (மயிலாப்பூர்)
- திருவான்மியூர்
- திருக்கச்சூர் (ஆலக்கோவில்)
- திருஇடைச்சுரம்
- திருக்கழுக்குன்றம்
- திருஅச்சிறுப்பாக்கம்
- திருவக்கரை
- திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)
- திருஇரும்பைமாகாளம்
துளுவ நாடு (thuLuva nADU)
- திருகோகர்ணம் (கோகர்ணா)
மலைநாடு (malainADu)
- திருவஞ்சைக்களம்
வடநாடு (vaDanADu)
- திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
- இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்)
- அனேகதங்காவதம் (கௌரிகுண்டம்)
- திருக்கேதாரம்
- நொடித்தான்மலை (திருக்கயிலாயம்)
இப்பகுதியில் மிளிரும் புகைப்படங்களில் பல அளித்துப் பணி செய்தவர் திரு. லோகசுந்தரம், சென்னை.
திருத்தல வரலாறெழுதும் பணிசெய்தவர்கள் சிவ. வன்மீகநாதன், ஈசானசிவம்.பாஸ்கரன் மற்றும் திரு. மதிவாணன், பெங்களூர்.
சயனங் கண்டு நிற்ப முடியாதது என்?
அகஸ்திய முனி ஷண்பகராண்ய வனத்தில் தவம்
செய்துகொண்டிருந்தார். அப்போது வேட்டுவ இன அரசர்களைக் கண்டார். வில்லி
மற்றும் புத்தன் என்பது அவர்கள் பெயர். அருகிலிருந்த ஆல மரத்தை காட்டி,
இதனடியில் ஒரு குகை உண்டு. அந்த குகையில் வடபத்திர சாயி என்ற பெயரில் அந்த
மகாவிஷ்ணு அனந்த சயனம் செய்கின்றார். அவருக்கு இந்த வனத்தில் ஒரு கோயில்
கட்டு என்றார். அதற்குரிய தங்கமும்&வைரமும் அங்கு குபேரனே வைத்து காவல்
செய்கிறான். உடனே இந்த திருப்பணியை தொடங்கு என கட்டளை இட்டார்.
அவர்களும் அகஸ்தியரின் வாக்கு வழி பொக்கிஷத்தை எடுத்து அந்த ஷண்பகராண்ய
வனத்தை சற்று அழித்து ஒரு கோயில் கட்டினார்கள். அங்குறை வடபத்திர சயனரே
இன்றும் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றி, பின் ஒரு ஊர்
தோன்றிற்று.வில்லி & புத்தன் என்ற அரசர்கள் உருவாக்கியமையால்
வில்லிபுத்தூர் என பின்நாளில் வழங்கப்பட்டது. திருவேங்கடவன் என எல்லோரும்
போற்றக்கூடிய வெங்கடாஜலபதி சுவாமியின் பத்தினியான பத்மாவதி தாயாரே, இந்த
கோயிலின் பிராகாரத்தில் கோதை நாச்சியார் ஆக அவதாரம் செய்தாள். விஷ்ணு
சித்தர் என்ற ஆழ்வாரை, பெரியாழ்வார் என வைஷ்ணவம் போற்றும். அவரே இந்த கோதை
நாச்சியாரை எடுத்து வளர்த்தார். அனுதினமும் பூமாலையும் பாமாலையும் ஒரு சேர
செய்து வடபத்திர சாயிக்கு சூட்டி பூஜை செய்து வந்தார். கோதை பருவமடையும்
காலத்தில் இறைவன் மேல் அளவிலா பக்தி பூண்டு பூமாலை தொடுக்க தந்தைக்கு உதவி
வந்தார்.
ஒருமுறை மாலையைத் தான் அணிந்து எப்படி இருக்கும் என ஒரு கிணற்றில்
எட்டிப் பார்த்து ரசித்தார். இதைக் கண்ட தந்தை விஷ்ணு சித்தர் கோதையை
கடிந்து கொண்டார். அன்று இரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து, ‘இனி
எப்போதும் கோதை சூடிய மாலையை மட்டுமேதான் நான் சூடுவேன். இதுவே எனது ஆசை’
என்றார். அன்றிலிருந்து கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர்
விளங்கிற்று. இந்த திருத்தலம், வராக க்ஷேத்திரம் ஆகும். ஆதிவராகர் ஹிரண்ய
வதம் முடித்து, பின் சற்று அமர்ந்து, கோபம் தணிந்து, அகம் குளிர்ந்த தலம்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவை
பொடிப் பொடியாய்ப் போகும் என்பது பலரும் அனுபவ பூர்வமாய் கண்ட உண்மை.
இங்கு திருமுக்குள தீர்த்தம் உண்டு. இதில் நீராடி வடபத்திர சாயியை
வழிபட்டோர் அடையாத வெற்றியே இல்லை. கண்ணாடி தீர்த்தத்தில் தன் முகத்தை தானே
தரிசித்தால் திருஷ்டி நீங்கும். கபால பீடை அகலும் என்பது கண் கண்ட உண்மை.
இங்குள்ள விமானம் சம்சண விமானம், தேவர்களுடன் சிவனும் வந்து வணங்கும்
விமானம் என்கிறது விஸ்வாமித்ர நாடி.
‘‘தேவருடனே முக்கண் மூர்த்தியும்
முயன்று தொழுமிவ் விமானமது
சம்சணமே’’ & என்ற பாட்டால் தெரியலாம்.
பஞ்ச லோகத்தால் ஆன சக்கரத்தாழ்வாருக்கு எதிரில் விஜயவல்லித் தாயாரின்
ஸ்வரூபம். அக்னி, பயம், காத்து, கருப்பு, பேய், பிசாசுகளின்
பிடியிலிருந்து நிவாரணம் பெற ஓடி வருவீர் இத்தலத்திற்கு என்கிறார்
அகஸ்தியர்.
‘‘எழுந்தோடி வருவீர் வடபத்திர சயனங்கண்டு நிற்ப முடியாதது என் இவ்
வையத்தே’’ & நம்மாழ்வார் அவதரித்த இந்த தலத்தை தென்புதுவை என்றும் வட
மகாத்மபுரம் என்றும் ஸ்ரீதன்வபுரி என்றும் போற்றுகின்றனர். முன்னைய மன்னர்கள், விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று வர்ணித்தனர்.
ஆண்டாள் ‘திருப்பாவை’ என்ற தமிழ் வேதத்தை ஓதிய தலம். ஸ்ரீகிருஷ்ணன், ரங்கமன்னாராக
கருடன் மேல் வந்து ஆண்டாளை விவாகம் செய்த தலம். இந்த புண்ய
க்ஷேத்திரத்தில்தான் பெரியாழ்வாருக்கு தனது கல்யாண கோலத்தைக் காட்டினார்
திருமால். அவர் எப்படி தரிசித்தாரோ அதை அப்படியே ஓவியமாக தீட்டினார்
பெரியாழ்வார். பின் பாண்டிய, சோழ மன்னர்களால் ஆண்டாள், ரங்கமன்னார்,
கருடாழ்வார் சிற்பங்களுடன் கோயில் அமைந்தது.
தமிழக அரசு முத்திரையில் கம்பீரமாக காட்சி அளிப்பது இந்த வடபத்திரசாயின்
ராஜகோபுரமே. இந்த கோயிலுக்கு அனுதினமும் தும்புரு நாரதர், பிரம்மா, சனக
ரிஷி, கந்தர்வர்கள், சந்திரன், கின்னர மிதுரர்கள், சூரியன் என யாவரும்
வந்து ஹோயாளி பூஜை (விடிவெள்ளி தோன்றுகையில் செய்யும் பூஜைக்கு ஹோயாளி
பூஜை என்று பெயர்) செய்து தத்தம் இடம் சேருகின்றனர். எடுத்த காரியம் ஜெயம்
பெற, நல்ல புத்திரர்கள் உண்டாக, குழந்தை பாக்கியம் உண்டாக, கல்வியில்
முன்னேற, வியாபாரம் அபிவிருத்தி அடைய, வடபத்திர சாயியை பதினெட்டு
பௌர்ணமியன்று விரதம் இருந்து, மாலை வேளையில் தொழுது வந்தால்
வேண்டியன சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.
‘‘நாடிய பொருள் கைகூடும் கல்வியும் மேன்மையும் உண்டாம் எண்ணியவாறு
மணமுமீடேறும்; கொடிய பிணி கருகும். கடனுபாதை போம் &ஆயுளுமாங்கு பலமாகு
மய்யன் வடபத்திரன் முழுமதி முயன்று மூவாறு திதி தொழுபவர்கே!’’
திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிக்கக் கூட வேண்டாம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.
அவ்வளவு சக்தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார்
கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிரி எனப்படும் மலையை வலம் வருவதால்
பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில்
ஐயமேதும் இல்லை.
அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு
அத்தனை சிறப்பு உள்ளது என்று முற்றம் உணர்ந்த ஞானிகளும்,
யோகிகளும் தெரிவிக்கின்றனர்.
ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
“அருணாசலத்தை வலம் வருகிறேன்” என்று சொன்னாலே பாவம் தீரும்.
“வலம் வர வேண்டும்” என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்திப் பாவமும்
நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும்
கிரிவலம் வருவதால் நீங்கும்.
கிரிவலம் பற்றி அருணாசல புராணம் :
அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து
வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே
பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு.
சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில்
அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.
வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு
லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு
கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு
சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால்
நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும்
பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின்
பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது
அருணாச்சல புராணம்.
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்