இன்றைய காலத்தில் பளபளக்கும் விளக்குகளுக்கூடாக பார்த்து, பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் உள்ள குழந்தையை கண்டுபிடிப்பதற்கு எமக்கு உதவுமாறு நாம் கடவுளைக் கோருவோம். உலகம்
முழுவதுமுள்ள அடக்கு முறையாளர்கள் மற்றும் யுத்த வெறியர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்களை கிறிஸ்து வெற்றி கொள்வார் எனவும் தெரிவித்தார்.
கடவுளின் நெருக்கத்தை உணர்வதைத் தடுக்கும் சில தவறான விடயங்கள், அறிவார்ந்த பெருமைகளிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க வேண்டும் எனவும் வறியவர்கள், துன்பப்படுவோர் மற்றும் இடம் பெயர்ந்தோருக்காக விஷேடமாக பிரார்த்திக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Mathagal St. Antony’s Church:
Mathagal St. Sebastian’s Church:
|
சிறிய நாவு,பெரிய பாதிப்பு!
உடனே போதகர், ‘இதைப்போலத்தான் நீங்கள் பேசுகிற வார்த்தைகளை மறுபடியும் பெற முடியாது. அவை காட்டுத் தீயைப் போல பரவி சம்பந்தப்பட்ட நல்ல குடும்பத்தை பிரித்துவிடும்’ என்று ஆலோசனை கூறி அனுப்பினார். நாக்கு, பட்டயத்தைப்போல கூர்மையானது (சங் 64: 3), சர்ப்பத்தை போல விஷமுள்ளது. (சங் 140: 3), வஞ்சனையாகப் பேசும் (சங் 5: 9), காயப்படுத்தும் (சங் 31: 20), சபிக்கும் (ஓசியா 7: 16), அழிக்கும் (சங் 52: 2), பொய் பேசும் (சங் 109: 2). இப்படிப்பட்ட நாவை அடக்க ஒரு மனுஷனாலும் இயலாது. மனுஷர் எல்லா விலங்குகளையும் அடக்குகிறார்கள். ஆனால் தன் நாவை அடக்க முடிவதில்லை. இரட்சிப்பு மட்டுமே அவனுடைய நாவின் பேச்சு வழக்குகளைக் கட்டுப்படுத்துகிறது. (2 கொரி 5: 17&18)
நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி (நீதி 10: 20), தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். (நீதி 21: 23), மனுஷருடைய இருதயத்தில் உள்ளதை நாவு பேசும். (மத் 12: 33&37). நாவை நம்மால் கட்டுப்
படுத்த முடியாது. தேவனை துதிக்கிற அதே நாவு மனுஷனை சபிக்கிறது. (யாக் 3: 9) இதை தேவன் விரும்புவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அநேகர் தன்னுடைய நாவின் மூலமாகவே பெரிய பிரச்னைகளை சந்திக்கின்றனர். சிறிய உறுப்பாகிய இந்த நாவு பெரிய உறவையே பாதிக்கும் ஆற்றல் உள்ளது. ஆகவே நாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உள்ளது. அவரிடம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும்போது நாம் எதை, எப்பொழுது, எப்படி பேச வேண்டுமென்பதை நமக்கு போதிப்பார். நம் பாதம் கல்லில் இடறாதபடி அவர் நம்மை நடத்துவார். நம் வாயோடு வாயாய் அவர் பேசி சமாதானத்தையும், அற்புதங்களையும் நடப்பிப்பார்.
& பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன்
கடவுளுடைய தீர்ப்புக்கே அஞ்சுவோம்
காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமைப்பட்டிருக்கிறது.
பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டை கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறி கெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்து விடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்து பெறுகிறது.
கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. இவ்வாறு இருத்தலாகாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும், உவர் நீரும் சுரக்குமா? அத்திமரம் ஒலிவப் பழங்களையும் திராட்சைச்செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உப்புநீர் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது’’
& (யாக்கோபு 3: 2&12)
மனித வாழ்க்கையில் சகலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கால அளவுகளுக்கேற்ப எல்லாம் நடந்தபடி இருக்கின்றன. எல்லாமே முறைப்படுத்தப்பட்டுள்ளமையால், அடுத்த நிமிடத்தில் நமக்கு என்ன நேரும் என்பது நமக்குத் தெரியாது. இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை, வீணான வார்த்தைகளைப்பேசி, மற்றவர்களின் நிம்மதியை சீர்குலைத்து உருப்படியில்லாத செயல்பாடற்ற தன்மையால் காலத்தை வீணடிக்கிறோம். எதற்காக நமக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டது? அந்த வாழ்க்கையின் பயனை அனுபவித்து அல்லல்படுவோர்க்கு ஆறுதல் அளித்து, இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து, இன்பமுடன் வாழ்வதை விடுத்து, வஞ்சகம், பொறாமை, பிறரை அவமதித்து அடக்கி ஆளும் தன்மையினால் சஞ்சலத்துக்குள்ளாகி மனதை அலைபாய விட்டு நோயில் வீழ்வானேன்?
நம்மால் கூடிய மட்டும் வக்கணைப் பேச்சைக் குறைத்துக்கொள்வோம். ஏனெனில் நம் பேச்சில் தொனிக்கும் வார்த்தைகள் மற்றவர் கருத்துக்கு இடையூறாகத் தோன்றும். அதனால் நம் வார்த்தை நம்மைக் கறைப்படுத்தும். அமைதியுடன் இருந்தாலே அனைத்தும் நலமாகும். நமது பேச்சில் ஒரு குற்றமும் இல்லாத போதிலும் நாம் பேசுவது குற்றம் எனக் கூறுபவர்களின் முன்னே நாம் ஏன் பேச ஆசைப்பட
வேண்டும்?
‘‘தீங்கு புரிவோர் தீங்கு புரிந்துகொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்’’ & (திருவெளிப்பாடு 22: 11)
பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவர், தன் ஆன்மாவைக் காயப்படுத்துகிறார். அநியாயமாய் பிறர்மீது பழி கூறி, அதிகாரத்தை அபகரித்துக் கொள்பவர், பகைக்கப்படுவார். தீநெறியாளனான மனிதனுக்கு தீமைகளில் வெற்றியுண்டு; அந்த
வெற்றியே அவனுக்குக் கேடாகும்.
பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண். வெட்டி விற்றால் நிறைய காசு பார்க்கலாமே என்று நினைத்தான். அதற்கு என்ன
செய்வதென்று யோசித்தான். ஒரு யோசனை தோன்றியது. பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்றான். ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த மரம் வீட்டு வாசலருகே இருந்தால், குடும்பத்தில் கஷ்டமாகுமாம்’’ என்றான்.
‘‘அப்படியா?’’ கொஞ்சம் ஆச்சரியமாய்க் கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன். பிறகு யோசித்துப் பார்த்தான். அவன் வாழ்க்கையில் சாதாரணமாய் நடந்த விஷயங்கள்கூட கஷ்டங்களாய்த் தெரிந்தன.
‘‘அந்த மரத்தை வெட்டிப் போட்டுவிட்டால் உன் கஷ்டங்களெல்லாம் விலகிவிடும்’’ என்று மேலும் தூண்டினான் முதலாமவன்.
மரத்துச் சொந்தக்காரன் சம்மதிக்க, காரியங்கள் வேகமாய் நடந்தது. மரம் வெட்டப்பட்டது. வெட்டிய மரத்தை அவனே எடுத்துக்கொண்டு போனான். கடையில் எடைக்குப் போட்டான். நல்ல காசு கிடைத்தது. அறிவுரையைக் கேட்டவனின் கஷ்டம் தீரவில்லை. அறிவுரையைக் கொடுத்தவனின் பணக்கஷ்டம் தீர்ந்தது.
அறிவுரைகளை மட்டும் பார்க்கக் கூடாது. அந்த அறிவுரையை யார், எதற்காகச் சொல்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.சிலர் கடவுளுடைய தீர்ப்புக்கு அஞ்சுவதைவிட, மனிதர்களின் தீர்ப்புக்கு அஞ்சுகிறார்கள். மனிதரால் எதிர்பாராமல் கிடைக்கும் தீர்ப்பு, மனிதர்களைப் பெரும் அவதிக்கு ஆளாக்குகின்றன. ஆராயாமல் அவசரமாய், தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற முயலும் தீர்ப்பாக மாறி விடுகின்றது. இதனால் பாதிக்கப்படுபவர் நிலை என்ன என்பதை தீர்ப்பிட்டவர் நினைத்துப் பார்ப்பதில்லை.
மூடனுக்கு நண்பன் இல்லை. பொய்யான நாவினால் வரும் கேடு, உயரே இருந்து கட்டாந்
தரையில் விழுகிறவனுக்கு ஒத்தது. இவ்வாறே தீயோருடைய அழிவு வெகுவிரைவில் வரும். நீதியை நிறைவேற்றுகிறவன் உயர்த்தப்படுவான். பெரியோருக்குப் பிரியப்படுகிறவன் அக்கிரமத்தைத் தவிர்ப்பான்.&மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ
பிரச்னையே இல்லாதவர்கள்
துன்பம் நம்மை விழிப்புடையவர்களாக்குகிறது. துன்பமோ, இடையூறோ நம் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அன்று. மாறாக, நம்மை வலிமை மிக்கவராக மாற்ற உதவுகிறது. நம் வாழ்க்கைப் பாதையில் விரவிக்கிடக்கும் இடையூறுகள் நமக்கு ஓர் அழைப்பாக, நினைப்பூட்டும் கருவியாக, ஒரு சவாலாக, ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
வாழ்நாள்கள் சொற்பமானவை; கெடுதலானவை; துன்பமும் கவலையும் நிறைந்தவை. மனிதன் ஆசைக்கடலில் வீழ்ந்து, ஆனந்த வலையின் ஆசாபாசக் கண்ணிகளில் சிக்கி, மீண்டுவர முடியாமல் திணறித் தவித்து அலைக்கழிக்கப்படுகிறான். விநோதங்கள் பலவற்றால் இழுக்கப்படுகிறான். வீண் காரியங்களில் தலையிட்டு குற்றங்களால் வளைத்துக் கொள்ளப்படுகிறான். முயற்சி இல்லாமல் முடங்கிப் போகிறான். சோதனைகளில் ஆழ்த்தப்படுகிறான். இன்பத்தால் பலனற்றுப் போகிறான். துன்பத்தால் துவண்டு போகிறான்.
‘‘எனக்கு நிறையப் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கிறது. என்ன செய்யறதுன்னு தெரியலை’’ என்றான் ஒருவன் தன் நண்பரிடம்.
‘‘எனக்கும் அப்படித்தான் பிரச்னைகள் நிறைய இருக்கு. எப்படி சமாளிக்கிறதுனு தெரியலை. பிரச்னை இல்லாம இருக்கிறதுக்கு யாராவது வழிசொன்னா நல்லா இருக்கும்’’ என்றான் நண்பன். இருவரும் சேர்ந்து ஒரு குருவிடம் சென்றார்கள்.‘‘குருவே, எங்க வாழ்க்கையில ஒரே பிரச்னையா இருக்கு. நாங்க பிரச்னை இல்லாத மனிதர்களா இருக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க’’ என்றார்கள்.குரு சிரித்தார். கொஞ்சம் யோசித்தார்.‘‘என்னுடன் வாருங்கள், உங்களுக்குப் பிரச்னை இல்லாத இடத்தையும் மனிதர்களையும் காட்டுகிறேன்,’’ என்று சொல்லி அழைத்துப் போனார்.
அவர் போன இடம் ஒரு கல்லறைத் தோட்டம். சமாதிகளாய் இருந்தன. ‘‘இந்த இடத்தில் இந்த கல்லறைகளுக்குள் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பிரச்னையே கிடையாது. இப்படி இருக்க உங்களுக்கு விருப்பமா?’’ என்று கேட்டார். நண்பர்கள் இருவரும் பதில் பேசாமல் திரும்பி விட்டார்கள். உலகில் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது.
யார் அதிக பாக்கியவான்? துன்ப துயரங்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்கிறவனே பாக்கியவான். எண்ணற்ற செல்வங்கள் ஏராளமாய் அடைந்திருப்பதில் மனிதனுடைய பாக்கியம் அடங்கி இருப்பதில்லை. கொஞ்சமாய், தேவைக்கேற்ப வைத்திருப்பதே போதுமானது. வருத்தப்பட்டு துன்பம் அனுபவிக்கும் காலம்தான் நாம் பலன் அடையக்கூடிய காலம். பலவீனமான மனதைப் பெற்றிருக்கிற வரையில், பாவத்தோடும் துன்பத் துயரத்தோடும் வாழ்வது இயல்பே. இந்
நிலையிலிருந்து விடுதலையாக மாட்டோமா என ஆவலாய் இருக்கிறோம். ஆனால் பாவத்தின் பொருட்டு நாம் பரிசுத்த தன்மையை இழந்து
விட்டதால், மெய்யான பாக்கியத்தை இழந்து போவோம்.
‘‘அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராத
படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால், நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!
‘‘எனவே நான் சொல்கிறேன், தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை, கெட்ட நடத்தை, காமவெறி, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கோஷ்டி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதையே இப்போது மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும், இச்சைகளோடும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலே நடக்க முயலுவோம். வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கொருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக’’ & (கலாத்தியர் 5: 13&26)&மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ
விசுவாசம் கொண்டால் நின்ற சுவாசமும் மீளும்
போனாள்’ என்று கூறினான்.
அந்த இடத்தில் நாமாக இருந்தால் நம் மனம் என்ன பாடு படும், யோசித்துப் பாருங்கள். ஆனால் யவீருவோ ‘‘என் மகள் மரித்துப் போனாள். ஆகிலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் பிழைப்பாள்’’ என்று விசுவாசமுள்ளவனாய் இயேசுவை அழைக்கிறான்.
இத்தகையதொரு அற்புதம் நடக்க என்ன காரணம்? யவீரு ஜெப ஆலயத்தில் தலைவனாக இருந்தும், இயேசுவின் பாதத்தில் விழுந்தானே, அதுதான். இன்றைக்கு நாம் யாருடைய பாதத்தில் விழுந்து கிடக்கிறோம்? மருத்துவரின் பாதத்திலா, முதலாளியின் பாதத்திலா? அதைத் தவிர்த்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து ஜெபித்தால், தேவன் அற்புதம் செய்வார். மனிதனால் கூடாதது தேவனால் கூடும். யவீருக்குள் நீக்க முடியாத ஒரு விசுவாசம் காணப்பட்டது. தேவனால் மரித்துவிட்ட தன் மகளை உயிரோடு எழுப்ப முடியுமென விசுவாசித்தான். அவன் மனிதனை நம்பவில்லை. தன் நம்பிக்கையை தேவன் மேல் வைத்தான். தேவன், அவன் விசுவாசத்தை கண்டு மகளை உயிர்ப்பித்தார். நம் விசுவாசம் எங்கேயிருக்கிறது? முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைப்போம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று வேதம் (ஆபகூக் 2: 4) கூறுகிறது. இறை விசுவாசம்,
பல அற்புதங்களை நிகழ்த்தவல்லது & பரமன்குறிச்சி
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா நிறைவுபெற்றது
பின் விழாவையொட்டி நாள்தோறும் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை பேராலய கீழ்கோவில் மற்றும் மேற்கோவிலில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் 8 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. பெரித்தேரில் ஆரோக்கிய மாதா சொரூபமும், பின் தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியர், ஆரோக்கிய மாதா ஆகியோரின் தசாரூபம், கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக வந்து பேராலய முகப்பை அடைந்தது.
விழாவில் ஆயிரக்கனக்காக பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் பவனியை கண்டு ரசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. பெரியத்தேரில் ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரியத்தேர் பவனி நடைபெற்றது. மேலும் புனித வளனார், மிக்கேல், சம்மன்சு, செபஸ்தியர், அந்தோனியர் சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் 6 சிறிய சப்பரங்களில் எழுந்தருளி கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரைசாலை வழியாக ஊர்வலமாக வந்து பெரிய தேர் மற்றும் 6 சிறிய சப்பரங்கள் என 7 தேர் பேராலய முகப்பை வந்தடைந்தது. முன்னதாக மாலை 5.15 மணி அளவில் பேராலய கலை அரங்கில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
இதனைதொடர்ந்து நேற்று ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
ஜெபிக்கப் பழகுவோம்
இன்றைக்கு பலர் பரிசேயனைப்போல சாதுரிய வார்த்தைகளால் பெருமையோடு ஜெபிப்பார்கள். இருதயத்தில் பெருமையுள்ளவனை கர்த்தர் அருவெறுக்கிறார். ஆனால் இருதயத் தாழ்ச்சியுள்ளவனையே கர்த்தர் நோக்குகிறார். ஆயக்காரனுடைய எளிமையான, தாழ்மையான உள்ளம் மேற்கொள்ளும் ஜெபத்தை கர்த்தர் அங்கீகரித்து நீதிமானாக்கினார். தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். இதுதான் இயேசு கிறிஸ்துவின் உபதேசம். பரிசேயன் பாவம் செய்யாதவன்தான். ஆனாலும் அவனுடைய பெருமை அவனை நீதி
மானாக மாற தடை செய்தது.
இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்? பரிசேயனைப்போல சுய நீதியில் சார்ந்திருக்கிறோமா? நம்முடைய தாலந்துகள் நம்முடைய பெயரை பல பத்திரிகையில் கொண்டு வரலாம். தேவ கிருபை இல்லையேல் நம்முடைய பெயரை ஜீவ புத்தகத்தில் காண முடியாது. ஆகவே பெருமை வேண்டாம். பொறாமை வேண்டாம். தேவ கிருபையே போதும் என்ற நிலையில் வந்து ஜெபிக்க பழகிக் கொள்வோம்.
& பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன்
யார் பலசாலி?
இவ்வுலகில் சர்வ வல்லமையும், மகா பலமுள்ளவர் இயேசு. தாவீது என்னும் பக்தன் தேவனை சொந்தமாக்கிக் கொண்டான். இதனால் (2 சாமு 3:1) தேவன் அவரை பலத்தால் இடைகட்டினார்; அதேபோல (சங் 18: 32) கோலியாத் என்னும் பலசாலி சவுல் ராஜாவின் ராஜ்ஜியத்தையே பயமுறுத்திக் கொண்டிருந்தான். அவனை எதிர்க்க ஒருவனும் இல்லை. ஆனால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதோ எவ்வித ஆயுதமும் இல்லாமல் சாதாரண கூழாங்கல்லை வைத்து கோலியாத்தை முறியடித்தான். இது இவரால் எப்படி முடிந்தது? தேவன் பலம் மிக்கவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.
நாமும் சாதாரண நபர்கள் அல்ல. நமக்குள் பலமுள்ளவர் இருக்கிறார். இந்த உலகம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. பிசாசின் தந்திரங்கள் நம்மிடம் பலிக்காது. தேவன், சோர்ந்து போகிறவனுக்கு பலம் கொடுப்பார் (ஏசாயா 40: 29). கர்த்தருக்கு காத்திருப்போர் புது பலனை பெற்றுக்கொள்வார்கள் (ஏசாயா 40: 31). கர்த்தர் நமக்கு அடைக்கலமும் பலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவராக இருப்பாராக (சங்கீதம் 46: 1)
& பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன்
எப்போதும் துதிப்போம்
ஒரு அரசவையிலே புலவர் ஒருவர் இருந்தார். அவர் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. ராஜாவிடத்தில் கேட்க பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது. என்ன செய்வதென்றே அவருக்கு புரியவில்லை. மனைவி, பிள்ளைகள் எல்லாரும் பசியால் வாடுகின்றனர். தண்ணீர்தான் ஆகாரமாக இருந்தது. இப்படியே நாட்கள் சென்றன. புலவருக்கு ஒரு யோசனை புலப்பட்டது. அதன்படி மன்னரைப் புகழ்ந்து பாடத் தீர்மானித்துக் கொண்டார். ராஜா அரண்மனைக்குள் நுழைந்ததும் அதேபோல பாடத் தொடங்கினார். ராஜாவின் உள்ளம் பூரித்தது. உடனே, புலவரை அருகே அழைத்து அவருக்கு 1000 பொற்காசுகள் கொடுத்தார்; அவர் வறுமையைப் போக்கினார்.
இதைப்போலத்தான் இயேசு கிறிஸ்துவை, அவர் செய்த நன்மைகளை எண்ணி அவருக்கு நாம் நன்றி சொல்லும்போது, அவரை துதித்து மகிமைப்படுத்தும்போது, நம்முடைய குறைகளையும் நிறைவாக்குவார். துரத்திவிடப்பட்ட சூழ்நிலையில், செய்வதறியாது திகைக்கும் நேரத்தில், பக்தனாகிய தாவீது, ‘கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும்’ என்று சொல்கிறார். கர்த்தரை எப்பொழுதும் துதிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பது சிந்தனைக்குரியது. வருத்தமாயிருக்கும் நேரங்களிலும் சந்தோஷமாயிருக்கும் நேரங்களிலும்கூட தேவனை துதிக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் அநேகர் நன்றாய் இருக்கும்போது அதாவது சந்தோஷமாயிருக்கும்போது மாத்திரம் துதிக்கின்றனர். இன்னும் சிலர் ஆலயங்களுக்கு வரும்போது இயேசுவை துதிக்கின்றனர். வீட்டிற்கு
சென்றவுடன் துதிப்பதை நிறுத்தி விடுகின்றனர். கண்ணீரின் நேரத்திலும் பாடுகளின் நேரத்திலும் துதிப்பதே உண்மையான துதியாகும். தாவீது பாடுகளின் நேரத்திலும் சந்தோஷமான நேரத்திலும் தேவனை துதித்து பழகியிருந்தார். (சங். 34: 1).
கிறிஸ்துவின் நிமித்தம் சிறைச்
சாலையில் கட்டப்பட்டிருக்கும் பவுலும் சீலாவும் அந்த துயரத்தை எண்ணி கவலைப்படவில்லை. மாறாக ஜெபத்தோடு தேவனை துதித்து பாடினார்கள். (அப். 16: 25) அந்த மகிமையாலேயே விடுதலையாக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து தேவனை துதித்தார்கள். எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது. தேவனை துதிக்கும் எந்த ஒரு நபரும் வெட்கப்பட்டு, தோல்வியடைந்ததாகச் சரித்திரமே இல்லை. நாமும் எப்பொழுதும் தேவனை துதிப்போம். அற்புதங்களை பெறுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்