“”என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தனர். நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியா வான்’ என்பது பழமொழி. என் தந்தை ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்காவுக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். “அக்கா விற்கு அப்பா
எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று கவலைப்பட்டோம்.
திடீரென்று ஒருநாள், வசதியான குடும் பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார். “அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்ச ணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள். எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது.
இப்படியே ஒவ்வொரு பெண் ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள் ளைகளே கிடைத்தார்கள். எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத் தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பா விடம் நான், “இது எப்படியப்பா சாத்திய மாயிற்று’ என்று கேட்டேன். அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் விஷ்ணு சஹஸ்த்ர நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்த்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார்.
என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர் களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே. அதனினும் பெரிய உண்மை விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தின் மகிமையே!
சுமார் 1,300 ஆண்டுகளுக்குமுன் அவதரித்த ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் இளம் வயதிலேயே துறவு பூண்டு, பல அறநெறிகளை மக்களுக்கு போதித்து, அத்வைதம் என்னுமொரு சிறப் பான பேருண்மையைத் தோற்றுவித்தார். “ஜீவாத்மா வேறு- பரமாத்மா வேறு’ என்ப தல்ல அவர் கொள்கை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. அந்த பரமாத்மாவை உனக்குள்ளேயே காணலாம். அதனை அறிந்து வாழ்வதுதான் அத்வைத தத்துவம். கணக்கற்ற துறவிகள் அவருடைய சீடரானார் கள். ஆதிசங்கர பகவத்பாதரும் ஒரு ஸஹஸ்த்ர நாமத்தை எழுதினார். அது அம்பாளைப் பற்றியது. ஆயிரம் திருநாமங்களுடைய அம்பாளைத் துதிக்கும் அந்த ஸ்லோகத்திற்கு “லலிதா சஹஸ்த்ர நாமம்’ எனப் பெயரிட்டார். உமா மகேஸ்வரியின் அண்ணனான ஸ்ரீவிஷ்ணு விற்கு எப்படி சஹஸ்த்ர நாமம் உண்டா யிற்றோ அதைப்போல அம்பிகையையும் ஆயிரம் நாமங்களோடு துதித்தார் சங்கரர்.
ஒருநாள் காலை, ஒரு சந்நியாசிக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்துவிட்டு, ஆசிரம வாயிலிலுள்ள திண்ணையில் உட் கார்ந்தார் சங்கரர். அப்போது பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்த்ர நாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத் தார்.
“”சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்த்ர நாம ஓலைச் சுவடி இருக்கும்.
அதை எடுத்து வா” என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்த்ர நாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், “”சீடனே… நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்த்ர நாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்… நன்றா கப் பார்…” என்றார். சீடன் படித்துப் பார்த்த போது “விஷ்ணு சஹஸ்த்ர நாமம்’ என்றிருந் தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடியும் உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்த்ர நாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
“”உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தையே கொண்டு வருகிறாயே?” என்று கடிந்து கொண்டார் சங்கரர்.
அதற்கு அவன் சொன்னான்:
“”சுவாமி, நான் தாங்கள் இயற்றிய லலிதா சஹஸ்த்ர நாமத்தைத்தான் எடுத்தேன். ஆனால் ஒரு சிறுமி, மறுபடியும் மறுபடியும் என் கையில் இதைக் கொடுத்து அவரிடம் கொடு என்று கட்டளை இடுகிறாள். பார்த் தால் விஷ்ணு சஹஸ்த்ர நாமம். நான் என்ன செய்வது? தவறு என் மீதல்ல. அந்தச் சிறுமியின் விஷமம் இது…”
வியப்படைந்த ஆதிசங்கரர் ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார். தன் சீடனுடைய கையில் லலிதா சஹஸ்த்ர நாமத்திற்கு பதிலாக விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தைக் கொடுத்து, “இதற்கு உரை எழுதச் சொல்’ என்றது அந்த அம்பாளே என்பதை அறிந்து மகிழ்ந்தார். அம்பாள் தன்னுடைய சீடனுக்கு காட்சியளித்த தைத் கண்டு மகிழ்ந்தாலும், தனக்கு அவள் தரிசனம் தரவில்லையே என்று வருந்தினார். இருப்பினும் அம்பாளுடைய கட்டளைக்கேற்ப விஷ்ணு சஹஸ்த்ர நாமத்திற்கு உரை எழுதி, அது இன்றளவும் பகவத்பாதருடைய பெருமையைப் பேசுகிறது.
பார்வதிதேவி சிவபெருமானிடம் கேட்கிறா ளாம்:
கேனோபாயேன லகுனோ
விஷ்ணூர் நாம ஸஹஸ்த்ரம்/
பட்யதே பண்டிதைர் நித்யம்
ச்ரோது மிச்யாம்யஹம் ப்ரபோ//
அதாவது, “”விஷ்ணுவின் ஆயிரம் பெயர் களை நினைவில் வைத்துக் கொண்டு வழிபட பண்டிதர்களாலும் படித்தவர்களாலும், மட்டுமே முடியும். சாதாரண பாமரர்களால் முடியுமா சுவாமி?” என்கிறாள் பார்வதிதேவி. அதற்கு சிவபெருமான் பதில் சொல்கிறார்:
ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே//
ஸஹ்ஸ்த்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே//
“”படிக்காத பாமரர்கள் “ஸ்ரீராம ராம ராம என்று சொன்னாலே போதும்; சஹஸ்த்ர நாம பாராயணம் செய்த புண்ணியம் கிடைக்கும்” என்றாராம் சிவபெருமான்.
உண்மைதான். ராம நாமத்திற்கும் நாராயண ஜெபத்திற்கும் அத்தனை மகிமை உண்டு. காலஞ்சென்ற என்னுடைய பாட்டனார் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் புலமை பெற்றவர். தினமும் இரவு படுக்கப்போகும்போது சில கதை களை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும். பிறகு அப் படியே தூங்கிவிடுவோம். அவர் சொன்ன ஒரு கதை…
ஒரு பெரியவர் இருந்தார். பக்திமான்.
அவருக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் பின்னாளில் நாத்திகனாக இருந்தான்.
அவனுக்குத் திருமணமானவுடன் ஒரு குழந்தை பிறந்ததாம். குழந்தைக்கு தாத்தாவானவர், “நாராயணன்’ என்று பெயரிட்டார். குழந்தையின் தந்தையான நாத்திகனுக்கோ அந்தப் பெயர் பிடிக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய தந்தை வைத்த பெயராயிற்றே என்று சுருக்கமாக “நாணா… நாணா’ என்றுதான் தன் குழந்தையைக் கூப்பிடுவானாம். பல வருடங்கள் கழித்து
அந்த நாத்திகனுக்கு அந்திமக் காலம் நெருங்கி யது. அப்போது ஊரிலிருந்து வந்த மகன் நாராயணன், “அப்பா, என்ன ஆச்சு உங்க ளுக்கு?’ என்றானாம். நாக்கு குழற, “நாணா வந்துட்டியா?’ என்று கேட்பதற்கு பதிலாக, “நாராயணா வந்துட்டியா’ என்று சொன்ன அடுத்த கணம் அவன் உயிர் பிரிந்தது.
எம கிங்கரர்கள் அவனை மகாவிஷ்ணு விடம் அழைத்துச் சென்றார்களாம். “”இவனை மோட்சத்துக்கு அனுப்புங்கள்” என்றாராம் விஷ்ணு. “”என்ன சுவாமி இது. இவன் பெரிய பாவி. உங்களுடைய பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று தன் பிள்ளையையே “நாணா’ என்றுதானே கூப்பிட்டான். இவனை மோட்சத்துக்கு அனுப்புகிறீர்களே?” என்று கேட்டாளாம் மகாலட்சுமி. அதற்கு விஷ்ணு, “”கடைசியில் உயிர் பிரியும் முன்னர் நாராயணா என்று ஒருமுறை என் பெயரைச் சொல்லிவிட்டான். அதனாலேயே மோட்சம்” என்றா ராம்.
அதைப்போல “ஓம் நமோ நாராயணா’ என்றால் விஷ்ணு பக்தர்களும், “ஓம் நம சிவாய’ என்றால் சிவ பக்தர்களும் மோட்சத் தையும் கைலாயத்தையும் அடையலாம்.
பங்குனி உத்திரம்- 5-4-2012
அன்பர்களைக் காத்து அருள்புரிய திருமால் பல அவதாரங்கள் எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
“பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் அவ்வப்போது அவதாரம் செய்கிறேன்’ என்று கிருஷ்ண பகவான் கீதையில் கூறியுள்ளார். அதன்படி கல்கி அவதாரத்தை எதிர்நோக்கும் சூழ்நிலையில் நாம் தற்போது இருந்து வருகிறோம்.
மச்ச, கூர்ம அவதாரங்கள்
திருமாலின் முந்தைய ஒன்பது அவதாரங்களில் மீன், ஆமை ஆகியன அவசரமாக எடுக்கப்பட்டவை. இவற்றில் திருமாலுடன் திருமகளும் இணைந்து தோன்றவில்லை. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோதுதான் மகாலட்சுமி தோன்றினாள்.
அப்போது திருமால் அவளைத் திருமணம் செய்துகொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
வராக அவதாரத்தில்…
பன்றியாய் வடிவெடித்து கடலுக்குள் மூழ்கிய திருமால், கடலின் அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மற்றோர் கூறான பூமடந்தையை மேலே கொண்டுவந்தார். அதனால் லட்சுமி வராகர் என்ற திருநாமம் திருமாலுக்கு ஏற்பட்டது. பிராட்டிக்கு அகிலவல்லி என்று பெயர் அமைந்தது. அகிலவல்லி சமேத ஆதிவராகப் பெருமாளை சென்னை அருகேயுள்ள திருவிடந்தை யிலும், கடல் மல்லையிலும் தரிசிக்கலாம். வராகத் தலமான ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீதேவி- பூமாதேவியுடன் பூவராகர் காட்சியளிக்கிறார்.
நான்காவதான நரசிம்ம அவதாரத்தில் திருமால் இரணியனை வதைத்து உக்கிர நிலையில் இருந்தார்.
அப்போது மகாலட்சுமியே அவரது கோபத்தைத் தணித்தாள் என்பதை அறிவோம். இதனால் லட்சுமி நரசிம்மர் என்றே அவரை மக்கள் வழிபடத் துவங்கினர்.
ஐந்தாவதான வாமன அவதாரத்தில் அந்தணர் குலச் சிறுவனாகச் சென்று, மகாபலியிடம் மூவடி மண்கேட்டு, பின்னர் ஓங்கி உலகளந்த உத்தமனாய்த் தோன்றினார் பெருமாள். ஆறாவது பரசுராம அவதாரத்தில் மாலவன் நித்திய பிரம்மச்சாரியாய் இருந்தார். அதனால் இவ்விரு அவதாரங்களில் திருமகளைப் பற்றி கூறப்படவில்லை.
ராம, பலராம அவதாரங்களில்…
ஏழாவது ராமாவதாரத்தில், திருமகள் ஜனக மன்னரின் மகளாகப் பிறந்தாள். அங்கு ஜனகராஜன் சபையில் வைக்கப்பட்டிருந்த வில்லை முறித்து சீதாபிராட்டியை ராமன் மணந்தான். சீதாபிராட்டிக்கு ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் ஏற்பட்டன. மதுராந்தகத்தில் சீதையே ஜனகவல்லித் தாயாராக தனிக்கோவில் கொண்டுள்ளதை ஈண்டு நினைவு கொள்ளலாம். எட்டாவது பலராம அவதாரத்தில் திருமகள் ரேவதி என்ற திருநாமத்துடன் விளங்கினாள்.
ஒன்பதாவது கிருஷ்ணா வதாரத்தில் திருமகளே ருக்மிணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள். திருவல்லிக்கேணியிலும், காஞ்சி திருப்பாடகமான பாண்டவ தூதர் சந்நிதியிலும் ருக்மிணி பிராட்டி என்ற பெயருடன் திருமகள் அருள்பாலிக்கிறாள்.
பத்தாவது அவதாரமாக திருமால் குதிரை முகத்துடன் அவதரிக்கப் போவதாகவும்; அப்போது திருமகள் வித்யா லட்சுமியாய் விளங்கப்போகிறாள் என்பதும் பெரியோர்களின் அருள்வாக்கு.
மேலும் திருமாலின் சக்கரத்தையும் கொண்டாடும் வழக்கம் வைணவத்தில்அமைந்துள்ளது. சக்கரத்தண்ணலின் நாயகிகளாக விஜயவல்லி- சுதர்சனவல்லி விளங்குவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
பங்குனி உத்திரம்
பாற்கடலில் உதித்த பாவை நல்லாளான திருமகளுக்கு பங்குனி உத்திர நன்னாளே அவதார தினமாகவும், திருமண நன்னா ளாகவும் திருமால் திருத்தலங்களில் கொண்டாடப்படுகிறது. இத்திருக்கல்யாண உற்சவத்தில் மட்டுமே ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதனும் ரங்கநாயகியும் ஒன்றாகக் காட்சி தருவார்கள். அடியவர்களுக்கு தாயாய் விளங்கும் திருமகளே நமக்காக எம்பிரானிடம் பரிந்து பேசி, நம் குறைகளைச் சிறியதாகவும் நிறைகளைப் பெரியதாகவும் கூறி, அவன் அருளுக்கு இலக்காகுமாறு
செய்கிறாள் என்பது பெரியோர்களின் தீர்க்கமான முடிவு. அதனால்தான் சரணாகதி செய்யும்போது பெருமானும் பிராட்டியும் ஒன்றாய் இருக்கும் நேரத்தில் செய்ய வேண்டும் என்கின்றனர். ராமாயணத்தில் சீதையுடன் இருந்த காலத்தில் காகாசுரன் செய்த சரணாகதிக்குப் பலன் கிடைத்தது.
அப்படிச் செய்யாத இராவணனோ மாண்டு போனான்.
திருமகளோடு கூடியவனாய் லட்சுமி நாராயணனாக- லட்சுமி ஹயக்ரீவனாக- லட்சுமி வராகனாக- லட்சுமி நரசிம்மனாக- சீதா ராமனாக- ருக்மிணி மணாளனாக பல அவதாரங்களில் தோன்றிய பரம்பொருளே திருக்கோவில்களில் அர்ச்சாவதார நிலையில் அமைந்துள்ளார்.
திருக்கோவில்களில் பெருமாளும் பிராட்டியும் பங்குனி உத்திர நன்னாளில் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி யளிக்கிறார்கள். இத்திருநாளே சரணாகதி செய்ய சரியான தருணம். அன்று திவ்விய தம்பதிகளைத் தரிசித்து சரணாகதி செய்து, பெருமாளுடைய திருநாமங்களைக்கீர்த்தனம் செய்து கொண்டிருந்தால் வைகுந்தம் எளிதில் கிடைக்கும்.
படங்கள்: எம்.என்.எஸ்.
ஸ்ரீ மத் ராமாய ணத்தை ஆதிகவி வால்மீகி வடமொழியில் எழுதினார். கம்பர் கவிநயம் சொட்ட தமிழில் இயற்றி அதை ஸ்ரீரங்கப் பெருமாள் முன்பாகவே அரங்கேற்றினார். துளசி தாசர் இந்தி மொழியில் ராமாயணத்தை எழுதினார். குலசேகர ஆழ்வார் போன்றவர்களும் பக்திச் சுவை ததும்ப ராமனைப் பாடி இன்புற்றார்கள்.
ஒவ்வொருவர் பக்தி ஒவ்வொரு விதம். இசையால் இறைவனை அடைந்துவிடலாம். இசை மூலம் பரந்தாமனைப் பணிந்தவர்கள் பலர். சுவையான தமிழில் ராமபிரானைப் பாடி அவர் அருளைப் பெற்றவர்களுள் அருணாசலக் கவிராயரும் ஒருவர்.
ஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப் பால் அருளிய சீர்காழியில் பிறந்தவர் அருணாசலக் கவிராயர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் சகோதர னின் ஆதரவில் வளர்ந்தார். ஏழ்மையான குடும்பம். அருணாசலத்திற்கு இசையில் ஆர்வம் அதிகமாக இருந்தது; நல்ல குரல் வளமும் இருந்தது. தமையனின் வார்த்தைக் குப் பணிந்து, அந்த ஊரிலிருந்த அம்பல வாணக் கவிராயரிடம் சைவத் திருமுறைகளையும், வடமொழியையும், தமிழ் சாத்திரங்களையும் கற்று வந்தார். இசையில் ஆர்வம் அதிகம் இருந்ததால் எல்லாவற்றையும் பாடலாக மாற்றிப் பாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்.
நீராடுவதற்கு நதிக்குச் சென்றால், தனிமையில் இருந்து தன் இனிமையான குரலில் பாடி மகிழ்வார். நேரம் போவது தெரியாமல் பாடிக் கொண்டிருப்பார்.
அருணாசலத்தின் இறை பக்தியையும் இனிய குரலையும் கண்ட தருமபுரம் ஆதீனம், அவரை துறவு கொள்ளச் செய்து இறைப்பணியில் ஈடுபடுத்த விழைந்தார். ஆனால் அருணாசலத்தின் தமையன் அதற்கு சம்மதிக்கவில்லை.
அருணாசலம் கம்ப ராமாயணத்தை மிகுந்த ஆர்வமாகப் படித்தார். எப்போ தும் ராம சிந்தனையுடனேயே இருந்தார். ராமனை இசையால் பாடி இன்புற வேண்டும் என்று மனம் துடித்தது.
ஒருநாள் இரவு அருணாசலம் கனவில் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். கோதண்டத்தை ஏந்திய ராமபிரானும் லட்சுமணனும் தரிசனம் தந்து, “ராமா யணத்தை கர்நாடக இசையில் பாடு’ என்று சொல்லி அருள்பாலித்தார்கள்.
அருணாசலத்திற்கு மேனி சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அடுத்த வினா டியே அவருடைய மனதில் இசை பிர வாகமாகப் பொங்கிற்று. “யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேன்’ என்ற பாடல் இசை வடிவில் வந்தது. ஸ்ரீராமன் மிதிலா நகருக்குள் வரும்போது, கன்னி மாடத்திலிருந்த சீதாதேவி தன் தோழி களிடம் கேட்பதாக அமைந்தது இந்தப் பாடல். தன் மனதிற்குள் சுந்தர ரூபமான ஸ்ரீராமனை அனுபவித்துப் பாடிய பாடல்.
இயல், இசை, நாடக நூல்களை 12 ஆண்டுகள் முழுமூச்சாகக் கற்றார்அருணாசலம். அவர் வாலிப வயதைஅடைந்தவுடன், அவருடைய தமையன் தனக்குத் தெரிந்த சீலமுள்ள குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அருணாசலத்திற்கு கடை ஒன்றை வைத்துக் கொடுத்தார் பெண்ணின் தந்தை. பகல் வேளைகளில் வியாபாரத்தை கவனிப்பார். இரவில் புராண பிரவசனம் செய்வார். அருணாசலத்தின் பிரவசனத் தைக் கேட்க மக்கள் திரளாகக் கூடினார் கள். இனிமையான குரலில் அவர் ராமா யணத்தை இசையுடன் பாடிச் சொல்லும் போது, மக்கள் மெய்ம்மறந்து கேட்பார்கள்.
அருணாசலம் குறிப்பு எதுவும் எடுப்பதில்லை. ஸ்ரீராமரை தியானித்து மேடையில் வந்து அமர்ந்தவுடன், அவரிடமிருந்து அருவியாகப் பாடல்கள் அமுதம் போன்று கொட்டும். அருணா சலத்தின் முகத்தில் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிக்கும். நெற்றியில் திருநீறு, தூய வெள்ளை ஆடை, கழுத்தில் துளசிமாலை. ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ராமனை எப்படி அனுபவித்தாரோ அப்படியே அருணாசலமும் அனுபவித்தார்.
நாளுக்கு நாள் அருணாசலத்தின் புகழ் கூடியது. சீர்காழிக்கு அருகிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து கோதண்ட ராமன், வேங்கடராமன் என்ற இளைஞர் கள் தவறாமல் அருணாசலத்தின் பிரவசனத் தைக் கேட்க வருவார்கள். அருணாசலத் தின் இசையிலும், புராணம் சொல்லும் அழகிலும் தங்கள் மனதைப் பறிகொடுத் தார்கள். அவர்கள் அருணாசலத்தை நமஸ்கரித்து, “ஐயா, உங்கள் இசையில் நாங்கள் கட்டுண்டோம். நீங்கள் எங்களுக்கு ராமாயணப் பாடல்களைக் கற்றுத் தரவேண்டும். உங்கள் பாடல்களின் நகல் வேண்டும்’ என்று பணிவோடு வேண்டினார்கள். அருணாசலம் மகிழ்ந்து அவர்களுக்கு இசையுடன் ராமாயணப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். ராம கதையை தானும் அனுபவித்து அவர் களையும் அனுபவிக்கும்படி செய்தார்.
பிறந்தது முதல் சீர்காழியை விட்டு எங்குமே செல்லாதபோதிலும், அயோத்தி யையும், சரயு நதியையும், தண்டகாரண் யத்தையும், கோதாவரி நதியையும் அப்ப டியே கண்முன்னே கொண்டு நிறுத்தி விடுவார். ஒருநாள் ராமாயண பிரவசனம் சொல்லும்போது, ராமர் காட்டுக்குப் போகும் கட்டத்தில் கைகேயி கோபித்துக் கொண்டு மந்தரையிடம் பாடிய, “ராமனுக்கே மன்னன் முடிசூட்டினால்’ என்ற பாடலைத் திரும்பத் திரும்ப பாடி மெய்சிலிர்த்துப் போனாராம். லட்சு மணன் பொங்கி எழும்போது, “நானே ராமனுக்கு முடி சூட்டுவேன்’ என்று ஆவேசமாகப் பாடியபோது, சபையில் உள்ள அனைவரும் வெலவெலத்துப் போனார்களாம். லட்சுமணனின் சீற்றமும் வில்லின் நாண் ஒலியும் அவரது பாடலில் வெளிப்பட்டதாம்.
ஸ்ரீ ராமபிரானைப் பற்றி ராமநாடக கீர்த்தனைகளை நாற்பது ராகங்களில் பாடினார். தவிர தனிப்பாடல்களும் பாடினார். அத்தனை பாடல்களும் மனதை உருக்கும்படியாக அமைந்தன.
“சரணம், சரணம் ரகுராமா, நீ என்னை தற்காத்து அருள் பரந்தாமா’ போன்ற பாடல்களை பக்தி ததும்ப பாடியுள்ளார். ராமாயணம் முழுவதையும் பாடலாகப் பாடினார். இவர் இயற்றிய, “ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜெயமங்களம், திவ்யமுக சந்திரனுக்கு சுபமங்களம்’ என்ற பாடல் எல்லாரையும் மிகவும் கவர்ந்தது. பல வித்வான்கள் கச்சேரிகளில் இவரது பாடல்களைப் பாடினார்கள்.
எப்போதுமே கவிஞர்களுக்கு சோதனை உண்டு. கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றும்போது எதிர்ப்பு ஏற்பட்டதுபோல, அருணாசலக் கவி யின் பாடல்களை அரங்கேற்றும்போது எதிர்ப்பு தெரிவித்தனர். பெருமாள் உத்தரவு கொடுத்தால்தான் அரங்கேற்றம் நடக்கும் என்று கண்டிப்பாகச் சொன் னார்கள்.
அருணாசலக் கவிராயர் ராமனிடமே தஞ்சம் ஆனார். ஸ்ரீராமனை நினைத்து உருகி, “ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீரங்கநாதனே’ என்று மோகன ராகத்தில் மனம் கசிந்து பாடி உருகினார். அந்தப் பாடலில், “விச்வாமித்திரர் பின் நடந்த வருத்தமோ’ என ஆரம்பித்து, ராவணவதம் முடிய ராமாயணத்தில் உள்ள அத்தனை சம்பவங்களையும் பாடி முடித்தார். இறைவன் அருணாசலத்தின் பக்தியோடு கூடிய இசையைக் கேட்டு அருள்புரிந்தார். வைணவ ஆச்சார்யர் களின் கனவில் திருமாலே வந்து அரங்கேற்ற நாளைச் சொல்லி மறைந் தார். கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய அதே பங்குனித் திருநாளில் அருணாசலக் கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளும் மிகச் சிறப்பாக அரங்கேறியது.
புதுவையில் துபாஷாக இருந்த அனந்தரங்கம் பிள்ளை, கவிராயரை வரவேற்று சிறப்புக்கள் செய்தார். மணலி முத்துக் கிருஷ்ண பிள்ளை என்பவர் கவிராயரின் பாடல்களைப் பிரபலம் செய்தார். “நாடெல்லாம் ஒலிக்க வேண்டிய நாத காவியம்’ என்று பாராட்டினார்.
அருணாசலக் கவிராயரின் பாடல்கள் இன்றும் சங்கீத வித்வான்களால் பாடப்படுகிறது. நாமும் கவிராயரது பாடல்களைப் பாடி, ஸ்ரீ ராமனின் அருளைப் பெறுவோம்.
பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்தை விளக்கிக் காட்ட, நான்முகனை சரீரமாகக் கொண்டு அவரது புத்திரர்களாக அவதரித்தவர்கள் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத (நால்வர்) அவதாரம்.
இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர்ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக்கொண்டுவர எடுத்தது வராக அவதாரம்.
பக்தியே முக்கியம் என்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தை விளக்குவதற்காக எடுத்தது நாரதர் அவதாரம்.
புலனடக்கம் செய்து தவமியற்றுவது எப்படி என்பதை நிரூபிக்க எடுத்தது நர- நாராயணர்களின் அவதாரம்.
தன் தாய்க்கு நற்கதியடையும் வழிகளை உபதேசிக்க எடுத்தது கபில அவதாரம்.
அத்திரி முனிவருக்கும்
அனுசூயா தேவிக்கும்
ஒரு தேசத்தை நன்றாக ஆளும் விதத்தை ருசி என்னும் முனிவருக்கு விளக்கிக் கூற எடுத்தது யக்ஞ அவதாரம்.
ஸ்வாயம்பு மனுவின் பேரனுக்கு புத்திரனாகப் பிறந்து, தருமங்களை நிலைநாட்ட எடுத்தது ரிஷபதேவ அவதாரம்.
தவ முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடியவனான வேனனை அழிக்க எடுத்தது பிருது அவதாரம்.
மனுவாகப் போகும் சத்தியவிரதனை ஓடத்திலேற்றி, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுக்க எடுத்தது மச்ச அவதாரம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்தபோது, அதைத் தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம்.
பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிவந்த போது, அதை பாத்திரத்தில் எடுத்து தேவர் களிடம் கொடுப்பதற்காக எடுத்தது தன்வந்திரி அவதாரம்.
அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட எடுத்தது மோகினி அவதாரம்.
தன் பக்தன் பிரகலாதனைத் துன்புறுத்திய இரண்ய கசிபுவைக் கொல்வதற்காக எடுத்தது நரசிம்ம அவதாரம்.
தன் பக்தனான மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனைப் பாதாள லோகத்திற்கு போகச் செய்ய எடுத்தது வாமன அவதாரம்.
ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக் கும் புதல்வனாகப் பிறந்து, 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழிக்க எடுத்தது பரசுராம அவதாரம்.
வேதங்கள் மிகவும் விஸ்தாரமாய் இருந்த தால், அவற்றை நான்காக வகுத்து பரவச் செய்யும் பொருட்டும், தருமங்களை எல்லாருக் கும் உபதேசிக்கும் பொருட்டும் எடுத்தது வியாச அவதாரம்.
இராவணன், கும்பகர்ணன் மற்றும் அரக்கர்களைக் கொன்று, முனிவர்களைக் காப்பாற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்தது ராம அவதாரம்.
கம்சன், சிசுபாலன், தந்த வக்ரன் முதலிய அரக்கர்கள் நீண்டநாள் வாழ்ந்ததனால், அவர்களைக் கொன்று பூமி பாரத்தைக் குறைக்க எடுத்தது பலராம- ஸ்ரீகிருஷ்ண அவதாரங்கள்.
அஹிம்சை தத்துவத்தை மறுபடியும் பூமியில் நிலைநாட்டி வேரூன்றச் செய்ய எடுத்தது புத்தர் அவதாரம்.
கலியுகத்தில் அதர்மம் மேலிட்டு தர்மம் அழியும்போது அந்த தர்மத்தை மறுபடியும் நிலைநாட்ட பகவான் எடுக்க இருப்பது கல்கி அவதாரம்.
எந்தெந்த சமயத்தில் என்னென்ன குணங்கள் குறைந்து, கெட்ட குணங்களும் அதர்ம மும் மேலிடுகின்றனவோ, அவ்வப்பொழு தெல்லாம் தோன்றி அவ்வக்குறைகளைத் தீர்த்து உலகத்தை பகவான் உய்வித்திருக்கிறார்.
இந்த அவதாரங்களில் பகவான் முழுஅம்சத்துடன் அவதரித்தது ஸ்ரீகிருஷ்ண அவதாரமே. இந்த அவதாரத்தின் நோக்கம்- நடக்கும் கலியுகத்தில் இன்று வாழும் மானுடர்களுக்கும் பிறக்கப்போகும் மானுடர் களுக்கும் நல்வழிகாட்டி தர்மத்தை உபதேசிப் பதேயாகும்!
அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருத்தப்பட்டன. அவர்கள்மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதை களின் மனக் குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு.
முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மை யாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-ஆவது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான்.
தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு. இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி, தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார். அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும்.
ராமநவமியன்று ராமர் படத்தையும் ராமாயண காவியத்தையும் பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். ராமர் பட்டாபிஷேக படத்தைப் பூஜிப்பதும் நன்று. வடை, பருப்பு, பானகம், நீர்மோர், பாயசம் போன்றவற்றைப் படைத்து, பின் அவற்றை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். விசிறி தானம் செய்வதும் நல்லது. நியமத்தோடு விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
ராமநவமியன்று, “ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா’ என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும்; எல்லை யற்ற புண்ணியம் கிட்டும். ராமநவமி யில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப் பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
“ஓம் நமோ நாராயணாய’ என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள “ரா’வும் “ம’வும் இணைந்து உருவானதே “ராம’ எனும் மந்திரம். இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக் கூடியது. “ரா’ என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்களெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும்; “ம’ என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போடு அந்தப் பாவங்கள் மீண்டு வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.
வால்மீகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதிவிட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து, அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர். முன்னதாக பிரம்மா நூறு கோடி சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றியதாகவும்; அதை வால்மீகி 24,000 சுலோகங்களுடன், பல கிளைக் கதைகளைக் கொண்டு 500 சர்க்கங்கள், ஆறு காண்டங் கள் உள்ளதாக எழுதினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
ராமபிரான் முடிசூடிக்கொண்டபின் அஸ்வமேத யாகம் செய்தார். அதன்பின் அஸ்வமேத யாகத்தைவிட பத்து மடங்கு பெரிதான வாஜபேயம், நூறு மடங்கு பெரிதான ஸுவர்ணகம், கோஸவம், அதிராத்திகம், அக்னிஷ்டோமம் ஆகிய யாகங்களையும் 16 ஆண்டுகள் செய்தார். இவற்றுக்கு வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கச்யபர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், பரத்வாஜர், துர்வாசர், பார்கவர், வாமனர், மார்கண்டேயர், மௌத்கல்யர், கர்க்கர், சியவனர், சதானந்தர், சுப்ரமர், அகத்தியர், அத்ரி, வால்மீகி போன்ற ரிஷிகளும் முனிவர்களும் துணையிருந்தனர்.
சீதை: ஏர் முனையில் கிடைத்தவள் என்பதால் சீதை என பெயர் பெற்றாள். பூமகளின் அவதாரம் என்பதால் பொறுமை யின் சிகரமாக விளங்கினாள்; கற்புக் கனலியாகவும் விளங்கினாள். சிவபெருமான் சீதையாகவும்; உமையவள் ராமனாகவும் அவதரித்ததாக சில புராணங்கள் கூறுகின்றன. சிவனின் நிறம் சீதைக்கும், உமையின் நிறம் ராமனுக்கும்அமைந்திருந்தது.
லட்சுமணன்: பாற்கடல் வாசனின் படுக்கையான ஆதிசேஷனே ராமனுக்குத் தம்பியாக அவதரித்தான். வெளியில் உலவும் ராமனின் உயிர் போன்றவன். தொண்டு செய்யவே பிறந்த உத்தமன். இவனது மனைவி ஊர்மிளா; மகன்கள் அங்கதன், சந்திரசேது.
பரதன்: திருமாலின் சக்ராயுதமே பரதனா கப் பிறந்தது என்பர். ராமபிரான் வனவாசம் செல்லும்போது அவரின் பாதுகைகளைப் பெற்றான் பரதன். அவர் திரும்பி வந்ததும் அவற்றை ராமனின் கால்களில் அணிவித்தவ னும் பரதனே. ஜனகனின் தம்பி குசத்வஜனின் மகள் மாண்டவி என்பவள்தான் பரதனின் மனைவி; தக்ஷன், புஷ்கலன் ஆகியோர் மகன்கள்.
சத்ருக்ணன்: திருமாலின் சங்குதான் இவன் என்பர். ஐம்புலன்களை வென்றவன். லவனும் குசனும் ராம சரிதத்தைப் பாட,
அதை முதலில் கேட்டவன் இவனே. லவண துர்க்கையின் அருளால் லவணாசுரனை வென்றவன். குசத்வஜனின் இரண்டாவது மகள் சுருதகீர்த்தியை மணந்தவன்.
லவன், குசன்: இராமபிரானின் இரட்டைப் பிள்ளைகள். குசனை கோசல நாட்டு மன்னனாகவும்; லவனை உத்தர நாட்டு மன்னனாகவும் ராமர் முடிசூட்டினார்.
பாதுகை: வைகுண்டத்தில் எம்பெருமாளின் பாதுகையை சங்கும் சக்கரமும் ஏளனம் செய்தன. ராமாவதாரத்தின்போது சக்கரமான பரதனும், சங்காகிய சத்ருக்ணனும் அதே பாதுகையை 14 ஆண்டுகள் பூஜிக்கும்படி செய்தார் பகவான் என்கின்றன புராணங்கள்.
சிவபெருமானும் பார்வதியும் ஆதிப் பரம்பொருள். அவர்களுக்குத் தாய்- தந்தை இல்லை. ஆனால் உலகிலுள்ள மக்களுக்கு அவர்களே தாயும் தகப்பனுமாக இருக்கின் றனர். அழித்தல் தொழில் கொண்ட அரன், அவரை நோக்கி தவம் செய்யும் அனைவருக்கும் வரம் தரும் வள்ளல். உலகமே அவனை வணங்குகிறது. ஆனால் பரமன் தன் மகன்களான கணபதியையும் முருகனையும் இரண்டு சந்தர்ப்பங்களில் வணங்கிய தாக புராணம் சொல்கிறது.
எடுத்த காரியங்கள் சித்தி பெற முதன்முதலில் கணேசனை வணங்குவது நம் நாட்டு வழக்கம். அதனால்தான் இவருக்கு மூத்த பிள்ளை யார் என்று பெயர். தேவர்களைத் துன்புறுத்திய கஜமுகாசுரனைக் கொன்று தேவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க, சதாசிவனே தன் இச்சையால் யானைமுகத்துடன் ஞானமயமான திருமேனியைத் தாங்கித் தோன்றினான் என்பது புராண வரலாறு.
சிவபெருமான் திரபுர தகனத்தின் பொருட்டு தேர்மீது ஏறிச் சென்றபோது, விநாயகரை முதற்கண் வணங்காது புறப்பட்டதால் தேர்ச் சக்கரத்தின் அச்சு முறிந்துவிட்டது. பின்னர், சங்கரன் அச்சிறுபாக்கத்தில் ஆனைமுகத் தானைப் பூஜித்துச் சென்றதால்தான் திரிபுராதி களை வென்றார் என்றால் என்னே மூத்த பிள்ளையாரின் பெருமை!கபிலதேவ நாயனார் தன்னுடைய மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலையில் பிள்ளையாரின் பெருமையைப் பதிவு செய்துள்ளார்.”திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தோனைக்
காதலால் கூப்புவர்தம் கை.’என்பது பாடல். கணபதியை வழிபட்டால் அவனருளால் வழிபடுவோர்க்கு எல்லாவிதமான இலக்குமி கடாட்சமும் கிட்டும்; செய்ய நினைக்கும் காரியங்கள் இனிது நிறைவேறும்; செம்மையான சொற்களைப் பேசும் வாக்கு வல்லமையை அளிக்கும்; பெருமை தரும்; நன்மக்களை உடையராகச் செய்யும்; ஆதலால் தேவலோகத்திலுள்ள தேவர்களும் விருப்பத் தால் பயபக்தியுடன் விநாயகரை கைகூப்பி வணங்கி அவனருளைப் பெறுகிறார்கள்.எனவே, பூலோகத்திலுள்ள மக்களாகிய நாமும் வழிபட வேண்டும் என்பது இப்பாடலின் பொருள்.தகப்பன்சாமி பிரணவப் பொருள் அறிந்த முருகன் அதுபற்றி எல்லாரையும் கேட்டு, சொல்லாத வர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கினான். பிரம்மதேவனைக் கேட்டான். படைக்கும் கடவுள் விழித்தான். அவனைச் சிறைச் சாலைக்கு அனுப்பினான் சிங்கார வேலன்.
எனவே முருகனைப் பார்க்கவே எல்லாரும் பயந்தார்கள். தந்தையான பரமேஸ்வரன், “பிரணவப் பொருளை எமக்குச் சொல்வாயாக’ என்று முருகனிடம் கேட்டார். “தந்தையாரே, உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். ஆனால் நான் குரு ஸ்தானத்திலும் நீங்கள் சிஷ்ய ஸ்தானத்திலும் இருந்தால் நான் தயார்’ என்றான் எழில்வேலன். அதன்படியே அரன் நிற்க, அழகன் மேலே அமர்ந்து பிரணவத்துக்குப் பொருள் கூறினான். இக்காட்சி சுவாமி மலையில் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் பாலசுப்ரமணியனுக்கு “தகப்பன் சாமி’ என்ற பெயரும் உண்டாயிற்று.
எந்த காரியம் செய்தாலும் கணபதியை முதன்முதலில் வழிபட வேண்டும் என்றும்; யாராக இருந்தாலும் கற்பிப்பவன் மேலேயும் கற்பிக்கப்படுபவன் கீழேயும் இருக்க வேண்டும் என்றும் இவ்விரு நிகழ்வுகளின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
தோற்றி அருணகிரி துன்பம்தளைத் துடைத்தாய்நேற்றி அயனைச் சிறைவிடுத்தாய்- அப்பன் அரனுக்கேபொய்யா பிரணவப் பொருளைச் சொல்லி வந்ததென் பழனிஅய்யா என்பால் ஏன்அடம்?
கணபதி கழல் போற்றி! கங்கை சூடன் திருவடி போற்றி! கண்ணன் மருகன் காலடி போற்றி!
ஹிந்து சமயக் கோட்பாடுகளின் வாசனைகூட அறியாத ஒரு சமூகத்தில் பகவத் கீதையின் மணம் பரப்பும் பொறுப்பை சவாலாக ஏற்றுக்கொண்டு, 1965 ஆகஸ்ட்
13-ல் அமெரிக்காவுக்கு கப்பலில் புறப்படுகிறார் பிரபுபாதா. 37 நாள்கள் பயணத்துக்குப் பிறகு நியூயார்க் நகரை தொட்ட பிரபுபாதாவிடம் 40 ரூபாய் மட்டுமே மீதமிருந்தது.
இரும்புப்பெட்டி முழுவதும் புத்தகங்கள், கொடை, உலர் தானியங்கள் மட்டுமே வைத்திருந்த பிரபுபாதாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஓராண்டு காலம் தன்னந்தனியே வேதங்களையும், புராணங்களையும் புரட்டியபடியே இருந்த அவர், அமெரிக்காவில் கிருஷ்ணரின் பகவத் கீதையைப் பரப்புவதற்கு காலம் கனிந்ததாக உணர்கிறார்.
இப்பணியை மேற்கொள்வதற்காக 1966 ஜூலை 11ம் தேதி இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னெஸ்(இஸ்கான்) என்ற அமைப்பை நிறுவுகிறார்.
அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராமா, ஹரே ராமா, ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதோடு, பகவத்கீதையின் இனிய நாதத்தைப் பரப்புகிறார்.
இந்தியா, அமெரிக்காவை கடந்து உலகம் முழுவதும் கிருஷ்ணரின் தத்துவம் மற்றும் பகவத்கீதையின் பக்திமணம் கமழ வேண்டும் என்பதற்காக 1965 முதல் 1977 வரை கடுமையாக உழைக்கும் பிரபுபாதா, 6 கண்டங்களில் 108 கிருஷ்ணர் கோயில்களை நிறுவுகிறார்.
அங்கெல்லாம் கிருஷ்ணரையும், பகவத் கீதைக்கான விதைகளையும் தூவுகிறார். 1970 மற்றும் 1971ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 33 கிருஷ்ணர் கோயில்களை நிறுவியிருக்கிறார் என்பதில் இருந்தே அவருடையே அர்ப்பணிப்பு, வேதாந்தத்தின் மீதுள்ள தாகம் புலப்படுகிறது.
1977 நவம்பர் 14ம் தேதி பூலோகத்தில் இருந்து தேவலோகம் புறப்படுவதற்கு முன் பகவத்கீதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கிறார். ஒருமுறை பிரபுபாதாவை சந்தித்த அன்றைய இந்திய பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி,தாங்கள் மொழிப் பெயர்த்துள்ள பகவத்கீதை நூல்களை இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் அனைவரும் படித்தறிய வேண்டும் என்கிறார்.
பகவத்கீதையின் 700 வசனங்களை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ள பிரபுபாதா, உலகின் ஒவ்வொரு நுனியிலும் கிருஷ்ணரின் போதனைகளைக் கொண்டுசெல்ல 1972}ல் பக்திவேதாந்த நூல் அறக்கட்டளையை நிறுவுகிறார். அதேபோல டாலஸ் நகரில் குருகுல பள்ளியை நிறுவி வேதகால வாழ்க்கைமுறையை அறிமுகம் செய்துவைக்கிறார்.
தள்ளாத வயதிலும் தளராமல் பல கண்டங்களுக்குப் பயணித்த பிரபுபாதா, 1989 கூட்டங்களில் பகவத்கீதை போதனையில் ஈடுபட்டிருக்கிறார். அறிவு, அறிவியல் கொட்டிக்கிடக்கும் மேற்கத்திய உலகமே பிரபுபாதா மொழி பெயர்த்த பகவத்கீதையை கண்டு அதிசயிப்பதற்கு கிருஷ்ணரின் நல்வழிப்படுத்தும் போதனைகளே காரணம்” என்கிறார் பிரபுபாதாவின் சீடரான ஸ்ரீபதிதாசா.
குதிரை வடிவில் வந்த கேசி அரக்கனை வென்ற “கேசிகாட்’. கோபியருடன் இணைந்து விளையாடிய “நிதுவனம்’. கண்ணனால் சாபவிமோசனம் பெற்ற “காளியகாட்’. கண்ணன் மாலைப் பொழுதில் விளையாடி “úஸவாகுஞ்ச்’ என்று பல இடங்கள் இன்றும் காணப்படுகின்றன. விரியும் கதிர் போல்வான் இன்றும் பிருந்தாவனத்தில் காட்சி அளிப்பான் என்று கண்ணனின் பக்தர்கள் ஆடியும் பாடியும் அழைக்கின்றனர்.
பர்ஸானா
நான்காவது நாள் பர்ஸானா என்ற அற்புத இடத்திற்குச் சென்றோம். பக்தியும் பிரேமையும் மட்டுமே கண்ணனின் அன்பைப் பெறுவதற்கு அடிப்படையானவை. ராதை என்ற பெண் பிரேமையின் வடிவம். ராவல் என்ற இடத்தில் பிறந்தவளான ராதை, கண்ணனால் மயக்கப்பட்டு “ராதே ஷ்யாம்’ என்று ஒன்றாக இணைந்த தோற்றம் பெற்றவள். வட நாட்டில் இந்த ராதை மயக்கம் தெற்குப் பகுதியில் காண இயலவில்லை என்றாலும் உயிர்களின் தாபக்குரல் “ராதே ராதே’ என்று ஒலிப்பது, மெய்சிலிர்க்கிறது!
பர்ஸானாவிலிருந்து பிருந்தாவனம் செல்லும் வழியில் பல புண்ணியத் தலங்கள் காணப்படுகின்றன. ஸ்ரீஜிமந்திர், ஜெய்ப்பூர் அரண்மனைக் கோயில், ஸ்ரீ ரங்காஜி மந்திர் என்று சலவைக் கற்களால் ஆன பல கோயில்களைத் தரிசிக்க முடிகிறது.
சில புண்ணியத் துறைகள்
கம்சன் மாளிகையின் பின்புறம் ஓடும் யமுனை ஆற்றில் ராசகிரீடை செய்து மகிழ்ச்சியோடு வரும் பலராமன் வேண்டுகோளுக்கு இணங்கிவராத யமுனை ஆற்றைத் தன் கலப்பையால் இழுத்து தடம் மாற்றிய “பலராம்காட்’.
கண்ணன், கோபியரின் ஆடைகளைப் பறித்து வஸ்த்ராபரணம் செய்து விளையாடிய “சீரகாட்’. கண்ணன் தனக்கேயுரியவன் என்று நினைத்த சுக்ரூரர் நாண, குளத்தின் கரையிலும் குளத்தின் ஆழத்திலும் காட்சி அளித்த “சுக்ரூரர் காட்’, 24 தீர்த்தங்களுள் நடுவாக விளங்கும் கம்சன் அந்திமக்கிரியை நடத்திய “விஸ்ராம்காட்’. துருவன் தங்கி ஓய்வெடுத்த “துருவகாட்’ என்று பல புண்ணியத் தலங்கள் கண்டு மகிழ்வு ஏற்பட்டது. கார்த்திகை மாதம் சுக்லபட்ச த்வதியை யமுனை பிறந்தநாள் என்று இன்றும் கொண்டாடிக் களிக்கின்றனர்.
காம்யவனம்
கண்ணன் கோபியர்களுடன் உலா வந்த காம்யவனம், அடர்ந்து விரிந்த காடாக உள்ளது. மது அரக்கனை அழித்து, மதுசூதனன் என்று கண்ணனுக்குப் பெயர் வரக் காரணாக இருந்த “மதுவனம்’.
குமுத மலர்களைக் கண்ணன், கோபியருக்கு அளித்து விளையாடிய “குமுதவனம்’ எனப் புல்லும் கல்லும் கதை பேசும் வனங்கள் பல இன்றும் உள்ளன. கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணன் திருவடிகள் மனதில் நிலையாக இருக்கவேண்டும் என்று மனம் பிரார்த்திக்க, வனங்களை பயபக்தியுடன் சுற்றிப்பார்த்தோம்.
கோவர்த்தன கிரி
80 அடி உயரமே உடைய கோவர்த்தனம் கோபர்கள் அனைவரும் கிருஷ்ணனைத் துதித்த இடம் அல்லவா! அங்கு “அன்னகூடு’ உற்சவம் நடத்தப்பட்டது. பட்டாச்சாரியார்கள் கிருஷ்ண பகவானுக்கு திருமஞ்சனம் செய்தனர். எட்டு பகுதிகளில் 1,000 பேர்கள் காணும் வகையில் 8 பாறைத் தூண்கள் இறைவனாக ஆவாஹனம் செய்யப்பட்டு, திருமஞ்சனம் வேத கோஷங்களோடு மாலைக் கால்தது நிலவொளியில் நடத்தப்பட்டது.
“கோவிந்தா.. கோவிந்தா…’ என்ற அற்புதமான மெய்யுணர்வு ஒலி எங்கும் நிறைந்தது. பலவித அன்னங்கள் பரிமாறப்பட்டு மகிழ்ச்சி பெற்றனர் மக்கள்.
இறுதி நாள் பிருந்தாவனத்தில் “இஸ்கான்’ திறந்தவெளி அரங்கில் ருக்மணி கல்யாணம். 8,000 பக்தர்கள் கண்டுகளித்த அற்புத கல்யாணம். அதைத் தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகளும் பக்தி மணம் பரப்பி நம் கருத்தைக் கவர்ந்தன.
மார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் – 25
அவரும் அவரது திருமண் காப்பாகிய நாமமும் அவ்வளவு பிரசித்தி! அந்தப் பெருமாளை அப்படியே ஒத்தி எடுத்ததுபோல கம்பீர மாய் நின்று சேவை சாதிக் கும் அந்த விஷ்ணுவின் இன்னொரு அம்சம்தான் ஒப்பிலியப்பன்!
ஸ்ரீவைஷ்ணவர்கள் அவ்வளவு பேருக்குமே ஒப்பிலியப்பன் என்றவுடன் குடந்தையாகிய கும்ப கோணம் நகரமும், அந்த நகரின் எல்லையில் கோவில் கொண்டிருக்கும் அவனது திருச்சந்நிதியும் மனதை நிறைக்கும்.
அவன் ஆயிரம் நாமங்கள் கொண்டவன். தூணிலும் இருப்பவன்; துரும் பிலும் இருப்பவன். இதனாலேயே இவனோடு எவரையும் ஒப்பிட இயலாது- ஒப்பில்லாதவன்! அதனாலேயே ஒப்பிலியப்பனாகவும் திகழ்கிறான். இவனை உப்பிலி என்றும் வழுத்துவது நமது பேரன்பினால்தான். அதாவது உப்பில்லாத வன் என்ற பொருளுக்குள், துளியும் உவர்ப் பில்லாதபடி எல்லாருக்கும் பிடித்தமானவன்- நறுஞ்சுவை உடையவன் என்பவனாய் இவனை சான்றோர்கள் போற்றி மகிழ்வார்கள்.
இந்த ஒப்பில்லாத உப்பிலியப்பனுக்கு சென்னையிலும் ஒரு ஆலயம் உள்ளது என்றால் அது எத்தனை தித்திப்பான செய்தி!
குடந்தையில் குடிகொண்டிருப்பவன் அங்கிருப்பதுபோலவே அர்ச்சாவதாரியாகஅதே சௌலப்பியத்தோடு சென்னை மடிப் பாக்கத்தை ஒட்டியுள்ள புழுதிவாக்கம் ராம் நகரிலும் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறான்.
தேடிச்சென்று தரிசிப்பவர்கள் வைத்த கண்ணை எடுக்க முடியாது. அத்தனை பேரெழில்! அத்தனை தேஜஸ்! அருகிலேயே ஸ்ரீராமனுக்கும் சந்நிதி. இங்கே ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக ராமனாய் சீதாதேவி யுடன் சேவை சாதிக்கிறான்.
உபதேவர்களாய் அனுமன் சேவை சாதிக்க, ஸ்ரீசுதர்சனமும் ஆழ்வாராய் நின்று சேவை சாதிக்கிறார். நித்யப்படி ஆராதனைகளோடு பவித்ரோற்சவம், தெப்போற்சவம் முதல் சகல உற்சவங்களும் இந்த ஆலயத்தில் வெகுசிறப் பாக நடந்து வருகின்றன.
ராஜகோபுர திருப்பணியும் நடந்து வருகிறது!
கோபுரத்து செங்கல்லில் ஒரு செங்கல்லாவது நம் கல்லாக இருப்பது நாம் எடுத்த பிறப்புக்கும் செல்லும் வழிக்கும் நல்லது.
அழியாத வினைகளுக்கு இது ஒரு பெரும் பரிகாரம். அன்பர்களின் கூட்டுறவினால்தான் ஆலய நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதன் பொருளாதாரத்துக்கு தாராளமாக அன்பர்கள் நிதியுதவி செய்யலாம். அவனைத் தேடிச்சென்று தொழுது கண்ணீர் உகுத்து,
“சொல்லாய் திருமார்பா! உனக்காகி தொண்டுபட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பி
மல்லா! குடமாடீ! மது சூதனே உலகில்
சொல்லா நல்லிசையாய்! திருவிண்ணகரானே!’
முன்னொரு சமயம் தேவசிற்பி விஸ்வகர்மாவிற்கும், அசுரசிற்பி மயனுக்கும் சிற்பக்கலைத் திறமையில் போட்டியும், வீண்விவாதமும் ஏற்பட்ட தருணத்தில், பிரம்மன் தலையிட்டு மயனைப் பார்த்து, “”விஸ்வகர்மா தன் பூர்வ புண்ணிய பயனால் திருபாற்கடலில் சயனித்திருக்கும் க்ஷீ ராப்தி நாதன் மகிழும் வகையில், ஆச்சரிய மான கோவிலை எழுப்பி பெருமையையும் கீர்த்தியையும் அடைந்தார். நீயும் கர்ம பூமிக்குச் சென்று காவேரி தீரத்தில் எம்பெருமான் அனுக்கிரகம் பெற்று, சிறப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து விமானத்துடன் கூடிய கோவிலை எழுப்புவாயானால், அவர் மகிழ்ந்து நிற்க, நீயும் விஸ்வகர்மாவைப்போல் பேரும் புகழும் அடையலாம்” என்று கூறினார். மயனும் காவேரி தீரத்தில், பாஸ்கர க்ஷேத்திரத்தில், மார்க்கண்டேயர் தவம்புரிந்த திருவெள்ளியங் குடியை அடைந்து, எம்பெருமானைத் துதித்து பல்லாண்டு பாடி நிற்க, எம்பெருமானும் அனுக்கிரகித்தார்.
இங்கே இந்திரன், மயன், மார்க்கண்டேயர், பூதேவி, சுக்கிரன், பிரம்மா, பராசர மகரிஷி ஆகியோர் எம்பெரு மானை திருமணக் கோலத்தில் காட்சி தர வேண்டி நின்றிட, எம்பெருமானும் சங்கு- சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு, திருமணக் கோலத் தில் காட்சி அளித் தார். இங்கே கரு டாழ்வார் சங்கு- சக்கரத்தை பெருமாளிடம் கொடுப்பதற்காக, நின்ற நிலை- அமர்ந்த நிலையில் இல்லாமல் எழுகின்ற நிலையில், சங்கு- சக்கரத்துடன் அதிஅற்புதமான காட்சியில் சேவை சாதிக்கிறார். இத்தகைய வைபவ கோலத்துடன் கூடிய இந்த க்ஷேத்திரத்தில், திருமணம் தடைப் பட்டோர், திருமண முறிவால் பாதிக்கப் பட்டோர், திருமணமே கானல் நீராகி வெற்று மரமாய் நின்றோர், சுக்கிர தோஷத்தினால் பாதிப்புற்றோர், சந்தான பாக்கியமற்றோர், கண்பார்வை குறையுள்ளோர் போன்றவர்கள் வருகை தந்து வேண்டி நின்றால், அவர்கள் குறை போக்கி அபயமளித்து நிறைவைத் தருவார் எம்பெருமானின் பெரிய திருவடியான கருடாழ்வார்.
இத்தலத்தில் பராசர மகரிஷி நீண்ட காலம் உறைந்து, க்ஷீ ராப்தி நாதனுக்கு கைங்கரியங்கள் செய்து, துவாதச அஷ்டாக்ஷர மந்திரங்களால் வைகானச ஆகமப்படி அர்ச்சித் ததாக புராணங்கள் கூறுகின்றன. இதன் நிமித்தமாய் பராசர தீர்த்தமும் உள்ளது. பதவி பறிபோன தேவேந் திரன் வேதோத்தமர் களைக் கொண்டு எம் பெருமானுக்கு பல உற்ச வாதிகளைச் செய்து, அதன் பலனாய் மீண்டும் இந்திரபதவியை அடைந்தான் என தலவரலாறு கூறுகிறது.
இக்கோவிலின் தல விருட்சம் செங்கதளி (செவ்வாழை). இது கோவிலின் உட்பிராகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்து வாழையடி வாழையாக வளர்ந்து ஆழ்வாரால் பாடப்பெற்று திகழ்வதை இன்றும் காணலாம். இத்தலத்தில் ஸ்ரீ அகோபில மட ஜீயர், பெரியாஸ்ரமம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ஸ்ரீசந்திர சேகர சரஸ்வதி பரமாச் சாரிய சுவாமிகள் போன்ற யதீஸ்வரர்களும் சாதுர்மாஸ்யம், வியாஸ பூஜை முதலியனஅனுஷ்டித்துள்ளனர்.
கும்பகோணம்- அணைக்கரை வழியில் சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். ஆட்டோ, கார் வசதி உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து எண் 2 (வழி-அணைக்குடி) அடிக்கடி செல்லுகிறது.
காலை 8.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும்; மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கீதையின் நாயகனே கிருஷ்ணா… கிருஷ்ணா…
ஒருத்தி மகளாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் யொளித்து வளர
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தகுதியாகில்
திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்…
கிருஷ்ண பகவான் குழந்தையாக பிறந்து செய்த லீலைகள் ஏராளம். குழந்தை வடிவில் அவன் அருள்புரியும் தலம் குருவாயூர். இக்கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் அதை கையில் எடுத்து வணங்கி மீண்டும் போடுவார்கள். இதற்கு பக்தை ஒருத்திக்கு குருவாயூரப்பன் அருளிய கதை சொல்லப்படுகிறது. கிருஷ்ணனிடம் அன்பும், மாறாத பக்தியும் உள்ள ஓர் ஏழை மூதாட்டி, பகவானை நினைத்து தன் வீட்டில் உள்ள குண்டுமணி மரத்தில் இருந்து விழும் மணிகளை ஒரு பை நிறைய சேகரித்து வைத்து இருந்தாள். அவளிடம் பணமோ, பொருளோ இல்லை. என்றைக்காவது கண்ணனை தரிசிக்க செல்லும் போது குண்டுமணிகளை அர்ப்பணிக்க நினைத்திருந்தாள்.
ஒருநாள் கண்ணனை தரிசிக்க குருவாயூர் புறப்பட்டாள். கால்கள் நோக பயணித்து மிகவும் சோர்ந்துபோய் குருவாயூரை அடைந்தாள். அதே நாளில்தான் அரசன் கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிக்க இருந்தான். ஆதலால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது. அரசன் வரும் நேரம் என்பதால் சேவகர்கள் வழியில் போவோர் வருவோரை எல்லாம் விரட்டி வழியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மூதாட்டி வந்ததால் அவளை தள்ளிவிட்டனர். கீழே விழுந்த பாட்டியின் கையில் இருந்த குண்டுமணிகள் கீழே சிதறி ஓடின.
கண்ணனுக்கு வைத்திருந்த மணிகள் கையை விட்டு போனதால் மூதாட்டியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதே நேரத்தில் அரசன் சமர்ப்பிக்க கொண்டுவந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது. எல்லோரையும் விரட்டியது. கண்ணில் கண்டவற்றை துவம்சம் செய்தது. ஏதோ தெய்வ குற்றம் என்பதை உணர்ந்த அரசன் குருவாயூரப்பனிடம் பிரசன்னம் கேட்டார். அப்பொழுது ‘நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். அவள் ஆசையாக கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்’ என அசரீரி கேட்டது.
உடனே அனைவரும் யார் அந்த பக்தை என தேடினர். மூதாட்டிதான் அந்த பக்தை என்பதை கண்டுபிடித்தனர். சிதறிய குண்டுமணிகளை எல்லாம் பொறுக்கி எடுத்து பாட்டியிடம் கொடுத்து சகல உபசாரங்களுடன் சன்னதிக்கு அழைத்து சென்றனர். பாட்டி அதை கிருஷ்ணனின் காலடியில் சமர்ப்பித்தாள். இன்றைக்கும் அந்த நிகழ்வினை நினைவு கூரும் வகையில் குருவாயூரில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளன. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், அரசன், ஆண்டி என்ற பாகுபாடு பகவானிடம் இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. அவன் பக்தியைத்தான் பார்க்கிறான். அதன்படியே அருள்கிறான்.
கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணனை குழந்தையாக பாவித்து, நம் இல்லங்களில் உள்ள குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து வாசல் முதல் பூஜை அறை வரை பாதம் வரைய வேண்டும்.
கீதையின் நாயகனான கண்ணன் படத்துக்கு மாலை, பூ சூட்டி நைவைத்யமாக சுகியன், அப்பம், தட்டை, வெல்லச்சீடை, உப்புச்சீடை, முள் முறுக்கு, கை முறுக்கு, தயிர், வெண்ணெய் மற்றும் பழவகைகள் படைத்து அவரவர் முறைப்படி வணங்கி வழிபட்டால் கேட்டது கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி குழந்தை பாக்கிய தடை உள்ளவர்கள், புதுமண தம்பதிகள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க புத்திர பாக்கியத்தை வேண்டினால் குறையொன்றும் இல்லாத சந்தான பாக்கியத்தை நிச்சயம் அருள்வான் கண்ணன்.
வறண்ட வயல்களில் உள்ளவர்களுக்கு- நீரை எப்பொழுது பார்க்கப்போகிறோமென்று வாடிக்கிடக்கிறவர்களுக்கு இந்த மேகக் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே முக மலர்ச்சி வருகிறது. மழையும் பெய்துவிட்டால் அவர் கள் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது. இதுவே பரம பாகவதர்களுக்கு அருள் மழை யாகப் பரிணமிக்கிறது. அவர்கள் நம்மைப்போல் சாதாரண நீருக்குக் காத்திருப்பதில்லை. பரமன் அவர்கள் தாபத்துக்கு அவனுடைய கடாக்ஷ மாகிய மழையைப் பெய்து, இந்த பந்தத்திலிருந்து விடுபடும் வழியைத் தெரிவிக்கிறான். ஆகையால்தான் “கார்முகில்’ என்று எல்லாரும் பரமனைப் பாடுகிறார்கள்.
நிஜமாகவே பரமன் இந்த நிறம்தானா?
அல்லது ஒருவர் முதலில் பாடிவிட்டு அதையே தொடர்ந்து எல்லாரும் பின்பற்றி வருகிறார் களா? இல்லையென்றால் யார் யார் இந்த வண்ணத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற ஐயம் பலருக்குத் தோன்றலாம். ராமாயணத்தில் வசிஷ்டர், விசுவாமித்ரர் இன்னும் அநேகர் ராமனைப் பார்த்திருக்கிறார்கள். வால்மீகியின் வாக்குப்படி, கிருஷ்ணாவதாரத்தில் விதுரரும் கோபிகைகளும் பார்த்து அனுபவித்த கிருஷ்ண னைப்போல் யாரும்
அனுபவிக்கவில்லை. இவையெல்லாம் கலியுகத்திற்குமுன் நடந்தவை. இக்கலியில் யார் யார் இந்தக் கார் முகில் வண்ணனைப் பார்த்திருக்கிறார்கள்?
முதலாவதாக நம்மாழ் வாரை எடுத்துக் கொள் வோம். அவர் நேரில் பரமார்த்த ஸ்வரூபத்தைப் பார்த்துப் பாடிக் கொண்டே வர, மதுரகவியாழ்வார் நமக் குத் திருவாய் மொழியினைத் தந்திருக்கிறார். அப்படி செய்து தந்துள்ள வேதத்துக்கும் சமமான அதில் என்ன சொல்கிறார்?
“ஈசன் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்.‘
“கற்பகம் என்னமுதம் கார்முகில் போலும் வேங்கடம் நல்வெற்பன்.’
“கார்முகில்போல் வண்ணன், என் கண்ணனை நான் கண்டேனே!’
பரமனை எப்படியெல்லாம் கூப்பிட வேண் டும் என்று சொல்லும்போது, “பங்கயக் கண் ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ?’ என்று சொல்லி வந்தவர் பாட்டின் கடைசி அடி யில் “சாதி மாணிக்கத்தையே’ என்று கூறுகிறார்.
“கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல் வண்ணன் கண்ணன், எம்மானைப் பாடி’ என்றெல்லாம் பாடினார்.
அடுத்தபடியாக ஸ்ரீ ஆண்டாள் என்ற நீளாதேவியை எடுத்துக்கொள்வோம். இவள் பெரியாழ்வாரால் துளசி வனத்தில் கண்டெடுக் கப்பட்ட- ஸ்ரீமந் நாராயணன் மார்பிலுறையும் மகாலட்சுமியே என்பதை யாவரும் அறிவர். இருந்தாலும் பாரில் தோன்றியவுடனே நம் போல்தான் பரமனுக்கு ஏங்குகிறாள். இங்கு “நம்போல்’ என்றது, பெரியாழ்வார் மற்றும் அடியார்களையே குறிக்கும். நமக்கு பரமனைச் சிந்திக்கவும் இந்த உலகில் காலம் கிடைப்ப தில்லை. சம்சாரக் கடலில் தினம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயேதான் காலம் கடந்துவிடுகிறதே! திருப்பாவை என்னும் வேத சாரமாகிய பாடல்களில் ஆண்டாள் என்ன சொல்கிறாள்? “கார்மேனிச் செங்கண், ஆழி மழைக் கண்ணா, மெய்கறுத்து, முகில் வண்ணன் பேர்பாட, பூவைப் பூவண்ணா, மணி வண்ணா’ என்றெல் லாம் கிருஷ்ண பரமாத் வைப் பாடுகிறாள். எல்லாம் கருமேகத்தின் திருமேனியைப் பற்றியே பாடுவதைப் பார்க்கிறோம்.
அடுத்தபடியாக கேரள நாட்டில் பிறந்து, வாதநோயினால் கஷ்டப்பட்டு, ஸ்ரீகுருவாயூரப்பனை பாடிப்பாடி, “இவையெல்லால் உண்மையா?’ என்று கேட்டுக் கேட்டு, அப்பனும் “ஆம்’ என்று தலையசைத்து ஆமோதிக்க, பிறகு பாடிய நாராயண நம்பூதிரிகள், நாராயணீயம் 1,023 பாடல்களைப் பாடிவிட்டு தனக்கு இன் னும் குருவாயூரப்பன் தரிசனம் கிடைக்க வில்லையே என்று ஏங்கி, தலையைக் கீழே வைத்து வணங்கி, கால்களை மேலே தூக்கிய வுடன் அப்பன் அவருக்கு நேரில் தரிசனம் தருகிறார். அதில் “அக்ரே பச்யாமி’ என்று தொடங்கி அப்படியே ஒவ்வொரு அங்கங் களாக வர்ணிக்கிறார். அதிலும் இதே கார்முகில் வண்ண விளக்கங்கள்தாம்.
அடுத்து, மிகக் குறுகிய காலத்துக்குள் நம் பாரத தேசத்தில் காவேரிக் கரையில் வாழ்ந்து முக்தியடைந்த மகான் ஸ்ரீ தியாகராஜர். அவர் ராமனையே நினைந்துருகி அவனை நேரில் பட்டாபிஷேக ராமனாகப் பார்த்தவர். அவரு டைய சில கீர்த்தனைகளைக் கவனிப்போம்.
“அந்துரு தயராதுரா’ என்ற கீர்த்தனத்தின் சரணத்தில், “நீர தாப சரீர’ என்கிறார்.
“கோடி நதுலு’ என்ற கீர்த்தனத்தின்
அநுபல்லவியில் “ஸுடிக ச்யாம ஸுந்தர மூர்த்தி நி’ என்பதால், நீல வண்ண காந்தியுடைய மிகவும் கருத்த நீலமானது கார்முகிலுக்குச் சமம் என்பதையும் ஒப்புக் கொள்வோம்.
இப்படியாக பல ஆழ்வார்கள், திருத் தொண்டர்கள் பலவிதமாக அனுபவித்த பரம்பொருளின் கார்மேக நிறத்தினை- மேகங் களைக் காணும்போதாவது நாம் நினைத்தால் அவன் தன் அருள் மழையினைப் பொழிந்து நமக்கு உய்யும்வழி காட்டுவான் என்பது திண்ணம்!
வைகுண்ட சொர்க்கம் வழங்கும் வள்ளல்
ஒரு ஆலயத்தை கோவில் என்போரும் உண்டு; கோயில் என்போரும் உண்டு. ஆனால் கோயில் என்ற பதம், ‘கோ’ உறைந்திருக்கும் ‘இல்’ என்று பொருள்படுவதாகவேtt பலரும் சொல்வார்கள். அதாவது கோ என்ற மன்னன் குடியிருக்கும் இல், கோயில். தன் மக்களை ஆள்பவன், அவர்கள் நலம் காப்பவன் மன்னன். ஆனால் அகில உலகத்தையும் படைத்து, காத்து அருளும் இறைவனும் மன்னன் போன்றவன்தானே. ஆகவேதான் கோ என்றால் இறை என்றும் ஒtரு பொருள் உண்டு. இந்த இறைவன் உறையும் இல்தான் கோயில்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசாட்சியும் ஆன்மிகமும் ஒன்றையொன்று சார்ந்தேதான் வளர்ந்துள்ளன. எந்தப் பகுதி மன்னராக இருந்தாலும் அவர் தம் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் எந்தச் செயலிலும் ஈடுபடுவார். அன்றாடக் கடமையிலிருந்து, பகைவரைத் தடுக்கும் அல்லது அவர் மீது போர் தொடுக்கும் பெரிய பொறுப்புவரை அவர் இறையருளின் ஆதரவைப் பெறத் தவறியதேயில்லை.
இந்த வகையில் அரசர்கள் தம் இறைவனாருக்கு பிரமாண்டமான கோயில்களை எழுப்பினார்கள். அதன் மதில் சுவர் நெடிதுயர்ந்தது. வானோக்கி நிமிர்ந்த கோபுரங்களுக்குள்ளேயே ஏறி, உச்சிவரை செல்லும் வசதி இருந்தது. கோயிலுக்குள் இறைவன், மன்னனின் விருப்பத்திற்கேற்ற பிற தெய்வங்கள் சந்நதிகளோடு, நெல் சேமித்து வைக்கும் பெரிய மண்டபங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுவான இந்த அமைப்பு, எதிரி படையெடுப்பிலிருந்து தன் மக்களைக் காப்பதற்கும் எதிர்தாக்குதல் நடத்துவதற்கும் ஒரு மன்னனுக்கு ஏதுவாக இருந்தது. ஒருவேளை போர் நாள் கணக்கில் நீடிக்குமானால், உள்ளேயே இருக்கும் நெல் சேமிப்பு கிடங்குகள் மக்களின் பசி போக்கத் தயாராக இருந்தன. தன் மக்கள் கோயிலுக்குள் வந்து இறைவனை வணங்குவதோடு, சொற்பொழிவுகளைக் கேட்டு மனத் தூய்மை பெறவும் இசை, நடனம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் உற்சாகம் பெறவும் வசதியாக கோயிலின் உள்ளமைப்பை உருவாக்கினான் மன்னன்.
மன்னன் கோயிலை நிர்மாணித்ததில் சுயநலத்தைவிட, பொதுநலத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஓர் உதாரணம்: கோயில் கட்ட தேவைப்படும் மணலை அருகிலேயே, பூமியிலிருந்து தோண்டி எடுத்துக் கொண்டான். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தோண்டி, மணலை சேகரித்து, கோயிலை உருவாக்கிய மன்னன், தோண்டப்பட்டதால் பெரும் பள்ளமாகிவிட்டிருந்த பகுதியை, அப்படியே விட்டுவிடாமல், அதில் நீர் பாய்ச்சி, குளமாக்கி, மக்கள் குடிநீர், குளிநீர் வசதிகள் பெறவும் வழிவகுத்தான். நாளாவட்டத்தில் அவனுடைய பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் மழையும் பொழிந்து குளத்தை நீராலும் மக்கள் மனதை சந்தோஷத்தாலும் நிரந்தரமாக நிரப்பியது.
இப்படி பொது கைங்கர்யம் செய்யும் மன்னனின் சரித்திரம் பெரும்பாலும் ஏதேனும் கல்வெட்டுகளாலோ, அதே கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மன்னனின் சிலையாலோ அறியப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு கோயில்தான், காஞ்சிபுரத்திலுள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம்.
இந்தப் பெருமாளுக்குப் பெருமை சேர்த்தவன் பல்லவ மன்னன். இறையுணர்வை மதித்ததோடு, அதை மக்களுக்கும் பரப்பியதோடு, அவர்களுடைய நல்வாழ்வுக்கு நல்லதோர் காவலனாக இருந்த அரசனின் வம்சம் தழைத்தோங்க வேண்டும் என்பதில் பரந்தாமனுக்கும் அக்கறை இருந்தது.
அதனால்தான் பல்லவ சாம்ராஜ்யத்தில் ஒரு குறிப்பிட்ட தலைமுறையோடு அந்த வம்சமே முற்றுப்பெறப் போகிறது என்பதை உணர்ந்த மாதவன், அந்த மன்னனுடைய ஏக்கத்தைப் போக்கத் தயாராக இருந்தான். இதற்காக பாரத்வாஜ முனிவரைக் கருவியாக்கிக் கொண்டான். அவர் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, அந்த தவத்தை ஒரு கந்தர்வப் பெண் மூலம் கலைக்க வைத்தான். தவம் கலைந்த முனிவர் கோபம் கொள்ளாமல் காமம் கொண்டதில், கந்தர்வப் பெண் அவருக்கு ஓர் ஆண் மகவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு மறைந்தாள். தனிமை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த முனிவருக்கு இப்போது தம் குழந்தையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு!
அவருடைய கவலையைத் தீர்க்கும் வகையாக மஹாவிஷ்ணுவும் மஹாலட்சுமியும் வேடர் உருக்கொண்டு, அங்கே வந்து, அவரிடமிருந்து அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு, உரிய காலத்துக்காகக் காத்திருந்தார்கள். மழலைப்பேறு வேண்டி தலந்தோறும் தீர்த்த யாத்திரை செய்து வந்த பல்லவ மன்னன், ஒரு காட்டில் அந்த வேடுவத் தம்பதியிடமிருந்து குழந்தையைப் பெற்றான். அதற்கு பரமேஸ்வரவர்மன் என்று பெயர் சூட்டினான். குலம் தழைக்க வந்த குழவியை சீராட்டிப் பாராட்டி வளர்த்தான்.
இந்தப் பரமேஸ்வரவர்மன் திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டான். அவனுக்கு பெருமாள் 18 கலைகளை போதித்தார். அவ்வாறு அவர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் போதித்த அந்தக் கலைகளில் பெரிய தேர்ச்சி பெற்ற மன்னன், அதற்கு நன்றிக் கடனாக தான் பெருமாளை தரிசித்த கோலங்களிலேயே அவருக்கு அர்ச்சாவதாரங்கள் உருவாக்கி, கோயிலையும் நிர்மாணித்தான். அவர்தான் வைகுண்ட நாதன் என்ற, பரமேஸ்வரன். கோயில் அமைந்த தலம் பரமேஸ்வர விண்ணகரம் (பரமேச்சுர விண்ணகரம்) என்றாயிற்று.
பல்லவ சிற்பக் கலையின் சிறப்பம்சங்களை கோயிலின் ஒவ்வொரு அங்குலத்திலும் காண முடிகிறது. மன்னன் தரிசித்த பெருமாளை அதே அற்புத கோலங்களில் நாமும் காண முடிகிறது. மூன்றடுக்குகள் கொண்ட அழகிய கோயில் இது. கீழ் அடுக்கில் பெருமாள் வீற்றிருந்த நிலையில் சேவை சாதிக்கிறார்; நடு அடுக்கில் அனந்த சயனராகவும், மேல் அடுக்கில் நின்ற கோலத்திலும் அருள்மழை பொழிகிறார்.
இந்த மூன்று சிலைகளும் வித்தியாசமானவை. அதாவது கீழ், நடு அடுக்குகளில் உள்ள சிலைகள் கற்களாலும், மேல் அடுக்கில் உள்ளது சுதை சிற்பமாகவும் காணப்படுகின்றன. பல்லவர் காலத்திலேயே பெருமழை அழைத்து வந்த பேரிடி காரணமாக மேல் அடுக்கில் நின்றிருந்த பெருமாள் சிலை சிதிலமடைந்ததாகவும் அதற்கு மாற்றாக சுதை சிற்பம் அமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஐரம்மத தீர்த்தம் என்ற திருக்குளம் வறண்டு காணப்படுகிறது.
ஆனால், கோயிலினுள் அழகிய, மணம் கமழும் நந்தவனம் பசுமையாய் உயிர்த்திருக்கிறது. பச்சைப் புல்வெளி கோயிலைச் சுற்றி அமைந்து அந்த பச்சைமா மலைபோல் மேனியனுக்கு வந்தனம் சொல்லுகிறது. அரசும் வேம்பும் பிணைந்து உயர்ந்து நிற்கின்றன. அதனடியில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் சிறு உருவினராகக் காட்சி தருகிறார். அவருக்கு அருகே பல நாகர்கள், மஞ்சள்&குங்குமப் பொட்டுகளில் பொலிகிறார்கள்.
கோயிலினுள் நுழைந்தால் ஒரு கணம், சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்குதான் வந்திருக்கிறோமோ என்ற பிரமிப்பு ஐயம் எழுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்களில் வரிசையாக சுதை சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பமும் பல்லவ சரித்திரத்தை ஆன்மிகப் பின்னணியோடு விவரிக்கிறது. பல்லவ கலைத் திறனைப் பறைசாற்றுவதுபோல, இத்தலத்திலுள்ள மூலவர், அவரைச் சுற்றியுள்ள பிராகாரம், அவற்றைத் தாங்கியிருக்கும் தூண்கள் எல்லாம் ஒரே பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை என்றறியும்போது பிரமிப்பு மேலும் கூடுகிறது.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்த வைகுண்டநாதப் பெருமாளின் ஆசியுடனேயே நிறைவேற்றி வந்திருக்கிறான். அன்றாடக் கடமை முதல் போர் தொடுப்பதுவரை எல்லாம் அவரது ஆசித் துணையுடன்தான். அந்த வகையில் அவன் பாண்டிய மன்னனை வென்றதை திருமங்கையாழ்வார்,
தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் & பர
மேச்சுர விண்ணக ரமதுவே
&என்று சிறப்பிக்கிறார்.
பரமேஸ்வரவர்மனின் பிறப்பு, அவனுக்குப் பெருமாள் அருங்கலைகளையும் சாஸ்திரங்களையும் போதித்த சம்பவங்களை உள் பிராகாரத்தில் சிற்பங்களாகப் பார்த்து, தல புராணத்தை, காட்சி வடிவமாகவே காண முடிகிறது.
இந்த சிற்பங்களையும், அவற்றின் தொன்மை, அவை விவரிக்கும் சரித்திர, புராண சம்பவங்களை ஆராய்ந்து மகிழ்ந்தவர்களில் டெனிஸ் ஹட்ஸன் என்ற ஆங்கிலேயரும் ஒருவர். புற்று நோயால் சுமார் ஒன்பது வருடங்கள் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதையும் பொருட்படுத்தாமல், இதே கோயிலில் பல ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டதாகவும் அந்த ஆராய்ச்சியின் பலனாக 600 பக்கங்கள் கொண்ட பல்லவா ஹிஸ்டரி & வைகுண்ட பெருமாள் என்ற புத்தகத்தை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. 1972 முதல் 2002வரை 30 ஆண்டுகளை அவர் இந்த ஆராய்ச்சியில் செலவிட்டாராம். அந்தப் புத்தகத்தில் பரமேச்சுர விண்ணகரம் என்ற இந்தக் கோயில் மட்டுமல்லாமல், சற்றுத் தொலைவில் இருக்கும் கயிலாயநாதர் கோயில் பற்றிய விவரங்களும் அடங்கியிருக்கின்றன.
கோயிலின் மேல் தளத்தில் மேலும் சில புராண சம்பவங்கள் சிற்பமாக நின்று கதை சொல்கின்றன. மூன்று அவதாரங்கள் நிறைவேற்றிய மூன்று வதங்கள், இரண்யனைக் கிழித்துப் போட்ட நரசிம்மர், நரகாசுரனை வதைத்த கிருஷ்ணர், வாலியைக் கொன்ற ராமர் என்று மூன்று சம்பவங்களும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கும் ஒரு சிலை இங்கே உள்ளது. இத்தலத்திற்கு அவர் ஆற்றிய பணிகளின் அங்கீகாரம் அது. இரண்டு மண்டபங்கள் இந்தக் கோயிலில் தனித்துத் தெரிகின்றன. இப்போது வெறும் மண்டபங்களாக விளங்கும் அவை, பல்லவர் காலத்தில் நடன நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்று மன்னர் குடும்பத்தாரையும் குடிமக்களையும் மகிழ்வித்திருக்கின்றன.
மேற்கு நோக்கி வீற்றிருக்கும் வைகுண்டநாதப் பெருமாளே இங்கே கருவறை தெய்வம். இவர் பரமபதநாதன் என்றும் அழைக்கப்படுகிறார். தன்னைத் தொழுவோருக்கு வைகுண்ட சொர்க்கத்தை இம்மையிலேயே காட்டும் இந்த அருளாளர், அழகாகப் புன்னகைக்கிறார். அந்த மெல்லியப் புன்னகையே எல்லா துயரங்களையும் விரட்டி விடுகிறது.
தாயார் வைகுந்தவல்லி. பெயரளவில் வைகுந்தத்தின் அரசியாக இருந்தாலும் பிரபஞ்சத்தையே ஆட்சி செய்யும் அற்புதத் தாய் இவர். கணவரது பராமரிப்பில் யாரையும் விட்டுவிடக் கூடாதே என்ற தாய்மைப் பரிதவிப்பு அந்தக் கண்களில் தெரிகிறது. அப்படியே விட்டுப் போவதுபோலத் தோன்றினாலும் உடனே எடுத்துச் சொல்லி, எந்த உயிரும் எந்தத் துன்பமும் அடைந்துவிடாதபடி சாலப் பரிந்து பாதுகாக்கும் கருணையும் கூடவே தெரிகிறது.
இந்தக் கோயிலிலிருந்து மாமல்லபுரத்துக்கும் இடையே சுரங்கப் பாதை இருந்ததாகச் சொல்கிறார்கள். குதிரைகள் பூட்டிய தேரில் மன்னன் இவ்விரு தலங்களுக்கும் இந்தப் பாதை வழியாகச் சென்று வருவான் என்றும் அறியும்போது வியப்பு எல்லை மீறுகிறது. அதேபோல இந்தக் கோயிலுக்கும் கயிலாயநாதர் கோயிலுக்கும் இடையேயும் சுரங்கப் பாதை இருந்திருக்கிறது.
இவை மட்டுமல்ல மூலவர் சந்நதிக்கும், முன்மண்டபத்துக்கும் இடையேயும் ஒரு சுரங்கப் பாதை இருந்திருக்கிறது. இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் அதனைத் தோண்டிப் பார்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஊர் பொதுமக்களும் இந்த இறைவன் மீது அன்பு கொண்டிருந்த அலி முகம்மது கான் என்ற முகமதியப் பெரியவரும் அதை அனுமதிக்க விரும்பவில்லை. உடனே சுரங்கப் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் அந்த வாசலை மூடியபடி படிகள் எழுப்பி, மூலவர் சந்நதிக்குப் போகும் வழியாக மாற்றிவிட்டார்கள். அந்தக் கல் பாலத்தை இன்றும் காணலாம். படிகளைப் பார்த்த ஆங்கிலேயர், பூமிக்குக் கீழிறங்கிச் செல்ல முடியும் என்று நினைத்தால், மேலே படியேறி பெருமாளை சேவிக்க வேண்டியிருக்கிறதே என்று ஏமாற்றமடைந்தனர்.
பெருமாளை தரிசித்த பின்னர், பிரசாதமாக அவல்&கல்கண்டு தருகிறார்கள். அதாவது குசேலனாக வருபவர்களும், அவல் போன்ற எளிய நிவேதனம் அளித்தாலும், அதனுடன், இனிமையான கல்கண்டு என்ற வளமான வாழ்வை இந்த வைகுண்டநாதப் பெருமாள் அருள்வான் என்பது உட்பொருள்.
படங்கள்: பாஸ்கர், எம்.என்.எஸ்.
அடுத்த தரிசனம்: சொன்னவண்ணம் செய்த பெருமாள்
ஞானியும் ஒரு குழந்தைதான்
உத்தவரும் ஞானத்தை வேண்டுகிறார்.
அர்ஜுனனுக்கு கர்ம யோகத்தை பிரதானமாகக் கொண்டு உபதேசித்தார். அது போர்க்களத்தில் சொல்லப்பட்டது. ஆனால், உத்தவருக்கு உபதேசிக்கும் களமே வேறு. அதேசமயம் உத்தவருக்கு எல்லாவற்றையும் விடவேண்டிய விஷயமான தியாகத்தை முன்னிறுத்தித்தான் கூறப் போகிறார். இதுவும் கீதைதான். உத்தவருக்காக சொல்லப் போவதால் இது உத்தவ கீதை. இரு கீதைகளுக்கும் லட்சியம் என்னவோ ஞானம்தான். தன் பாதத்தில் கிடந்த உத்தவரை மெல்ல தூக்கினார்.
‘‘உத்தவா, என்னைவிட்டு எப்படி இருப்பாய் என்று நீ கேட்பது சரிதான். உங்களையெல்லாம் விட்டுச் செல்ல எனக்கும் இஷ்டமில்லைதான். இருந்தாலும் இந்த உலகத்திற்கென்று ஒரு நியமம் இருக்கிறதல்லவா. மேலும் நான் இங்கிருந்து புறப்பட்டுவிட்ட ஏழாம் நாள் துவாரகையை கடல் விழுங்கப் போகிறது. ஜனங்கள் எல்லோருக்கும் அதர்மத்தில் ஆசை பிறக்கப் போகிறது. கலி தன் இருகரங்களாலும் ஜனங்களை இறுக்கி அணைத்துக் கொள்ளப் போகிறான். அதனால்தான் சொல்கிறேன் நான் சென்ற பிறகு நீ இங்கு இருக்கக் கூடாது.’’‘‘அப்பொழுது நான் என்ன செய்ய
வேண்டும்?’’‘‘உத்தவா, உன்னைவிட எனக்கு இந்த உலகத்தில் பிரியமானவன் எவருமே கிடையாது. பிரம்மா, ருத்ரன், தேவாதி தேவர்களைவிட நீ எனக்கு பிரியமானவன். யாருக்குமே கொடுக்காத பரம அனுக்கிரகத்தை நான் உனக்கு செய்யப் போகிறேன்’’ என்று பகவான் கூறினார்.
அர்ஜுனனுக்குப் பலவித மார்க்கங்களை கூறி தெளிவுபடுத்திய பகவான், உத்தவரிடம் இன்னும் பலபடி மேலேபோய் தன்னுடைய அந்தராத்மாவில் பகவான் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படையாகப் பேசப் போகிறார். பரம சத்தியத்தை கொஞ்சம் கூட மறைக்காமல், தர்மத்தை அப்படியே பேசப் போகிறார்.
‘‘உத்தவா, நான் இங்கிருந்து புறப்பட்டவுடன் நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெறுமே அழுது கொண்டிருக்கக் கூடாது. என்னை சரியாகப் புரிந்தவனாக, விவேகியாக இருக்க வேண்டும். நான் எல்லோருடைய இருதயத்திலும் எப்போதும் இருக்கிறேன் என்பதை அனுபூதியில் நின்று உணர்ந்து கொள். இந்த சரீரம்தான் கிருஷ்ணன் என்று மற்றவரைப்போல நினைத்து மயங்காதே. அஞ்ஞானிதான் அப்படிச் செய்வான். எனவே, இந்த மாயையோடு நீ விளையாடியது போதும். எப்படியானாலும் சமுத்திரம் விழுங்கப் போகிறது. மிகப்
பெரிய துவாரகாபுரியான இதற்கே இந்த நிலைமைதான். எனவே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடு. அதிலும் முக்கியமாக உன்னுடைய சொந்தங்களிடமும் நண்பர்களிடமும் உள்ள பந்தத்தை அறுத்துவிட்டு ஏகாந்தத்தில் இரு. அவர்களோடு ஸ்நேகம் கொண்ட கீழான உலகிற்கு நீ இழுக்கப்படுவாய். ஏன், சிறிது நேர தியானத்தில்கூட உன்னை உட்காரவிட மாட்டார்கள். ஆத்ம ஞானமெல்லாம் உனக்கு எதற்கு என்று கேட்பார்கள். முதல் தடையே உனக்கு அவர்கள்தான். முதல் மாயையான அவர்களை விட்டு அகன்று விடு.
‘‘உன் இருதயத்திற்குள் என்னை நிறுத்தி, எல்லாமே நானாக இருக்கும் உயர்ந்த நிலையில் நீயும் நிற்க வேண்டும். இவ்வளவு நாட்கள் நீ செய்ததெல்லாம் போதும். ஒன்றை நீ முதலில் புரிந்து கொள். உன் மனதால் எதை பார்க்கிறாயோ அது எல்லாமே பொய். உன்னுடைய உடம்பினாலும்
இந்திரியங்களாலும் அனுபவிக்கப்படும் இன்பம் எல்லாமுமே தற்காலிகம்தான். அதில் துக்கமும் சோகமும் கலந்தே இருக்கும். மனம் தன் மாயா சக்தியினால் சும்மா உன்னை பிரமிக்க வைக்கிறது. உடலாலும் மனதாலும் பெறும் இன்பங்களை உண்மை என்று உன்னை ஏமாற்றுகிறது. ஏன் தெரியுமா? மாயையின் லட்சியமே நீ தப்பித் தவறிகூட ஆத்மாவை பார்க்கக்கூடாது என்பதுதான். அதற்காக எவ்வளவு பெரிய பதவியை தந்தாவது உன்னை அதனிடத்திலே வைத்திருக்கும். மாயை ஒருபோதும் உன் மனதை உள்முகமாக திருப்பாது. பல்வேறு விதமான வேடிக்கைகளையும் கேளிக்கைகளையும் காட்டி வெளி உலகத்திலேயே வைத்திருக்கும். ஜாக்கிரதையாக இரு.
‘‘நீ இந்த உலகத்தில் எப்படி சஞ்சரிக்க வேண்டும் தெரியுமா? மனதை உள்முகமாக இடையறாது திருப்பு. ஒரு கட்டத்திற்குமேல் அது வெளியேற முடியாமல் தானாகச் சுழன்று ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும். அப்படி நீ இருந்தால் குழந்தைபோலாகி விடுவாய். உலகம் எப்படி இருந்தால் என்ன, குழந்தை ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பதில்லையா. குழந்தை யாரிடத்தில் எந்த உபதேசத்தை பெற்றது? அது தன்னில் இருக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கவில்லையா? அந்த நிலைதான் ஞானியுடையதுமாகும். அவன் எல்லோருக்குள்ளும் பிரகாசிப்பான். அவனை நெருங்கியோர் பேரானந்தம் அடைகின்றனர். வேண்டுமோ, வேண்டாமோ, தெரிந்தோ, தெரியாமலோ, அவர்களின் அண்மையில் வருவோரின் பிறவிச் சுழற்சியை ஞானி அறுத்தெறிகிறான். அன்பு செலுத்துவதில் ஆயிரம் தாய்க்கு சமானமானவனாக விளங்குகிறான். அவனிடமிருந்து பொங்கும் பேரன்பு வெள்ளம் பாத்திரா பாத்திரம் பாராமல், பாய்ந்த
படி இருக்கின்றன. நீ அந்த நிலையிலேயே நின்று விடு. அதுதான் சத்தியத்தின் இருப்பிடம்’’ என்று பகவான் கூற, உத்தவர் நெகிழ்ந்து போனார்.
‘‘மகாயோகியே, யோகத்தை உலகிற்கு அளித்தவனும் நீயே! யோக சொரூபனும் நீயே! யோகத்தால் அடையப்படுபவனும் நீதான்! என்னிடம் தாங்கள் கொண்ட கருணையினால் எனக்கு சந்நியாச தர்மத்தை உபதேசம் செய்தீர்கள். சந்நியாசத்தால் ஏற்படும் தியாகத்தை கூறுகிறீர்கள். ஆனால், இந்த தியாகம் செய்வது என்பது உலக விஷயங்களிலும் இன்பங்களிலும் மூழ்கியிருக்கும் எங்களால் எப்படி துறக்க முடியும்? எல்லாவற்றையும் விட எங்களுக்கு ஏது துணிவு? நான், என்னுடையது எனும் வலிமையான எண்ணம்
தொகுப்பு: கிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்