செவ்வாய், 22 மே, 2012

விரதங்கள்

விரதங்கள்



மகாலட்சுமி விரத மகிமை
மகாலட்சுமி விரத மகிமைவரலட்சுமி விரதத்தை கன்னிப்பெண்களும், ஆண்களும் கூட கொண்டாடலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. திருமணமான பெண்கள் தலைநோன்பு நோற்பது மிகவும் விசேஷமாகும். இந்த விரதத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஸ்ரீபரமேஸ்வரனும், பார்வதி தேவியும், கயிலை மலையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களது ஆட்டத்திற்கு நடுவராக சித்திரநேமி என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் நியதி தவறி பரமேசுவரன் பக்கமாகவே பேசினான். நடுநிலை தவறிய சித்திரநேமியின் செயல் தேவிக்கு கோபத்தை உண்டாக்கியது. சங்கரி சினங்கொண்டாள். சித்ரநேமியை சபித்தாள். அவன் தேவியின் சாபத்தால் பெருநோய் பிடிக்கப்பட்டான்.
சித்ரேநாமி, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து நோய் நீங்கியது கண்டு சங்கரி மகிழ்ச்சியடந்தாள். ஒருநாள் சிவனும் பார்வதியும் நவரத்தின மணி பீடத்தில் தேவாதி தேவர்கள், நாரதாதி மகரிஷிகள், குபேரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள், பூதகணங்கள் புடைசூழ எழுந்தருளியிருந்தனர். வரலட்சுமி விரத மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி, பார்வதி பரமேசுவரனிடம், “சுவாமி! வரலட்சுமி மகிமை அனைவரும் அறியும் வண்ணம் தேவரீர் திருவாள் மலர்ந்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
சர்வேசுவரனான சிவபெருமான், வரலட்சுமி விரத மகிமையை அனைவருக்கும் விளக்கமாக கூறினார். இங்ஙனம் சிவனருளால் சங்கரியும் மற்ற தேவர்களும் கேட்டு மகிழ்ந்த வரலட்சுமி விரத வைபவத்தை எல்லோரும்  கடைபிடித்து நற்பலன் அடைந்தனர். விரதங்களுள் உத்தமமான வரலட்சுமி விரதம் சகல சௌபாக்கியங்களையும் தருவது. புத்ர பௌத்ராதி அபிவிருத்திகளை ஏற்படுத்தும்படியான மகா சிரேஷ்டமான விரதம்.
இந்த விரதத்தை கடைபிடித்து சாபம் நிவர்த்தி பெற்ற சித்ரநேமியைப் போல் சாருமதி என்ற மற்றொரு பெண்ணும் வரலட்சுமி விரத மகிமையால் சகல சௌபாக்கியங்களையும் பெற்றாள். முன்னாளில் குண்டினி புரம் என்ற ஊரில் சாருமதி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள். இவள் கற்புகடம் பூண்டு ஒழுகி வந்தாள். கணவனையே கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தாள்.
கடவுள் பக்தியும், பெரியோர்களிடம் பணிவும் கொண்ட சாருமதி, எல்லோராலும் பாராட்டப்பட்டாள். இப்பேர்ப்பட்ட நற்குண நங்கையான சாருமதிக்கு சர்வேசுவரனின் கிருபாகடாட்சம் கிடைத்தது. ஒருநாள் இரவு  சாருமதியின் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.. “சாருமதி! சர்வ மங்களம் உண்டாகட்டும். ஆடி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளியில் என்னை பூஜிப்பாயாக! நாள் உனக்கு சகல வரங்களையும் தந்தது அருளுவேன்” திருமகள், சாருமதிக்கு விரதம் கடை பிடிக்கும் முறையையும் அருளினார்கள்.
சாருமதி கனவு கலைந்து எழுந்தாள். திருமகளின் திருவாய் அமுதத்தை எண்ணி சுகானுபவம் கொண்டாள். சாருமதி தேவி திருமகளைச் சிந்தையிலே கொண்டு தோத்திரம் செய்தாள்.
“நமஸ்தே சர்வலோகா நாம் ஜகந்யை புண்யமுர்தயே
சரண்யே த்ரிஜகத் வந்த்யே விஷ்ணு வட்சதலாலய
“ஓம் ஸ்ரீ வரலட்சுமிதேவியே!
தாங்கள் சகல உலகங்களுக்கும் தாயாக எழுந்தருளிரட்சித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
சர்வ ஜனங்களாலும் ஆராதிக்கப்படுகிறீர்கள். ஸ்ரீமந் நாராயணனுடைய வாஸ்து தலத்தில்  வாசம் செய்கிறீர்கள். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ லட்சுமி தேவியே! தங்களை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.” சாருமதி தேவியின் அருள்வாக்கின்படி ஆடியில் தவமிருந்தாள். தோத்திரங்களால் திருமகளின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்தாள்.  ஆயிரத்து எட்டு நாமாக்களால் அலங்காரம் செய்தாள்.
வரலட்சுமி பிரத்யலட்மாகி சாருமதிக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் வழங்கினார். சாருமதி வரலட்சுமி விரத மகிமையை மற்றவர்களுக்கும் சொன்னாள். எல்லோரும் ஒன்று சேர்ந்து வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, கலசம் வைத்து கலசத்துள் ஸ்ரீ லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கினார்.
சாருமதியும் தோழியர்களும் ஸ்ரீலட்சுமி தேவியை பூஜித்தார்கள். வரலட்சுமி தேவியின் பேர் அருளால் அனைவரும் பெரும் பேறு பெற்றனர். வரலட்சுமி விரதத்தை ஆரம்பித்து வைத்த சாருமதியை புகழ்ந்து போற்றினர். இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார். விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்றனர்.
ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் “நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்” என்பது சான்றோர் வாக்கு! செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்கும் பிராட்டியாரை சுபலட்சுமி என்றும் ஸ்ரீதேவி என்னும் போற்றி வணங்குவார்.
வரலட்சுமி விரதத்தை அப்பண்டிகை தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட வேண்டும். விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும். கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இட வேண்டும்.
கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.
பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும். இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான்.
நம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்ட லட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.
இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.
கிரக தோஷம் நீங்க
கந்தரந்தாதி (48-வது திருப்பாடல்)
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்
கிரக தோஷம் நீங்கசேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.
இந்த இரு பாடல்களும் கிரக தோஷம் நீக்கி,
கோளாறு பதிகம் போன்று பயன் அளிக்க வல்லது.
சனி தோஷம் நீங்க
சனி தோஷம் நீங்க
சாம்பல் நிற ஆடைகளை பயன்படுத்தினால் சனி பாதிப்புகள் நீங்கி சனியின் அருள் பெறலாம். உணவு வகைகளில் இரும்பு சத்துள்ள பழ வகைகள் சாப்பிடலாம். பேரிச்சம் பழம், பலாப்பழம், நாவல் பழம், காய்கறி வகைகளில் சுண்டைக்காய், பீட்ரூட், வெள்ளை பூசணி, (அதிக எணர்ஜி) கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு, அனைத்து கீரை வகைகள் குறிப்பாக முருங்கைக் கீரை சாப்பிடலாம்.
சனிபகவானுக்கு விசேஷமான ரத்தினமாக நீலம் கருதப்படுகிறது. இதில் இந்திர நீலம் மிகவும் உயர்ந்தது. இந்த கல்லை அணிபவர்களுக்கு ஆயுள் செல்வம் அதிக அளவு சேரும். மேலும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தசை தோல் எலும்பு போன்ற உறுப்புகளில் உள்ள கோளாறை நீக்கி நலத்தைக் கொடுக்கக் கூடியது.
இவற்றுக்கு மேலாக கண்பார்வையற்றவர், ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல், ஜீவ ராசிகளுக்கு விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும், உணவு இடுதல் போன்றவற்றை செய்து வந்தால் சனியின் பரிபூரண கருணையை பெறலாம்.  சனி கிரகத்தை நட்பு உணர்வோடு கலந்து இடைவிடாமல் தியானம் செய்வோருக்கு நிச்சயமாக நலன்கள் உண்டாகும்.

விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி
விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
விநாயகர் துதி
மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம




வீரமூட்டுகிறார் விவேகானந்தர்
* தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் ஒரு நாட்டின் நிலையும் உயரும். உயர்வதற்கான எல்லா ஆற்றலும், உதவியும் நமக்குள்ளே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தால் உயரலாம்.
* நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புங்கள். உள்ளத்தில் உறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றுப் போகும்.
* நம்மால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக சேவை செய்ய மட்டுமே முடியும்.
* எண்ணத்தில் பலமும், உள்ளத்தில் தைரியமும் பெற்றிருப்பவர்கள், உலக நன்மைக்காக தங்களைத் தியாகம் செய்து கொள்வார்கள்.
* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் நோக்கம்.
* மனத்தூய்மை முழுமையாக இருக்குமானால், உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமான வலிமையை நாம் பெற முடியும்.

குடும்பத்தை வளமாக்கும் விரதம் வழிபாடு
குடும்பத்தை வளமாக்கும் விரதம் வழிபாடுதன் குழந்தைகள் நன்றாக இருக்க தாய் ஒருத்தி நோன்பு இருந்து வேண்டிக் கொள்ளும் விரதம்தான் நாகசதுர்த்தி. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
நாகசதுர்த்தி தொடர்பாக வழங்கப்படும் கதை:
 முன்னொரு காலத்தில் ஏழை ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர் முதல் பெண்ணை நல்ல திடகாத்திரமான ஒருவருக்கும், இரண்டாவது பெண்ணை, கை கால்கள் செயல் இழந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
அப்படி ஒரு மாற்றுத்திறனாளியை மணந்த பெண், `தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும், குழந்தை செல்வங்கள் வேண்டும்’ என்று இறைவனை வேண்டினாள். பார்வதியும் பரமேஸ்வரனும் அவள் முன்பு தோன்றி, நாகரை வழிபடுமாறு கூறிச் சென்றனர். அவர்கள் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள்.
அந்தப் பெண் செய்த நாகபூஜையால் அவளது கணவர் நலம் பெற்றார். சில மாதங்களில் அவளும் கருத்தரித்து குழந்தைகள் பெற்றாள். அவர்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஒரு பெண் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மேற்கொள்ளும் இந்த விரதம், அவளது குடும்பத்தை செழிப்படையச் செய்யும்.
ஆவணி ஞாயிறு விரதம்
ஆவணி ஞாயிறு விரதம்ஆவணி மாதம் ஜோதிட சாஸ்திரப்படி சிங்கமாதமாகும் சூரியம் சிங்க ராசியில் பிரவேசிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் வரும் ஞாயிறன்று சூரியனுக்குப் பொங்கல் இட்டு வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விரதமிருந்து சூரியனுக்குப் பொங்கலிட வேண்டும். அது முடியாதவர்கள், முதல் ஞாயிறன்றும் கடைசி ஞாயிறன்றும் பொங்கலிடுவது சிறப்பைத்தரும்.
ஐஸ்வரியம் தரும் சஷ்டி விரதம்
ஐஸ்வரியம் தரும் சஷ்டி விரதம்சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறா னது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
நலந்தரும் நவராத்திரிஉலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபரா சக்திக்குரிய நவராத்திரி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நல்வாழ்வும் நல்வளமும் தந்து எம்மை வாழ வைக்கும் அம்பிகையின் அருள் சுரக்கும் அற்புத விரதம் இந்த நவராத்திரியே.சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி. ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் நோற்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கப்படுகின்றது.பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகின்ற வெற்றித்திருநாள். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே என்ற நோக்கில் இந்த நவராத்திரி நாட்கள் புனிதமும் புண்ணியமும் நிறைந்த மகோன்னத நாளெனக் கருதப்படுகிறது. இந்த நவராத்திரி ஆலயங்களில் மட்டுமன்றி பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள், உற்பத்தி நிறுவனங்கள் என்று இன்னோரன்ன பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த மூன்று சக்திகளுமே, உலகை ஆட்டிப் படைக்கின்றனர். நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் மனித வாழ்க்கையிலே நல்ல தைரிய வீரமும் செல்வமும் கல்வியும் கைவரப் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழலாம். ஆகவே இன்று தொடங்குகின்ற நவராத்திரி மஹோற்சவம் எமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இந்த ஒன்பது நாளும் ஒரு நேர உணவு உபவாசமிருந்து ஆதிபராசக்தியான உமையவளை துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற ஓரொழுங்கில் சக்தி மூர்த்தமாக வழிபட்டு வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுக் கொள்வதே உத்தம மார்க்கமாகும்.சில வீடுகளில் கொலு வைத்து வழிபடும் மரபுமிருந்து வருகின்றது. அழகழகான பொம்மைகளையெல்லாம் மிக்க அழகாக அடுக்கி வைத்து பூஜை வழிபாடுகளியற்றி தோத்திரங்கள் நாமாவளிகளைப் பாராயணஞ் செய்து கும்பிடுவது உத்தமம்.
சில இடங்களில் கன்னிப் பெண்களை அம்பிகை போன்று அலங்காரஞ் செய்தும் மாலைகள் சூட்டி வழிபாடி இயற்றுவதும் சிறந்த நிகழ்வாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழாவில் குமாரி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, சரஸ்வதி என்ற வடிவில் மூர்த்தமென நினைந்து வணங்கி மகிழ்வர். இந்தப் புனிதம் மிக்க புண்ணிய நவராத்திரி நாட்களில் அம்பிகையை போற்றித் துதிக்கின்ற சகல கலாவள்ளி மாலை, அபிராமியந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ் முதலானவற்றை ஓதி மகிழ்வர்.
இந்த நவராத்திரிக்கு மகிஷாசுரமர்த்தனி எனப்படுகின்ற தேவி வழிபாடும் உண்டு. கொடுமைகள் இயற்றிய மகிஷாசுரனைச் சங்கரித்தமையில் அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்தது. புரட்டாதி மாத வளர் பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது நாள் அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியாகும். இந்த நாள் வெற்றித் திருநாள் எனப்படும்.
குழந்தைகளுக்கு ஏடு துவக்குகின்ற வித்தியாரம்பமும் இன்று விஜயதசமி நாளிலேதான் செய்யப்படுகின்றது. இதைத் “தசரா’ என்றும் மானம் பூ எனவும் அழைப்பர். மகாநோன்பு என்பதே மானம் பூ என்று மருவியதாகவும் கருதப்படுகிறது. இந்த விஜயதசமி நன்னாளிலே தொழில் செய்கின்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளிலேதான் வாழைவெட்டு நிகழ்வும் இடம்பெறுகின்றது.
ஆகவே நவராத்திரி விரதம் அனுட்டித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. இன்று தொடங்குகின்ற இவ்விரதத்தினை முறையாக அனுட்டித்து புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்றுய்வோமாக.
 நவராத்திரி விரதம் 
நலந்தரும் நவராத்திரிஉலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபரா சக்திக்குரிய நவராத்திரி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நல்வாழ்வும் நல்வளமும் தந்து எம்மை வாழ வைக்கும் அம்பிகையின் அருள் சுரக்கும் அற்புத விரதம் இந்த நவராத்திரியே.
சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி. ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் நோற்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கப்படுகின்றது.
பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகின்ற வெற்றித்திருநாள். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே என்ற நோக்கில் இந்த நவராத்திரி நாட்கள் புனிதமும் புண்ணியமும் நிறைந்த மகோன்னத நாளெனக் கருதப்படுகிறது. இந்த நவராத்திரி ஆலயங்களில் மட்டுமன்றி பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள், உற்பத்தி நிறுவனங்கள் என்று இன்னோரன்ன பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த மூன்று சக்திகளுமே, உலகை ஆட்டிப் படைக்கின்றனர். நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் மனித வாழ்க்கையிலே நல்ல தைரிய வீரமும் செல்வமும் கல்வியும் கைவரப் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழலாம். ஆகவே இன்று தொடங்குகின்ற நவராத்திரி மஹோற்சவம் எமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இந்த ஒன்பது நாளும் ஒரு நேர உணவு உபவாசமிருந்து ஆதிபராசக்தியான உமையவளை துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற ஓரொழுங்கில் சக்தி மூர்த்தமாக வழிபட்டு வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுக் கொள்வதே உத்தம மார்க்கமாகும்.
சில வீடுகளில் கொலு வைத்து வழிபடும் மரபுமிருந்து வருகின்றது. அழகழகான பொம்மைகளையெல்லாம் மிக்க அழகாக அடுக்கி வைத்து பூஜை வழிபாடுகளியற்றி தோத்திரங்கள் நாமாவளிகளைப் பாராயணஞ் செய்து கும்பிடுவது உத்தமம்.
சில இடங்களில் கன்னிப் பெண்களை அம்பிகை போன்று அலங்காரஞ் செய்தும் மாலைகள் சூட்டி வழிபாடி இயற்றுவதும் சிறந்த நிகழ்வாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழாவில் குமாரி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, சரஸ்வதி என்ற வடிவில் மூர்த்தமென நினைந்து வணங்கி மகிழ்வர். இந்தப் புனிதம் மிக்க புண்ணிய நவராத்திரி நாட்களில் அம்பிகையை போற்றித் துதிக்கின்ற சகல கலாவள்ளி மாலை, அபிராமியந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ் முதலானவற்றை ஓதி மகிழ்வர்.
இந்த நவராத்திரிக்கு மகிஷாசுரமர்த்தனி எனப்படுகின்ற தேவி வழிபாடும் உண்டு. கொடுமைகள் இயற்றிய மகிஷாசுரனைச் சங்கரித்தமையில் அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்தது. புரட்டாதி மாத வளர் பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது நாள் அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியாகும். இந்த நாள் வெற்றித் திருநாள் எனப்படும்.
குழந்தைகளுக்கு ஏடு துவக்குகின்ற வித்தியாரம்பமும் இன்று விஜயதசமி நாளிலேதான் செய்யப்படுகின்றது. இதைத் “தசரா’ என்றும் மானம் பூ எனவும் அழைப்பர். மகாநோன்பு என்பதே மானம் பூ என்று மருவியதாகவும் கருதப்படுகிறது. இந்த விஜயதசமி நன்னாளிலே தொழில் செய்கின்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளிலேதான் வாழைவெட்டு நிகழ்வும் இடம்பெறுகின்றது.
ஆகவே நவராத்திரி விரதம் அனுட்டித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. இன்று தொடங்குகின்ற இவ்விரதத்தினை முறையாக அனுட்டித்து புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்றுய்வோமாக.

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமைபுரட்டாசி மாதம் என்றாலே `ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!’ என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வதுதான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  ஆனால் ஏழுமலையான் எனக்கு உகந்த மாதம் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது மற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.
அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.
இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.
அக்கனவில் வெங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்’ என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.
தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.
உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.
துளசியின் பெருமை:
துளசியை வணங்குவதால் நற்குலம், ஒழுக்கம், மக்கட்பேறு, செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும். துளசி 400 விதமான நோய்களைப் போக்கும் சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை நல்குவது என ஆயுர்வேத நூற்கள் கூறுகின்றன. துளசிச்செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும்.
துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் தான் விரும்பிய மணாளனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும். வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
எப்படி வழிபட வேண்டும்?
 புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும்  பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி  நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச் சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும்  அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.
துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது. பூஜைக்குரிய பொருட்களை முன்னதாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூஜை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்